புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, February 27, 2007

ஆக்கமும் நானே அழிவும் நானே

என் ராசி தான்னு நினைக்கிறேன், எந்த company-ல நான் சேந்தாலும் 2 இல்ல 3 வருஷத்துல அந்த company ஒரு stagnant state-க்கு போயிடும். இல்ல அந்த company ரொம்ப பெருசா இருந்தா நான் இருக்கிற division stagnant state-க்கு போயிடும். நிறைய வேலை இருக்குன்னு என்னை hire பண்ணுவாங்க, ஆனா அப்படியே வேலை படி படியா கொறைஞ்சு கொஞ்ச நாள்ள எல்லாரும் ஆணி பிடுங்க வேண்டியது தான்.. ஆனா நான் company-a விட்ட அடுத்த நாள்ள இருந்து project அப்படியே குவியும்..

First, college முடிச்சி ஒரு சின்ன company-ல சேந்தேன், ஒரு மூணு மாசம் நல்ல வேலை இருந்துது.. அப்புறம் ஆணி பிடுங்க சொல்லிட்டாங்க.. நானும் கஷ்ட பட்டு ஒரு வருஷம் ஆணி பிடிங்கி பாத்தேன்.. வேலைக்காகல..எவ்வளவு நாள் தான் ஆணி பிடுங்கறது.. escape-னு அடுத்த ccompany-க்கு போனேன். ஆனா பாருங்க, நான் வெளிய வந்த நேரம், company-க்கு ஒரு புது CEO US-ல இருந்து வந்தார், company-அ professional-ஆ மாத்தினார், எல்லாரும் US போயிட்டு வந்தாங்க, அப்படி இப்படின்னு company range-எ மாறி போச்சு.

சரி வெளிய வந்தாச்சு, இனிமே புலம்பி பயன் இல்லைன்னு, புது company-ல நல்லா வேலை பண்ணேன். நிறைய கத்துகிட்டேன், நிறைய கத்து கொடுத்தேன் (எப்படி ஆணி பிடுங்கறதுன்னு, நமக்கு தான் நிறைய experience ஆச்சே he he :) ). சின்னதா 3 onsite ட்ரிப் கூட கிடைச்சுது. ஆகா நல்லா போகுதேன்னு சந்தோஷ பட்டு முடிக்க கூட இல்ல, US-ல இருந்து ஒரு company இந்த comapny-அ வாங்கிட்டாங்க. அப்புறம் என்ன, திரும்பி ஆணி பிடுங்குன்னு சொல்லிட்டங்க. இதெல்லாம் அரசியல்ல சகஜம்னு நானும் ஒரு 6 மாசம் ஆணி பிடிங்கிட்டு இருந்தேன். ரொம்ப வெறுத்து போயி போங்கடா நீஙளும் உங்க ஆணியும்னு 3-வது company-க்கு escape. ஆனா முதல்ல நடந்த மாதிரியே, இங்கேயும் US company நிறைய project கொடுக்க ஆரம்பிசிட்டாங்க. நம்ம நண்பர்கள் எல்லாம் நாடாறு மாசம் காடாறு மாசம் மாதிரி US 3 மாசம், இந்தியா 3 மாசம்னு enjoy பண்ணாங்க.. (வயித்தெரிச்சல்... எல்லாம் நேரக் கொடுமை... Grrrrr..).

