புலம்பல்கள் - PULAMBALGAL

Friday, March 30, 2007

வியர்டா?? நானா?? அட... ஆமா..

நாட்ல எவ்வளவு விஷயம் இருக்கு பேச, எழுத, ஆனா பாருங்க நம்ம மக்கள்ஸ் எல்லாம், நீ வியர்ட்னு நீயே சர்டிபிகேட் கொடுத்துக்கோன்னு தான் கேக்கறாங்க.. ஏற்கனவே, கார் திருடன்ல இருந்து ஓட்டல் வெயிட்டர் வரைக்கும் எல்லாரும் நம்மள ஒரு ரேஞ்சா தான் பாக்கறாங்க.. இதுல நான் வியர்ட்னு நானே சர்டிபை பண்ணனும்னா...... இதெல்லாம் ஆவரதில்லை..

ஒரு GK கேள்வி : எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா??

சரி, விஷயத்துக்கு வருவோம்.. தம்பி பரணியின் ஆணைக்கு அடிபணிந்து இந்த tag உலக கடலில் அடியேனும் சங்கமிக்கிறேன்..

1. வெண்டைக்காய் ஃபோபியா:

நாமெல்லாம், பசிக்கு புசிக்கற ஆளு.. ருசிக்கு புசிக்கறதெல்லாம் கம்மி தான். என்ன குப்பைய கொடுத்தாலும், சுவைச்சு பாத்து நாக்கு OK சொன்னா போதும், ஸ்வாகா தான். நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. direct attack தான்.. சில சமயம் நாக்கு OK சொல்லலனாலும், ஒரு தட்டு தட்டி சாப்பிட வச்சிடுவேன்.. (எங்க அம்மா சொன்ன சித்திரகுப்தன் கதையோட effect :( )

இந்த குணத்தால, கொரியா போன போது மத்தவங்க மாதிரி சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டபடவே இல்லை.. "என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"ன்னு கொரிய நண்பர்கள் பீல் பண்ண கதையெல்லாம் நடந்திருக்கு.. (மனசாட்சி : கொஞ்சம் சாத்திகிட்டு மேட்டருக்கு வா!!) சரி சரி,

இப்படி எந்த குப்பையும் சாப்பிடற என்னால, வெண்டைக்காய் மட்டும் சாப்பிட முடியாது.. சாம பேத தான் தண்டம் எல்லாம் வீட்டுல உபயோகிச்சும் வெண்டைக்காய் மட்டும் உள்ள போகவே போகாது... மீறி போனா, உள்ள இருக்க எல்லாரும் வெளியே வந்துடுவாங்க...

2. புதியவர்களிடம் போனில் பேச பயம்:

நமக்கு அறிமுகமே இல்லாத ஆள் கிட்ட போன்ல பேசறதுன்னா உதறல் தான். என்னவோ முகம் பாத்து பேசலனா நாக்கு எழவே எழாது.. அட்லீஸ்ட் chat /e-mail பண்ணியிருந்தா OK. யாருன்னே தெரியாத ஆளுங்க கிட்ட பேசறதெல்லாம் கஷ்டம். இந்த குணத்தால, என்ன பிரச்சனை வந்தாலும் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் பண்ண மாட்டேன்.. முடிஞ்ச அளவு emailலயே முடிக்க முயற்சி பண்ணுவேன்..வேற வழி இல்லனா, ரொம்ப யோசனை பண்ணிட்டு, ஒரு சில நாள் தள்ளி தான் போன் பண்ணுவேன்.

3. அமைதியின்மை (restlessness/hyperactive)

நம்மாள ஒரு 5 நிமிஷம் சும்மா உக்கார முடியாது.. எதாவது செஞ்சுகிட்டே இருக்கனும்... இல்லேனா பைத்தியமே பிடிச்சிடும்.. (இனிமே தானான்னு கேக்கபடாது). இதனால, யாராவது சொன்ன நேரத்துக்கு வராம ஒரு 10 நிமிஷம் லேட் பண்ணாலும், அந்த 10 நிமிஷத்துல 5 தடவயாவது போன் பண்ணிடுவேன்.. அது மட்டும் இல்ல, பாட்டெல்லாம் கேக்கும் போது, வெறும் பல்லவி மட்டும் தான் கேப்பேன்.. அது முடியருதுக்குள்ள, வேற உலகத்துல சுத்திட்டு இருப்பேன்.. ஒரே பாட்ட, ஒரு 30 தடவை கேட்டா தான், ஒரு தடவையாவது முழுசா கேட்டிருப்பேன்.. அவசர கதில முடிவெடுத்துட்டு பின்னால புலம்பரது ரெகுலரா நடக்கர ஒரு விஷயம்

அவ்வளவு தாங்க வியர்ட்.. மீதியெல்லாம் நார்மல் தான்..இருந்தாலும் சொல்றேன்..

4. சின்ன மேட்டருக்கு டென்ஷன், பெரிய மேட்டருக்கு நோ டென்ஷன்:

Eg : ஒரு கான்ஸ்டபுள் வந்து லைசென்ஸ் கேக்கற மாதிரி சப்பை மேட்டருக்கு டென்ஷன் ஆயிடுவேன்.. ஆனா பெரிய accident நடந்து ரத்த ஆறு ஓடினாலும் டென்ஷன் ஆக மாட்டேன்..

5. பைக் / கார் வேகமா காட்டுத்தனமா ஓட்டினா கிடைக்கிற போதைக்கு நான் அடிமை. சில சமயம், நண்பர்களோட, ECR ரோட்ல பைக் ரேஸ் பண்ணதெல்லாம் உண்டு.


வேலை முடிஞ்சுது.. ஆனா இன்னும் 5 பேர இழுத்து விடனுமா??.. பரணி.. இதை நீங்களே செஞ்சிடுங்களேன்.. இல்ல யாருன்னு ஐடியாவாவது கொடுங்க ப்ளீஸ்.. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச பேரும், இதெல்லாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்துலயே செஞ்சு முடிச்சிட்டாங்க.. :(

நம்ம தலை கார்த்தி இந்த டேக் பண்ணலைன்னு உளவு துறை மூலமா தகவல் வந்ததால, தலைவர் கார்த்தியை இந்த டேக் செய்யுமாறு அழைக்கிறேன்.. :))

Labels: ,

posted by ACE !! at 7:42 PM 79 comments

Tuesday, March 27, 2007

கல்லூரிச் சாலை....

முன் குறிப்பு : மொக்கை படிக்க விருப்பமில்லாதவர்கள் நேரே கீழே "COLLEGE"க்கு செல்லவும். :) :) :)

காலைல 5 மணிக்கு அலாரம் அடிச்சுது.. இன்றைய நாளும் வாழ்வில் ஒரு பொன்நாளேன்னு கிளம்பி ஜிம் போயிட்டு வந்து அரை மணி நேரம் குளியலை முடிச்சேன். அடுத்த அரை மணி நேரம் கண்ணாடி முன்ன நின்னு கஷ்ட பட்டு வீட்ல திட்டு மேல திட்டு வாங்கி வளர்த்த பன்க்-அ (punk) அழகு படுத்திட்டு இருந்தேன். உடனே சகோதரிங்க வேற, பாசத்த பொழிய ஆரம்பிச்சாங்க.."டேய், ரிப்பன் வேணா தரோம், தலயில கட்டி பூ வச்சிகிட்டு போயேன்டா". mmhmmm. காதுல விழலையே.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்னு கண்டுக்கவே இல்லை.

காலையிலயே ஒரு full meals கட்டிட்டு, 1 மாசம் துவைக்காத ஜீன்ஸ், நல்லத ஒரு டி-ஷர்ட், ஒரு காலதில் வெள்ளையா இருந்த ஒரு பழுப்பு ஷூ போட்டுட்டு எப்பவும் போல காலேஜ்க்கு கிளம்பினேன்.. ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காதே.. மீண்டும் சகோதரிகளோட பாசம்.."இந்த ஜீன்ஸும் ஷூவும் போட்டு போனா கார்பரேஷன் குப்பை லாரில அள்ளிட்டு போயிடுவாங்கடா.. ".. வந்த கோவத்த கட்டு படுத்திகிட்டேன்.. இதுக்கே அசந்தா எப்படி..?? இங்கேயே பேசி சக்தி எல்லம் வீணாக்கிட்டா அப்புறம் கடலை போடறது கஷ்டம்.. ஆறு மனமே ஆறுன்னு மனச ஆத்திகிட்டு பஸ் பிடிச்சேன்..