OK.. அரசியல்னாலே இப்படி தான்னு, நானும் பொறுப்பா 3-வது company-ல உயிர கொடுத்து வேலை பண்ணிட்ருந்தேன். ஆன சும்மவா சொன்னாங்க முதல் கோணல் முற்றும் கோணல்னு. இங்கேயும் ஒரு 6 மாசம் தான் வேலை இருந்தது. அப்புறம் as usual nail plucking தான். இதுக்கு முன்னாடி ரெண்டு company-உம் product company-ந்ரதால onsite எல்லாமே short duration தான். ஆனா இந்த company service company-ந்ரதால என்னோட damager.. oopps.. manager கிட்ட அழுது அடம் புடிச்சி US விசா வாங்கி வச்சிட்டேன். ஆனா என்ன, நம்ம நேரம் ஒரு ப்ரொஜெcடும் வரல. ஆப்படியே ஒரு வருஷம் ob-யொ ob அடிசிட்ருந்தேன். சம life.. seat-அ தவிர மத்த எல்லா இடத்துலேயும் இருப்போம்.. திருப்பி college போன feeling..office கட் அடிச்சுட்டு cinema போவோம்.. போதா குறைக்கு office-ல gym, evening snacks, free drinks-லாம் வேற உண்டு. நல்லா சாப்ட்டு உடம்பை வேற தேதிட்ருந்தோம். எவன் கண்ணு பட்டுதோ திடீர்னு ஒரு நாள், உனக்கு snacks போட்டு கட்டுபடியாகலை, (நாங்க தான் snacks-யே full meals range-க்கு சாப்பிடுவோம்ல) நீ இங்க கிழிச்சது போதும் போயி client site-ல கிழின்னு சொல்லி US-க்கு என்னை மட்டும் துரத்தி விட்டாங்க.

client site வந்தா வேலைனா வேலை பென்ட் கழட்டிடாங்க. சனி ஞாயிறு கூட 12 மணி நேரம் வேலை பண்ண சொல்லிட்டாங்க படு பாவிங்க. ரொம்ப நாளா வேலை வேற பண்ணலையா மூளையெல்லம் துரு புடிச்சிடுச்சு.. ரொம்ப கஷ்ட பட்டுட்டேன்.. அப்புறம் ஒரு வழியா துரு எல்லாம் துடைச்சி பாலிஷ் பண்ணி செட்டில் ஆகலாம்னு பாத்தா...

அதே தான்..நம்ம ராசி work out அயிடுச்சி.. off-shore-ல ப்ரொஜெcட் நிறைய வர அரம்பிச்சிடிச்சி.. என்னோட ஆணி பிடுங்கிட்டுருந்த எவனை கேட்டலும், "ஆணியா? அப்ப்டின்னா??" னு கேக்கறாங்க. எல்லாம் நேரம் தான், ஆணியே சரியா பிடுங்க தெரியாது, இந்த லட்சணத்துல இந்த நக்கல் வேற. எல்லாரும் நல்லா இருந்தா சரின்னு நெனைச்சா இங்க onsite-ல ஆட்டம் காணுது. இங்க இப்போ ஆணி பிடுங்க சொல்லிட்டங்க.. பாப்போம் இங்க எவ்ளோ நாளைக்கு தான் ஆணி பிடுங்குவோம்னு.

அதனால தான் சொல்றேன், ஆக்கமும் நானே அழிவும் நானே. Company-ல சேந்தா அழிவு, விட்டா ஆக்கம். கடவுள் மாதிரி ஆயிட்டேன். :)

-S

(நினைப்பு தான் பொழைப்பை கெடுக்குதாம்)
posted by ACE !! at 11:19 PM

2 Comments:

Admire your humourous writing skill, read many of your posts, cudnt commment in all the posts...sorry,
Intha post ku than comment yey illa, atheppadi comments illama intha post thappichu????

[ so ingey en comments potutein]

Romba nalla ezhuthureenga, keep blogging more

September 4, 2007 at 11:30 PM  

இந்த ராசி நமக்கு மட்டும் தான் உண்டோனு ரொம்ப நாள் நினைத்தது உண்டு, இப்ப தான் கூட துணை சேர்ந்திருக்குனு திருப்தி.

பிரமாதம் எழுதி கலக்குங்க.

தருமி பக் பிரமாதம், படித்துவிட்டு மிகவும் ரசித்தேன்

November 21, 2007 at 6:32 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home