பஸ்ல கடலை சுமாரா நடந்துச்சு.. 1 மணி நேரம் போனதே தெரியல.. தாம்பரம் போய் ஏற்கனவே இருந்த வானர படையோட ஐக்கியம் ஆயாச்சு.. அங்கேந்து அடுத்த பஸ் பிடிச்சு காலேஜ் போகனும்.. அந்த பஸ்ல நம்ம காலேஜ் கூட்டம் மட்டும் தான்.. அதனால footboardலயே தொங்கிட்டு போயிட்டு இருந்தோம்.. கன்டக்டர் "டேய் கீழ விழுந்து என் உயிர எடுக்காதீங்கடா"னு சொன்னதெல்லம் கேட்டுட்டா அப்புறம் எங்க கெளரவம் என்ன ஆகரது?? ஆனா அப்பனு பாத்து ஒரு நல்ல ஃபிகர் பஸ்ல.. இது யாருடா புதுசா, நமக்கு தெரியாம?? data base search ஆரம்பிச்சுது.. கொஞ்ச நேரத்துல search fail ஆயிடுச்சு.. எதாவது 1st year பொண்ணா இருக்கும்.. சரி சரி, கன்டக்டர் சொன்ன மாதிரி கீழ விழுந்தா யார் அந்த ஃபிகர் கூட கடலை போடுவான்னு, நல்லெண்ணத்துல, உள்ள வந்து, அந்த பொண்ணோட, வரலாறு, புவியியல் எல்லாம் வாழ்வியல் தேவைக்காக கேட்டுட்ருந்தேன்......... (database update .. he he)..................

திடீர்னு எழுந்து பாத்தா காலைல மணி 3. அடடா கனவு தானா இவ்வளவும்னு ரொம்ப ஃபீலிங்சா போச்சு. இனிமே இந்த காலேஜ் லைப் வரவே வராதேன்னு செம சோகம்.. அதுக்கப்புறம் எங்க தூங்கறது??. எதாவது பண்ணனுமேன்னு கவிதை எதாவது கிறுக்கலாம்னு யோசிச்சேன்.. இதுக்கு முன்னடி கவிதை கிறுக்கி, வாங்கன பல்பே இன்னும் பியூஸ் போகல.. அதுகுள்ளயானு, மனசாட்சி கேக்க அரம்பிச்சுது.. நியாயமான கேள்வி.. அதனால, இந்த முறை, கிறுக்கல்கள் கிடையாது, but here after only scribbles ya... he he he he (ரொம்ப குழந்தைதனமா இருந்தா மன்னிசிடுங்க )

-----------------------------------------------------------------------
COLLEGE

Live today !!!
and that's for every day
No thoughts of 'morrow
Not the place for any sorrow.

Footboard travels in the bus
'freshing snoozes in the class
Can we forget all those pranks
with loving friends on our flanks

Happy meetings under the tree
with a single cup of tea for three
Beautiful girls to make us drool
But we never felt like a fool

Exams hindered our happy sleep
The marks made our parents weep
A temple, that gave us very good life
For a lucky few, even a wife

Then the time came for us to fly
We all cursed but we did comply!!
We do long for those lovely days
To get them back, are there any ways??


------------------------------------------------------

நக்கீரர்கள் கவனத்திற்கு.. பொருட்குற்றம், சொற்குற்றம், அனைத்தும் வரவேற்கப்படுகிறது.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு, அவர் அவர் இஷ்டம் போல், புளியோதரையோ, ஆப்பிள் ஜூஸோ வழங்கப்படும் :))

அலோ.. இவ்வளவு தூரம் வந்துட்டு சும்மா போனா எப்படி?? இது உங்களுக்கே நியாயமா படுதா?? நான் என்ன ரொம்பவா கேக்க போறேன்.. அவங்க அவங்க வசதிப்படி 1,2 பின்னூட்டம் போட்டுட்டு போங்க.. ப்ளீஸ்

Labels: , ,

posted by ACE !! at 12:17 AM 66 comments

Saturday, March 24, 2007

இனிமே மூக்கால சாப்பிடுங்க...டிஸ்கி: எங்கேயோ கேட்டது... பக்கத்துல இருக்கர படத்தை பாத்ததும் ஞாபகம் வந்துச்சு.. ஆணி வேற ரொம்ப ஜாஸ்தி.. சரி, தூசு தட்டி எடுத்து போட்டுடுவோம்னு தான் ... ஹி ஹி....


-----------------------------------------------------


ஒரு அமேரிக்கன், ஒரு ரஷ்யாகாரன், நம்மாளு ஒருத்தன் பேசிட்டிருந்தாங்க...

அமேரிக்கன் சொன்னான் "டேய், எங்க ஊர்ல ஸ்பெஷல் ஏரோப்பிளேன் வச்சிருக்கோம், அது வானத்த தொட்டுகிட்டு போகும் தெரியுமா??"

மீதி ரெண்டு பேரும் "அப்படியா, வானத்தை தொட்டுட்டு போகுமா??"னு மிட்டாய் கடைய பாத்த என்னைய மாதிரி வாயப் பொளந்துட்டாங்க..

அமேரிக்கன் அதுக்கு "லூசுங்களா, வானத்த தொட்டுகிட்டுனா, வானத்துல இருந்து ஒரு 1 இன்ச் 2 இன்ச் கீழடா"னு விளக்கம் கொடுத்தான்.

இத கேட்ட அப்புறம் ரஷ்யாகாரன் மட்டும் சும்மா இருப்பானா?? அவர் நக்கல்ஸ் "மாப்ளைஸ், எங்க ஊர்ல கூட ஒரு நீர்மூழ்கி கப்பல் வச்சிருக்கோம்.. அது கடலடியில தரைய தொட்டுட்டு போகும்டா.."

இப்போ வாயப் பொளந்தது, நம்மாளும், அமேரிக்கனும் "இன்னாது தரைய தொட்டுகிட்டா??"

"அட கேனயனுங்களா, தரைய தொட்டுகிட்டுனா, தரையில இருந்து 1 இன்ச், 2 இன்ச் மேலடா"னு சப்பை கட்டு கட்டுனது யாருன்னு உங்களுக்கே தெரியும்...

நம்மாளு யோசிச்சான்.. என்னடா சும்மா அலும்பரானுங்கன்னு " போடாங்கோ...இதெல்லாம் மேட்டரா?? நான் சொல்றேன் கேளு.... எங்க ஊர்ல எல்லாரும் மூக்கால தான் சாப்பிடுவாங்க"னு போட்டானே ஒரு போடு.

அவ்ளோ தான், அமேரிக்கனும், ரஷ்யாகாரனும், அரண்டு போயிட்டானுங்க.. "இன்னாப்பா சொல்ற நீ... நெசமாத்தான் சொல்றியா??"னு கேட்டா நம்மாளு என்ன சொன்னான்னு நெனைக்கறீங்க....

அதே தான்... :) :)

"டேய், கோமுட்டி தலயனுங்களா.. மூக்காலன்னா , மூக்குல இருந்து ஒரு இன்ச் கீழடா"ன்னு வச்சானே ஒரு ஆப்பு...

------------------------------------------------------------------------------

நீங்க என்ன பண்ணப்போறீங்கன்னு தெரியும்... அதனால கஷ்டப்பட்டு டைப் அடிச்சு நேரத்தை விரயமாக்க வேண்டாம்.. காப்பியடிச்சு ஒட்டிக்குங்க...

தூ..

(இது ரொம்ப சின்ன பதிவு.. அதனால ஒரு தூ தான்.. அதுக்கும் மேல துப்பறதெல்லாம் உங்க சாமர்த்தியம்..)

Labels:

posted by ACE !! at 6:12 AM 25 comments

Sunday, March 18, 2007

தூக்கம் போச்சுடி.. யம்மா....

நான் காலேஜ் படிக்கும் போது சிங்கம் மாதிரி தான் இருந்தேன். உடனே வீரத்தோட, ராஜா மாதிரின்னு நீங்க தப்பா நெனைச்சா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன். நான் சொல்ல வந்தது என்னன்னா சிங்கம் மாதிரி பரட்டை தலயோட, பங்க் வச்சிகிட்டு, நல்லா சாப்ட்டு சாப்ட்டு, 18 மணி நேரம் தூங்கிட்டு, சோம்பேறியா இருந்தேன்னு. இப்படி சிங்கம் மாதிரி சந்தோஷமா இருக்கறது பிடிக்காத ஒரு நண்பன், ஆர்வக்கோளாருல உடம்ப தேத்துவோம்னு ஜிம்முல(gym) சேத்து விட்டான். காலெஜ்க்கு அதி காலை 10 மணிக்காவது போகனும்னா நடு ராத்திரி 5 மணிக்கு எழுந்து 5.30 மணிக்கு ஜிம்முக்கு போனா தான் உண்டு.. அப்ப தான் 8 மணிக்கு பஸ்-அ புடிக்க முடியும்... அந்த அஞ்சரைக்கு தான் இந்த சிங்கத்தை ஏழரை (saturn 7.30) பிடிச்சுது..

இப்படி நடு ராத்திரில எழுந்தா க்ளாஸ்ல உக்காந்தா தூக்கம் தான் வரும். அதுவும் காலைல கடைசி பீரியட், மதியம் முதல் ரெண்டு பீரியட் ரொம்பவே அவஸ்தை. அப்போன்னு பாத்து ஒரு பாவப்பட்ட மனுஷன் (MK~) முக்காவாசி நாள் இந்த மூனு பீரியட்ல எதாவது ஒரு பீரியட்க்கு வருவார்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்லை. அதனால அவர் பீரியட்ல தூங்கிடுவேன். மாப்பிள்ளை (கடைசி)பென்ச் தான்.. அதானால ரொம்ப வச்தியா போச்சு..

ஒரு நாள் உள்நாட்டு சதியால அவருக்கு விஷயம் தெரிஞ்சு வந்து எழுப்பினார்.. என்னப்பா தூங்கறன்னு கோவமா கேட்டார். இதுக்கெல்லாம் சிங்கம் பயந்திடுமா என்ன?? நான் ரொம்ப பொறுமையா "சார், நான் மத்தவங்க மாதிரி க்ளாச்ல டிஸ்டர்ப் பண்றதில்லையே.. அமைதியா தூங்கிட்டு தானே இருந்தேன்.."ன்னு லாஜிக் சொன்னேன். (மறந்துட்டேன்.. சிங்கம் மாதிரியே அறிவாளியாவும் இருந்தேன் he he he he) அவரும் லாஜிக் பிடிச்சு போய் "அதுவும் சரி தான் நீ தூங்கினா கூட பரவா இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத"ன்னு தூங்கறதுக்கு அனுமதி கொடுத்துட்டார்..

அப்புறம் என்ன.. தினம் தூங்குவேன், க்ளாஸ் முடியும் போது அட்டென்டென்ஸ்க்கு பசங்க துயில் எழுப்புவாங்க, எழுந்த உடனே "யெஸ் சார்"னு சொல்லிட்டு.. அடுத்த பீரியட்க்கு fresh ஆயிடுவேன். இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள், இதே மாதிரி எழுப்பினாங்க.. நானும் "யெஸ் சார்" சொன்னேன்.. சொன்ன உடனே, நண்பர்கள் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. MK~வும் அட்டென்டென்ஸ்ல அடுத்த பேர கூப்பிடாம என்னயே ஆச்சர்யத்தோட பாக்கறார்.. மொத்த க்ளாசும் என்னையே பாக்குது... MK~ சிரிச்சுகிட்டே முன்னடி வாப்பா மின்னல்னு கூப்பிட்டார்.. என்னடா சரியான லூசா இருக்காங்க.. அட்டென்டென்ஸ் குடுத்தா முன்னடி வா பின்னாடி வான்னு இமசை பண்றாங்கன்னு முனுமுனுத்துகிட்டே தூக்க கலக்கத்தோட போனேன்.

முன்னாடி போனா "சரி, நீ எந்த பார்ட் செமினார் எடுக்கற?? 5th chapter part 1ஆ இல்ல part 2ஆ??"ன்னு கேட்டு இந்த சிங்கத்த ஒரு நொடில சாச்சிட்டாரு.. தலயெல்லம் சுத்துது.. என்னாது... ??? செமினாரா..?? நானா..?? அதுவும் இந்த சப்ஜெக்ட்லயா...??? ஐயோ.. இது என்னடா சோதனைன்னு ஆடியே போயிட்டேன்.. என்ன நடக்குதுன்னு புரியாம திரு திருன்னு முழிச்சேன்.. க்ளாஸே சிரிக்குது.. அடுத்தவனுக்கு ஆப்புனா தான் அல்வா சாப்பிடற மாதிரியாச்சே நம்ம பாசக்கார பயலுவலுக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் புரிஞ்சுது சதி காரப் பசங்க, வயத்தெரிச்சல்ல செமினார் யார் எடுக்கறீங்கன்னு கேட்டதுக்கு தூங்கிட்ருந்த என்னை எழுப்பி காமெடி பண்ணியிருக்காங்கன்னு.. நானும் என்ன ஏதுன்னு தெரியாம செக்கு மாடு மாதிரி "யெஸ் சார்" சொல்லி மாட்டிகிட்டேன்.

நமக்கு தெரிஞ்ச what is your name? english-அ வச்சிட்டு செமினர்லாம் கொடுக்க முடியவே முடியாதுன்னு, MK~ கிட்ட, "சார், உங்க க்ளாஸ்ல நான் சரியா கவனிக்கல, அதனால எனக்கு திடீர்னு கடைசி சாப்டர் (chapter) படிச்சா புரியாது"னு பொய் சொல்லி பாத்தேன்.. மனுஷன் கேக்கல.. "சார், டாக்டர் என்னை ப்ளாக் போர்ட் (black board) கிட்ட நின்னு பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்"னு உண்மைய கூட சொன்னேன்.. ஒன்னும் வேலைக்காகலை.. நான் ஜிம்முக்கு எல்லாம் போறேன்னு மறைமுகமா மிரட்டல் கூட விட்டு பாத்தேன்... மனுஷன் மசியவே இல்லை.. உன்னை பழி வாங்காம விடமாட்டேன், நீ தான் செமினார் எடுக்கனும். இது தான் என்னோட தீர்ப்புன்னு syam* மாதிரி சொல்லிட்டு போயிட்டார்.

இதெல்லாம் ரொம்ப அநியாயம். நான் தூங்கறது பிடிக்கலைன்னா தூங்காதன்னு சொல்லி இருக்கனும், அத விட்டுட்டு செமினார் எடுக்க வச்சா என்ன அர்த்தம். தூங்கினவனுக்கு எப்படி செமினார் எடுக்க தெரியும். கடவுளே நீ தான் ஒரு வழி காட்டனும். மழை புயல்னு வந்து 1 வாரம் காலேஜ் லீவ் விடனும்னு வேண்டிகிட்டேன். கடவுள் என்னிக்கு நம்ம பேச்சை கேட்டிருக்காரு?. கடவுள் "டேய் மேங்கோ.. உன் அல்ப செமினார்க்கு எல்லாம் புயல் மழை வராது.. அதுவும் இது ஏப்ரல் மாசம்... பேசாம படிச்சு செமினார் எடு"ன்னு கை விட்டுட்டார்.

இந்த கடவுளுக்கு நம்மள கை விடறதே வேலையாப் போச்சுன்னு கைபுள்ள மாதிரி புலம்பிட்டு வேற வழியே இல்லாம, ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அந்த இத்து போன சப்ஜெக்ட்ல செமினார் எடுத்தேன்.. நம்ம பாசக்கார பயலுங்க எல்லாம் "என்னடா, போர்ட் கிட்ட கொஞ்சிட்டு இருக்க", "போர்ட்ல என்ன மொழில எழுதியிருக்க??" "செமினார்க்கு ஸ்பெல்லிங் (spelling)என்ன??" னு அறிவுப்பூர்வமான சந்தேகம்லாம் கேட்டு ஊக்கப்படுத்துனாங்க.. MK~வும் "இப்போ தெரியுதா என் கஷ்டம்னு" நக்கலா நினைசிட்டு உக்காந்திருந்தார்.. அவர் முகத்துல அப்படி ஒரு அல்ப சந்தோஷம்.. சை.. அந்த 40 நிமிஷத்துல இந்த சிங்கம் அடைந்த அசிங்கத்துக்கு அளவே இல்லை.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... singam is crying ya)

அன்னிக்கு போன தூக்கம் தான்.. இன்னிக்கும், மீட்டிங், ட்ரைனிங், லெக்சர்னு எங்க போனாலும் தூங்க முடியாம ரொம்ப கஷ்டபட்டு, தூங்கறவங்கள பாத்து வயித்தெரிச்சலோட , "க்ளாஸ் ரூமிலே..... யம்மா.... தூக்கம் போச்சுடி... யம்மான்னு" புலம்பிட்டு இருக்கேன்.. தூங்கறதுக்கு வழி ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா...ப்ளீஸ்..

படிக்கற கொஞ்சம் பேரும், எதயாவது கமென்ட்ல சொல்லிட்டு போங்க ப்ளீஸ்..

டைப் அடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தா நானே கீழ டைப் பண்ணி இருக்கேன்.. அவங்கவங்க இஷ்டத்துக்கு எதாவது ஒன்னே ஒன்ன மட்டும் கமென்ட்ல copy paste பண்ணிக்கோங்க :)

copy & paste 1 : த்த்தூதூதூதூதூதூ..............

copy & paste 2 : எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...

_________________________________________________
* syam = நாட்டாமை.. வேறெந்த மேம்படுத்தும் எண்ணமும் இல்லை.. :))

Labels:

posted by ACE !! at 10:27 PM 49 comments

ஒளிக்குமிழ் (bulb)

நம்மளும் எதாவது கவிதைன்னு கிறுக்கலாங்ர நப்பாசைல 2 கவிதை (??) கிறுக்கினேன். அத படிச்ச அத்தனை பேரும் (சரி சரி.. 3,4 பேர் தான்) நல்லா இருக்குன்னு வேற ஏத்தி விட்டாங்க.. இந்த கவிதயை வச்சி நண்பர்கள் கிட்ட / ஆபிஸ்ல படத்த போடுவோம்னு பாத்தா பல்ப் தான் நிறைய கெடைச்சுது... :(

கவிதைய படிச்ச நம்ம நண்பர் பட்டாளத்தோட கருத்துக்கள் சில...

"புதுசா எழுதற இல்ல, போக போக மத்தவஙளுக்கு புரியர மாதிரி தானா வந்துடும்" ( உண்மை தான்.. பரவாயில்லை..)

"உன் கவிதைல (??) என்ன சொல்ல வர??" (நியாயமான கேள்வி.. இத கேட்ட அப்புறம் எனக்கே சந்தேகம் வந்துடிச்சி)

"நீ எழுதினதோட உட்கருத்து என்ன??" (உட்கருத்தா?? அப்படின்னா??)

"நீ தமிழ்ல எழுதினா நல்லாயிருக்கும்" (இது ரொம்ப ஓவர்)

எல்லாரும் ஒன்னு போல இப்படியே சொல்லி பல்ப் கொடுத்துட்டாங்க... (சதிகாரர்கள்).. சரி இதெல்லம் அரசியல்ல சகஜம், இதுக்கே அசந்துட்டா எப்படி.... இந்த மாதிரி சதி பண்ணவங்கள பழி வாங்க இன்னும் 2 கவிதை கிறுக்குவோம்னு திட்டம் போட்டேன்.

எல்லாத்துக்கும் சிகரமா அந்த திட்டத்துக்கே ஆப்பு வச்சான் ஒருத்தன். அந்த சதிகாரன் என்கிட்ட "என்னடா அப்பாவெல்லாம் பாட்டுல இழுக்கற??"ன்னு ஒரு குண்டை போட்டான்.

நான் குழம்பி போய் "அப்பாவா?? யார் ப்ளாக படிக்கற நீ?? என்னுத படிடா".

நண்பன் அதுக்கு "தந்தை மொழி தவிர்த்துனு நீ தான்டா எழுதியிருக்க....".

ஆகா இப்போ புரிஞ்சுது எனக்கு, நண்பன் தத்தை மொழியை, தந்தை மொழின்னு படிசிட்டான்னு.இதுக்கே டென்ஷன் ஆயிட்டா எப்படி.. நான் "தம்பி, இது தந்தை மொழி இல்ல, தத்தை மொழி... காதலுக்கு மரியாதை படத்துல எனை தாலாட்ட வருவாளா?? பாட்டுல ஒரு வரி வருமே தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா??. ஞாபகம் இல்லயா.. அந்த தத்தை.. தத்தைனா கிளி"ன்னு விளக்கம் கொடுத்தேன்.

அந்த நல்லவன் சொன்னான் "ஓ.. தத்தை தானா அது.. நீ தப்பா அடிச்சிட்டியோன்னு நெனைசேன்.. நீ திருவள்ளுவர் மாதிரி எல்லாம் எழுதினா யாருக்கு புரியும்"னு வள்ளுவர எல்லாம் வம்புக்கு இழுத்து அவமானப்படுத்திட்டான்.

டப்புனு ஒரு சத்தம்.. என் இதயம் தான் வெடிச்சுது... நான் நொந்து போய், "அடப்பாவி, வள்ளுவர் உனக்கு என்னடா பாவம் செஞ்சாரு, அவர போய் கேவலப்படுத்தரயே??"னு நெனைச்சிகிட்டேன். கடவுளே, இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா??.. நல்ல வேளை வள்ளுவர் உயிரோட இல்ல.. உயிரோட இருந்து இத கேட்டிருந்தா என் கை காலை முறிச்சி குரல்வளையை நெறிச்சி கொன்னு போட்டிருப்பார்...

நம்மாள ஏன் ஒருத்தருக்கு அவப்பெயர்லாம் வரனும்னு ஒரே பீலிங்க்ஸா போச்சு.. :( அதனால, வாங்கிய பல்புகள் ப்யூஸ் போற வரைக்கும் கவிதையெல்லாம் மூட்டை கட்டிட்டு சொந்த கதை சோக கதை தான்...

பி.கு 1: இந்த பதிவுக்கு "தூக்கம் போச்சுடி யம்மா.."னு தான் தலைப்பு வச்சிருந்தேன். ஆனா முன்னுரையே இவ்ளோ பெரிய மொக்கையா போச்சு.. அதனால "தூக்கம் போச்சுடி... யம்மா..." அடுத்த பதிவுல.. (அது மட்டும் என்ன காவியமான்னு கேக்காதீங்க)

பி.கு 2: பல்புக்கு தமிழ்ல என்னன்னு தெரியல.. அதனால ஒளிக்குமிழ்னு போட்டுட்டேன். தெரிஞ்சவங்க சொன்னா மாத்திடறேன்.

----------------------------------------------------------------------------------

Labels:

posted by ACE !! at 8:01 PM 12 comments

Saturday, March 17, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

சில பூனைகளுக்கு என்ன சூடு பட்டாலும் புத்தி வராது. இந்த பூனையும் அப்படித்தான். பதிவுலகத்துல ரிலே கவிதையெல்லாம் எழுதி கலக்கறாங்களேன்னு நானும் கிறுக்கினேன். நிறைய பேர் டிப்ஸ்லாம் கொடுத்திருக்காங்க.. அதெல்லாம் உபயோகப்படுத்தி உளறியது தான்..

________________________________________

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

உளறுகிறேனாம்
உளறுகிறார்கள்
ஊரில்

கண்ணே உன்.......

கயல்விழி கணை தொடுத்து
குருடாக்கியதை
அறிந்தாரில்லை போலும்

தத்தை மொழி தவிர
வேறு மொழி கேளா
செவிடாக்கியதை
தெரிந்தாரில்லை போலும்

சுந்தர வதனம் கண்டு
சொல்லிழந்து
ஊமையானதை
உணர்ந்தாரில்லை போலும்

மாசிலா வாசம்
முகர்ந்து
மூர்ச்சையானதை
புரிந்தாரில்லை போலும்

புலனனைத்தும் இழந்து
உள்ளம் உனதாக்கிய பின்
எதைக் கொண்டு
உளறுவேன் நானும்??

____________________________

படிக்கற 2, 3 பேரும் தயவு செஞ்சி, வஞ்சப்புகழ்ச்சியில்லாம உண்மைய சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்... தப்பெல்லாம் திருத்திக்க வசதியாயிருக்கும்.. அதனால மறக்காம commentடிடுங்க... :)

Labels:

posted by ACE !! at 7:35 AM 42 comments

Thursday, March 15, 2007

நாங்களும் ஆதவனோ??

புலியை பார்த்து பூனை சூடுப்போட்டு கொண்ட மாதிரி நானும் நிறைய ப்ளாக் படிச்சு கெட்டுப் போய், கவிதை??ங்ர பேர்ல கிறுக்கி பாத்தேன். நான் பட்ட சூட்டை பெறுக இவ்வையகம் :)

நாங்களும் ஆதவனோ??

ஆதவனே,

விழித்தெழுந்த
விநாடி முதல்
உலகினை
உலா வருவோம்
வலைத்தளம்
உதவி கொண்டு

மேகமென
மேலாளர் ம(மு)றைக்கயிலே
ஓய்வெடுப்போம்
ஓரமாய் ஒளிந்திருந்து

பதிவுகளின்
உயிர் வளர்ப்போம்
பின்னூட்டமெனும்
வெயில் கொடுத்து

உன் பணி
அனைத்தாற்றும்
நாங்களும் ஆதவனோ??

டிஸ்கி: சூரியனை அவமானப்படுத்தனும்னு எண்ணம்லாம் இல்லை.

Labels:

posted by ACE !! at 7:43 PM 8 comments

Tuesday, March 13, 2007

"Curry" Naan!!!

என்னன்னே தெரியல, இந்த யு.எஸ் ல எல்லாரும் நமக்கு சதி பண்ற மாதிரியே தோணுது.. ஒரே இம்சைங்க. முதல்ல கார் திருடன், ரெண்டாவது காப், மூணாவது டாக்ஸிகாரன், அப்புறம் டாக்டருங்க, இப்போ ரெஸ்டாரன்ட் வெய்ட்டர். இவனுங்களுக்கு நம்மள பாத்தாலே ஒரு மார்க்கமா தான் இருக்கும் போல. விஷயம் இது தான்..

நண்பன் ஒருத்தனோட (R~), சாப்பிடலாம்னு ஒரு வட இந்திய ரெஸ்டாரன்ட்க்குப் போனேன். Naan, சாதம் , சைட் டிஷ் ஆர்டர் பண்ணினோம். R~ Naan எடுத்து வாய்ல வச்ச உடனே தூ தூன்னு துப்ப ஆரம்பிச்சிட்டான்.... நான் பதறி போய் என்னடாச்சுன்னு பாத்தா, அவன் சாப்ட்ட Naanல ஒரு சின்ன கரித் துண்டு இருந்துச்சு. சரி, அடிக்கடி போற இடம்னால கண்டுக்காம கரித் துண்டு அடுப்புல இருந்து ஒட்டி இருக்கும்னு விட்டுட்டோம். R~, என்கிட்ட, "நீ Naan வேற வாங்கு நான் போய் வாய் கழுவிட்டு வரேன்"னு போயிட்டான். நான் அங்கிருந்த வெய்ட்டர கூப்டு, "இதுல சின்னதா ஒரு கரித் துண்டு இருக்கு வேற Naan கொடுங்க"ன்னு மாத்திட்டேன். R~ வந்து சந்தோஷமா நானை சாப்பிட ஆரம்பிச்சான், "கடக்"னு ஒரு சத்தம். R~ வேகமா திருப்பி துப்ப ஆரம்பிச்சிட்டான்.. என்னடான்னு பாத்தா முன்ன இருந்தத விட இன்னும் பெரிய கரித் துண்டு..

அட லூசுப்பசங்களா, நான் என்ன கரித்துண்டு சின்னதா இருக்குன்னா complaint பண்ணேன், பெருசா எடுத்துட்டு வரதுக்கு.. போடாங்கோ... தெரியாம பண்ணானா இல்ல நக்கலுக்கு பண்ணானா தெரியல.

இன்னொரு தடவை நானை மாத்த சொன்னா வெறும் கரியை எடுதுட்டு வந்துட போறான், எதுக்கு ரிஸ்க்னு R~ரை ரொம்ப கஷ்டப் பட்டு சமாதானப்படுத்தி இந்த கரி நானையே சாப்பிட வச்சேன். R~க்கு வேற நான் தான் ஏதோ சதி பண்ணிட்டதா பயங்கர சந்தேகம். என்ன சொன்னாலும் நம்பவே மாட்டேன்டான்..

எங்கேந்து தான் வருவானுங்களோ நம்மளையே தேடி.

Labels:

posted by ACE !! at 1:03 AM 6 comments

Monday, March 12, 2007

இன்று போய் நாளை வா

டிஸ்கி: இது என் சொந்த சரக்கு இல்லை, எங்கேயோ படித்தது. யாரோ (சுகி சிவம்??) எங்கேயோ எழுதியது நினைவுக்கு வந்தது.

இராமாயணத்தில், இராமர் இலங்கையில் யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறார். கும்பகர்ணன், மேகநாதன் அனைவரையும் பறி கொடுத்து விட்டு இறுதியாக இராவணன் போரில் இறங்குகிறான். அப்போது இராமனுடனான உக்கிரமான போரில், தன்னுடைய அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான். அந்நேரம், இராமர் அவன் பால் கருணை கொண்டு "இன்று போய் நாளை வா" என்றுரைக்கிறார்.

இது எல்லோருக்கும் தெரிந்த கதை. அதுவும் இதில் இராமரின் கருணை மிகவும் புகழ் வாய்ந்தது. ஆனால், இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், இராமரின் கருணையை விட அவருடைய சாதுர்யம் புலப்படும்.

அக்காலத்தில் போரில் சரி சமமானவர்கள் மட்டுமே போரிட வேண்டும். அதே போல் ஒரு நிராயுதபாணியை ஆயுதம் கொண்டு தாக்க கூடாது. அதனால் நிராயுதபாணியான இராவணனை இராமரால் ஆயுதம் கொண்டு தாக்க முடியாது. இராமரும் தன் ஆயுதங்களை துறந்து வெறும் கைகளால் போரிட வேண்டியிருந்திருக்கும். இராவணனனோ மல்யுத்ததில் இராமரை விட சிறந்த வீரன். இராவணன் இராமரை மல்யுத்ததிற்கு அழைத்திருந்தால் இராமரால் மறுக்கவும் முடிந்திருக்காது. இராவணனுடன் மல்யுத்தம் செய்தால் இராமர் வெல்வது மிக கடினம். அதனால், இராவணன், சற்று அசந்த வேளையில் "இன்று போய் நாளை வா" என்று சாதுர்யமாய் தப்பித்து விட்டார்.

Labels:

posted by ACE !! at 12:30 AM 5 comments

Saturday, March 10, 2007

நெஞ்சு பொறுக்குதில்லையே....

இந்த யு.எஸ்ல டாக்டருங்கள நம்பவே முடியலை.(மத்தவங்க எல்லாரையும் மட்டும் நம்பமுடியுதானெல்லாம் கேட்டா என்னால பதில் சொல்ல முடியாது). நெஜமாலுமே படிச்சிட்டு வந்தாங்களா இல்ல நம்மள மாதிரி காலேஜ்ல நல்லா தூங்கிட்டு பரீட்சைக்கு ஒரு நாள் முன்னாடி படிச்சிட்டு வந்தாங்களான்னு தெரியல.

போன வாரம், ஒரு ராத்திரி, செமயான நெஞ்சு வலி. (ஹர்ட் அட்டாக் மாதிரி இல்லை, ஆனாலும் செம வலி). நடக்கவோ, உக்காரவோ, படுக்கவோ முடியல. மூச்சை கொஞ்சம் வேகமா இழுத்தா வலி உயிர் போகுது. ஐயோடெக்ஸ் மூவ், அமுர்தாஞ்சன் எல்லாம் தேச்சும் ஒன்னும் ஆகல. சரி, இந்த ராத்திரில காரை எங்க ஓட்ரதுன்னு, வலியோட காலைல வரைக்கும் கஷ்டபட்டுட்டு, வீட்டுக்கு பக்கதுல இருந்த டாக்டர் கிட்ட போனேன். அவர் கொஞ்சம் வயசானவர். அவர் இன்னொரு இன்டெர்ன் டாக்டரோட வந்தார். எல்லம் செக் பண்ணிட்டு, அந்த சின்ன டாக்டர் கிட்ட என்னன்னு தெரியுதான்னு கேட்டா அதுக்கு அந்த மாங்கா, எனக்கு ஐடியாவே இல்லனு ஒரு போடு போட்டான். அட பாவி, 5 வருஷம் என்னடா கிழிச்ச?? எதாவது ஒரு பேரை சொல்லி இருந்தா நானும் கொஞ்சம் தெம்பா இருந்திருப்பேன் இல்ல....... எனக்கென்ன தெரியவா போகுது நீ என்ன சொன்னேன்னு?? அத விட்டுட்டு...... வலி வேற தாங்க முடியலடா சாமி...... ஊர்ல இருக்கற சாமியெல்லாம் வேண்டிட்ருந்தேன்..

நல்ல வேளை, சீனியர் டாக்டர் காலேஜ்ல க்ளாஸ்லாம் ஒழுங்க போயிருப்பார் போல....அவர் ஒரு ECG எடுத்து பாத்துட்டு சொல்றேன்னார். ஒரு நர்ஸக்கா வந்து கதற கதற (வலிங்க) ECG எடுத்துட்டு போனாங்க. அந்த டாக்டருக்கு என் மேல் என்ன கோவமோ தெரியல, ஒரு குண்ட தூக்கி போட்டாரு.. "தம்பி, உன் இதயம் ரொம்ப நல்லா இருக்கு" (எதையும் தாங்கும் இதயத்த பத்தி இவர் சொல்லி தான் தெரியனுமா என்ன he he....), "ஆன உன் நுரையீரல்ல எதாவது ஒன்னு ரெண்டு பபுள் வெடிச்சிருக்கும்னு நினைக்கிறேன், நீ முதல்ல ER-க்கு யாரயாவது கூட்டிட்டு போ"ன்னு சொல்லிட்டு படத்துல வர மாதிரி கண்ணாடிய கழட்டினார். அட பாவிங்களா, என் நுரையீரல் என்ன, சோப் பபுல் விட்டு விளையாடர இடமா?? அதுல ரெண்டு உடைஞ்சிடுச்சுன்னு அசால்டா சொல்றீங்களே.....ஐயையோ, கண்ணாடிய வேற கழட்டிட்டாரேன்னு என்னோட எதையும் தாங்கும் இதயம் ஒரு நொடி அடிக்கறத நிறுத்திடிச்சி. நான் பதறி போய், இதயத்த திருப்பி ஸ்டார்ட் பண்ணிட்டு நண்பன் ஒருத்தனை வரச் சொன்னேன். நண்பன் வர வரைக்கும் ஒரு flash back மனசுல ஓடுச்சு.

முன்னொரு காலத்துல, பொழுத போக்கறதுக்கு ரீடர்ஸ் டைஜெஸ்ட் படிக்கறது உண்டு. அதுல ஒரு உண்மை சம்பவம். ஒருதன் flightல போறதுக்கு ஏர்போர்ட்க்கு பைக்ல வரும் போது அக்சிடென்ட் ஆயிடுது. அவன் அத பெருசா எடுதுக்காம flight ஏறிடறான். flight கொஞ்ச தூரம் போன அப்புறம் அவனுக்கு மூச்சு விட முடியல, இதய துடிப்பு ஸ்லோ அயிடுச்சு. flight-ல இருந்த டாக்டருங்க ரொம்ப திறமையா, என்ன பிரச்சனைன்னு கண்டு புடிச்சு அத விட திறமையா முதலுதவி கொடுக்கறாங்க. பிரச்சனை என்னன்னா தலைவருக்கு அக்ஸிடென்ட்ல நெஞ்செலும்பு உடைஞ்சு, நுரையீரல்ல ஓட்டை போட்டுரும். அதனால காத்து நெஞ்சுக்கூட்ல ரொம்பி, இதயத்தையும் நுரையீரலயும் செயல்பட விடாம தடுக்குது. அப்போ தான் ஒரு உண்மை புரிஞ்சுது. நமக்கு நுரையீரல்ல ஓட்டை இருந்தா, நம்மால இவ்ளோ நேரம் தாக்கு புடிச்சிருக்க முடியாதுன்னு. இந்நேரம் ரெண்டு மேட்டரும் நின்னு போயிருக்கனும். அப்போ வேற என்னவா இருக்க முடியும்??சரி நமக்கென்ன அத பத்தி, அதெல்லாம் தான் யோசிக்க டாக்டருங்க இருக்காங்கன்னு நான் flash back-அ கன்டினியூ பண்ண ஆரம்பிச்சேன். அந்த flight டாக்டருங்க என்ன முதலுதவி செஞ்சாங்கன்னா...........

ஆகா உயிர் காக்க நண்பன் வந்துட்டான். நம்மள கஷ்டப்பட்டு கை தாங்கலா ER-க்கு கூட்டிட்டு போனான். அங்க ஒரு 5 நிமிஷம் ஓரமா உக்கார சொன்னாங்க. அட கொடுமையே, எமர்ஜென்சிக்கே 5 நிமிஷமான்னு வலியோட நின்னுட்ருந்தேன். (உக்காந்து எந்திரிக்க முடியல). 5 நிமிஷதுக்கப்புறம் ER-ல ஒரு நர்ஸக்கா நேர்முகக்காணல் நடத்தினாங்க. "உங்க வலி எந்த ரேஞ்சுல இருக்கு 1 - 10 ல ஒரு நம்பர் சொல்லுங்க"ன்னாங்க. டேய், இதெல்லாம் நேரக்கொடுமை டா. இது என்ன சன் டீவி டாப் 10ஆ?? 1 - 10ன்னு ரேங்க் போடறதுக்கு?? நெஞ்சு வலிடான்னு புலம்பிகிட்டு அக்கா கேட்ருச்சேன்னு 8ன்னு ஒரு நம்பர சொன்னேன். (எல்லாம் பழக்க தோஷம் தான். நேர்முகக்காணல்ல 1 - 10 குள்ள ஒரு நம்பர் கேட்டா எப்பவும் 8 தான் சொல்லுவேன் ஏன்னு தெரியல). ஆனாலும் அந்த அக்கா விடாம சொந்த கேள்வி சோக கேள்வி எல்லாம் கேட்டு ரேகிங் பண்ணிட்டு இருந்துச்சு. என்னடா இது தொல்லைன்னு நம்ம தலைவர் டுபுக்கு வழியில் நடிப்போம்னு, (அவர் அளவுக்கு இல்லேன்னாலும் நம்மால முடிஞ்ச அளவு) 8-ம் நம்பர் வலிய 16ம் நம்பர் வலி மாதிரி முகத்துல காமிச்சேன். நம்ம நடிப்பு ஒன்னும்
வேலைக்காகல போல, அந்தக்கா கண்டுக்கவே கண்டுக்காம கடமையின் சிகரமா நான் கையோட எடுத்துட்டு வந்த ECG ரிப்போர்ட்ட தூக்கி போட்டுட்டு வேற ஒரு ECG எடுத்தாங்க. அப்புறம் போனா போவுதுன்னு "உனக்கு வலி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. (அப்பா கடைசில கண்டு பிடிச்சிட்டாங்க) அதனால மயக்க ஊசி மாதிரி ஒன்னு போடறேன்"னு ஒரு ஊசி போட்........

எவ்ளோ நேரம் ஆச்சுன்னு தெரியல, நல்லா தூங்கிட்ருக்கும் போது யாரோ ஒரு அண்ணா வந்து தட்டி எழுப்பி x-ரே எடுக்க போறேன்னார். நான் தூக்க கலக்கத்துல நீங்க என்ன வேணா எடுத்துட்டு போங்கண்ணான்னு சொல்லிட்டு மயங்கிட்டேன். அப்புறம் MRI ஸ்கேன் எடுத்தாங்க. எல்லாம் பாத்துட்டு, ER டாக்டர் சொன்னாரு "உன்னோட இதயம் சூப்பரப்பு.. நுரையீரல்ல கூட ஒரு க்ளாட்டும் (clot) இல்ல, எனக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல, நீ இன்னா பண்ற, வலிச்சா இந்த வலி கொல்லிய (pain killer) போட்டுக்கப்பு, ரொம்ப வலிச்சா இந்த வலி கொல்லிய போட்டுக்கப்பு"ன்னு ரெண்டு வலி கொல்லிய கொடுத்தார். என்னடா இது நம்ம கதை அவ்ளோ தான் போலிருக்கு டாக்டருக்கே ஒண்ணும் தெரியல, நாலு பேற வேற தேத்தனுமேன்னு (எல்லாம் முடிஞ்சா நாலு பேர் வேணும்ல தூக்கிட்டு போக.. அதுக்கு தான்) கவலை பட்டுட்ருந்தேன். அதுகுள்ள அந்த டாக்டர் ஒரு ப்ரின்ட் அவுட் கொடுத்து அதுல இருக்கிற கார்டியாலஜிஸ்ட போய் பாருன்னார். நானும் மயக்கம் + சோகம்னால வேற ஒன்னும் கேக்காம வந்துட்டேன்.

வீட்டுக்கு போற வழியில திடீர்னு ஒரு யோசனை "நமக்கு தான் இதயம் நல்லா இருக்கே அப்புறம் ஏன் நாம கார்டியாலஜிஸ்ட் கிட்ட போகனும்"??. ரொம்ப யோசிச்சும் பதில் ஒன்னும் கிடைக்கல. சரி படிச்சவங்க (??) சொல்றாங்கன்னு கார்டியாலஜிஸ்ட் கிட்ட அப்பாயின்மென்ட் கேட்டேன். அந்த வீணா போன வெண்ணைங்க 5 நாளைக்கபுறம் காலைல 12 மணிக்கு வான்னு வெறுப்பேத்தறாங்க. அட போங்கடா, இன்னிக்கு வலிக்குதுடான்னா 5 நாள் கழிச்சு வா ந்றான். சாவுக்கு வாடான்ன திவசத்துக்கு வருவான் போலன்னு புலம்பிட்ருந்தேன். எந்த ப்லாக்லயோ படிச்ச மாதிரி நேரம் நல்லா இல்லன்னா ஒட்டகத்து மேல உக்காந்தாலும் நாய் கடிக்குமாம், என்ன பண்றது.

அப்படி இப்படின்னு ஒரு வழியா வலியோட 5 நாள் இருந்துட்டு அந்த இம்சை (இதய) நிபுணர் கிட்ட போனேன். வலியும் கொஞ்ச கொஞ்சமா குறைஞ்சு இருந்தது. 1 மணி நேரம் உக்கார வச்சிட்டு ரெண்டே ரெண்டு நிமிஷம் நாடி, BP எல்லம் பாத்துட்டு, கொஞ்சம் BP ஜாஸ்தியா இருக்கு, ஒரு டெஸ்ட் பண்ணிட்டு சொல்றேன்னார். சரி பெரிய டாக்டர் சொல்றாரே, எதாவது பெரிய டெஸ்டா இருக்கும்னு பாத்தா அதே ECG டெஸ்ட். யோவ் வேற டெஸ்டே உலகத்துல கிடையாதா?? தொல்லை புடிச்சவனுங்க, ECG எடுத்தே கொல்றாங்க. ஓ.கே, நமக்கென்ன வலி போனா சரி தான்னு நானும் கண்டுக்கல. ECG டெஸ்டை பாத்துட்டு இந்த "பெரிய" டாக்டர் "உஙக இதயம் ரொம்ப நல்லா இருக்கு, BP தான் கொஞம் ஜாஸ்தியா இருக்கு, அதுவும் பெரிய பிரச்சனை இல்ல, இது ஸ்டார்டிங் தான், நீங எதுக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் டெஸ்ட் எடுத்துக்குங்க"ன்னு சொல்லி அனுப்ச்சி வச்சிட்டாரு.

தெரியாம தான் கேக்கறேன், நான் எதுக்கு இந்த மூணு டாக்டருங்க கிட்ட போனேன். எனக்கு ஹர்ட் வீக்கா ஸ்ட்ராங்கான்னு கேக்கவா?? நெஞ்சு வலின்னு நொந்து போய் போனா, இவனுங்க டயலாகையே மாத்த மாட்றானுங்க, ஹஅர்ட் நல்லா இருக்கு ஹஅர்ட் நல்லா இருக்குன்னு வெறுப்பேத்றானுங்களே ஒழிய இன்னிய வரைக்கும் வலிக்கு காரணத்தயும் கண்டு புடிக்கல, ஒரு மருந்து மாத்திரையும் கொடுக்கல, சும்மா சும்மா இங்க போ அங்க போன்னு மண்டை காய வைக்கிறானுங்க. இந்த அழகுல கார்டியாலஜிஸ்ட் வெகேஷன் போறேன், வெங்காயம் போறேன்னு, நம்மள ஸ்ட்ரெஸ் டெஸ்ட்க்கு 21 நாள் கழிச்சு வா ன்ட்டு போய்ட்டாரு. போடாங்கோ !@#$$%%^%

வலி வந்து ஒரு வாரத்துக்கு மேலாச்சு, வலியே கடுப்பாயிட்டு "போடா வெண்ணை, உனக்கெல்லாம் வந்தேன் பாரு, ஒரு மாத்திரை கூட சாப்பிட மாட்ற.. மனுஷனா நீ?"ன்னு கன்னா பின்னான்னு அசிங்கமா திட்டிட்டு கோச்சிகிட்டு கொஞ்சம் கொஞ்சமா வெளிய போயிட்ருக்கு. பேசாம இந்த டாக்டருங்கள பாக்க போன நேரத்துல நல்லா மூணு வேளை சாப்ட்டு தூங்கியாச்சம் இருக்கலாம்..

flight-ல இருக்கறவனுக்கு எல்லாம் நல்ல டாக்டர் வராங்க, நமக்கு மட்டும் எங்கேந்து தான் வருவானுங்களோ??

Labels:

posted by ACE !! at 4:18 AM 21 comments

Tuesday, March 6, 2007

THIRUVILAYADAL (திருவிளையாடல்)

திருவிளையாடல் படத்துல, தருமி கதைல எல்லோரும் நக்கீரரின் பெருமைய உணர்த்தவே சிவன் அப்படி திருவிளையாடல் புரிந்தார்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு முக்கியமான மேட்டர விட்டுடாங்க. சிவன் தருமிய ப்ராக்ஸியா அனுப்சது எவ்வளவு பெரிய தப்பு? அதனால என்னெல்லாம் நடந்திருக்கலாம்னு நகேஷ் மாமா அருமையா புலம்புவார். ஆனாலும் ஆப்பு வாங்கின தருமிய எல்லோரும் மறந்தே போயிடுவாங்க.

அதே மாதிரி ஒரு சிச்சுவேஷன் எங்க ஆபிஸ்ல நடந்துச்சு. வாடிக்கையாளர் (மகாராஜான்னு படிங்க) ஒருத்தர் "நாங்க சர்வர் SW வாங்க போறோம், எந்த சர்வர் வாங்கறதுன்னு பயங்கர டவுட், நீங்க உங்க செல் போன்ல ஒரு க்ளயன்ட் SW போட்டு கொடுத்து எங்களோட ஐயத்தை தீர்த்து வைங்கன்னு சொன்னாங்க. (தீத்து வச்சா ப்ராஜெக்ட் (1000 பொற்காசு) கொடுப்பாங்கன்னு நாங்களே நினைச்சிகிட்டோம்).ஸெட் அப் இதான்: நாங்க எங்க க்ளையன்ட் SW கொண்டு போய் 3 சர்வர் கம்பனியோட டெஸ்ட் பண்ணி எல்லாம் ஓ.கேன்னு சொல்ற கம்பனிய செலக்ட் பண்ணுவாங்க.

சரி நல்லதா போச்சு, ஆணி பிடுங்கிட்ருந்த நமக்கும் வேலை வந்துடுச்சேன்னு சதோஷமா ஓ-போடறதுக்கு முன்னாடி எங்க சொக்கன் (எங்க டேமேஜர் தான்), எவனோ 3rd party கிட்ட இருந்து ஒரு SW வாங்கி கொடுத்து, இத போன்ல போட்டு எடுத்துட்டு போங்கன்னு உத்தரவ போட்டார். சொக்கன் சொல்லை எப்படி தட்றதுன்னு நானும் இன்னொரு தருமியும் பேய் முழி முழிசிட்டு தருமி மாதிரியே "இது என்ன Softwareரோ, வொர்க் ஆகும்னு எப்படி நம்பறது? வொர்க் ஆகலைனா உதை யார் வாங்கறது?"ன்னு கேட்டோம். சொக்கன், நல்லா சகுனி மாதிரி யோசிச்சு, சர்வர் கம்பனி 3-ல இருந்து புற வாசல் வழியா ரெண்டு பேர வரவழைச்சு அவங்க சர்வரோட டெஸ்ட் பண்ண வச்சார். டெஸ்ட் எல்லாம் சூப்பர் சக்ஸஸ், இனிமே என்னன்னு நாங்களும் (தருமி 1 அன்ட் தருமி 2) மகாராஜா அரசவைக்கு போனோம். (க்ளையன்ட் டெஸ்ட் சென்டர்)

ஒரே ஆறுதல் என்னன்னா, அடி வாங்க இன்னொருத்தரும் இருக்கார்னு ஒரு அல்ப சந்தோஷம் தான். அங்க போனா உடனே மகாராஜா எங்களுக்கு terms & conditions எல்லாம் சொல்லி "டெஸ்டிங் ஆரம்பிக்கட்டும்"னு உத்தரவ போட்டார். நாங்களும் டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம். எங்க ராசி தான் ஊர் அறிஞ்ச ரகசியமாச்சே. கொஞ்ச நேரத்துலயே ரெண்டு மூணு டெஸ்ட் கேஸ் ஊத்திகிச்சி. எங்க திருநாக்கு தான் சனி பகவான் இருக்கிற திருநள்ளாறுன்னு மறந்து போய், எல்லாம் ஏற்கனவே டெஸ்ட் பண்ணியாச்சுங்ற மெதப்புல "உங்க சர்வர்ல தான் தப்பு"ன்னு நக்கலா சவுண்ட் விட்டோம். அந்த டீம் protocol expert (நக்கீரர்) சம டென்ஷன் ஆகி டேட்டா எல்லாம் அனலைஸ் பண்ணிட்டு வச்சான் எங்களுக்கு ஆப்பு. (பின்ன ஓ.சி SW வச்சிருக்கற நாங்களே இவ்ளோ அலும்புனா, சொந்தமா SW வச்சிருக்கிறவங்களுக்கு என்ன திமிர் இருக்கும்)

நக் (கடுப்புடன்) : "உங SWla பொருட்குற்றம் இருக்கு. அதனால தான் டெஸ்ட் ஃபெயில் ஆச்சு"


தருமி 1 / 2 (நக்கலா): (* நம்பறமாதிரியே இல்லயே, நாம தான் டெஸ்ட் பண்ணினோமே, சை இந்த நக்கீரர்களே இப்படி தான்*)

"அப்படி என்ன பெரிய குற்றம் இருக்கு??"


நக் 1 (சம கடுப்புல): "protocol-ல hex ல தான் ஒரு டேட்டா-வ அனுப்பணும்னு சொல்லி இருக்கும் போது நீங்க ஏன் அதை decimal-அ அனுப்பறீங்க?"

தருமி1 / 2 (ஆடி போய், திகிலுடன்): (*ஆகா இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை, இத நம்ம டெஸ்டே பண்ணலயே*) "அப்படியா, சரி நாங்க பாத்துக்கறோம், நீங்க அடுத்த டெஸ்ட் கேஸ்க்கு போங்க" (*கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாது இல்ல*)

நக் 1 (தெனாவெட்டா) : "அதெல்லம் முடியாது, இத சரி பண்ணிட்டு வந்தா தான் அடுத்த டெஸ்ட் கேஸ் போவோம்"

தருமி1 / 2 (அவ்வ்வ்வ்....) : (** நிலமை தெரியாம கழுத்தறுக்கிறியேடா**) he he இல்லீங்க, இதெல்லாம் இப்போ சட்டுன்னு சரி பண்ண முடியாது..

(*நம்ம கோட் எழுதினாலே சரி பண்ண 4 நாள் ஆகும், இதுல எவன் கோடோ, எப்படி சரி பண்றது??*)

மகாராஜா கொஞ்சம் சொல்லுங்களேன்.. (*மகாராஜாவ வேற ஸப்போர்ட் கேட்டோம்*)

மகாராஜா (தூக்க கலக்கத்தில்) : இது உங்க ரெண்டு பேர் பிரச்சனை.. நீங்களே தீத்துக்கோங்க..

நக் 1 (சந்தேகத்துடன்) : ஏன் fix பண்ண இவ்ளோ கஷ்ட படறீங்க, sw நீங்க தானே எழுதனீங்க?? இல்ல...

(**ஏற்கனவே டவுட் போல, இவனுங்க எப்படி இவ்ளோ சீக்கிரமா ச்ந் டெவலெப் பண்ணி இருக்க முடியும்னு. (நிஜமாவே கேட்டாங்க)**)

தருமி1 / 2 (பதறி போய்): அதெல்லம் இல்ல, நாங்க, நாங்களே தான் எழுதினோம். பின்ன மண்டபத்துல எவனாவது எழுதி கொடுத்தா எடுத்துட்டு வந்தோம்.. நாங்க fix பண்றோம். இன்று போய் நாளை வரோம். நெக்ஸ்ட் மீட் பண்றோம் he he

(**சொக்கா சொதபிட்டியே Grrrrrr**)

நாகேஷ் மாமா நிலைமை எப்படி இருந்திருக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது. அவர் மாதிரியே சம தில்லா எங்க சொக்கன் கிட்ட போய் "அங்க ஒருத்தன் இருக்கான்யா, அவன் தான் சொன்னான், நீ வாங்கி கொடுத்த sw-ல பெரிய தப்பு இருக்காம், போய் சரி பண்ண்ட்டு வான்னு அனுப்ச்சிட்டான்"னு சொன்னோம். அவ்ளோ தான்.... எங்க சொக்கனுக்கு கோவம் வந்து நெத்தி கண்ண நக்கீரர பாத்து திறக்கிறதுக்கு பதிலா எங்க கிட்டயே காட்டி "டேய், தருமிங்களா, மரியாதையா அந்த பக்-அ fix பண்ணி நக்கீரன் மூஞ்சில fair and lovely பூசுங்கடா"னு பெரிய atom bomb போட்டார். (*எல்லாம் நேரம் தான், இவர் எவன் கிட்டயோ வாங்குவாராம், நாங்க fix பண்ணனுமாம்*)

"ஐயோ சொக்கா சொக்கா இப்படி சொருவிட்டியே, இதுக்கு அந்த நக்கீரனே மேல்"னு புலம்பிட்டு ராத்திரி எல்லாம் நைட் அவுட் போட்டு அந்த பக்-அ fix பண்ணோம். ஆனாலும் அந்த நக்கீரருக்கு எங்க மேல கோவம் தீராம சும்மா சும்மா பொருட்குற்றம் கண்டுபிடிச்சு எங்க ராத்திரி எல்லாம் சிவ ராத்திரியா ஆக்கிட்ருந்தார். நாங்களும் சொக்கன மனசுகுள்ள சபிச்சிட்டே ஒரு வழியா எல்லா bugகும் fix பண்ணி, நக்கீரர்க்கே ரெண்டு ரிவிட் அடிச்சிட்டு வந்தோம்.

நக்கீரர்-1 மேல இருந்த கடுப்புல, 2வது கம்பனி நக்கீரர வெறி நாய விட பயங்கரமா கடிச்சு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வச்சோம். கடைசில 3-வதுகம்பனி டெஸ்ட் பண்ணி எல்லாம் பாஸ் ஆச்சுன்னு மகாராஜா கிட்ட சொல்லி 1000 பொற்காசு பரிசு வாங்கினோம்.

மறந்த moral of the story 1:
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் சிலர் தான், ஆனா குற்றம் கண்டு பிடிச்சு வாழும் புலர்வர்கள் நெறைய..
(என்ன தான் மாங்கு மாங்குன்னு கோட் அடிச்சாலும் ரிலீஸ்க்கு 2 நாள் முன்னாடி, வெத்துக்குன்னு 2 bug போட்டு பேர் வாங்கறது என்னவோ டெஸ்ட் டீம் தான்)

மறந்த moral of the story 2:
சொக்கனே சொன்னாலும், அடுத்தவன் பாட்டை எடுத்துகிட்டு அரசவைக்கு போகவே கூடாது.அப்படியே போனாலும் உண்மைய முதல்ல சொல்லிடனும்.
இல்லேனா எவனாவது நக்கீரன் கிட்ட ஆப்பு வாங்க வேண்டியது தான்

Labels:

posted by ACE !! at 2:14 AM 6 comments

Thursday, March 1, 2007

Sithan TR

குமுதம் வெப்சைட்-ல டி.ராஜேந்தர் பேட்டி போட்டிருந்தாங்க.. சரி ரொம்ப போர் அடிச்சிதுன்னு அத போய் பாத்து தொலைச்சேன். பேட்டி எடுத்தவர் ஏதோ கேள்வி கேட்டா அதுக்கு TR ஒரு 10 நிமிஷம் உளறல். எனக்கு தெரிஞ்சு ஒன்னோ ரெண்டோ கேள்வி-க்கு தான் அவர் சரியான பதில் சொன்னார்.. மீதி எல்லாம் ஏதோ எக்சாம்-ல out of sylabus questionக்கு அன்சர் பண்ர மாதிரி பேத்தலோ பேத்தல். 2 மார்க் கேள்விக்கெல்லாம் 10 மார்க் கேள்வி மாதிரி வேற அன்ஸர் பண்றார்.

உதாரணத்துக்கு "நீங்க ரொம்ப எமோஷனலான ஆளு. இப்படி எமோஷனலா இருக்கவங்ல ஈசியா ஏமாத்திடலாம்னு சொல்றாங்க, உங்கள யாராவது ஏமாத்தி இருக்காங்களா?"- கேள்வி கேட்டா நம்ம TR " சித்தன் போக்கு சிவன் போக்கு நான் சித்தன், என்னை பித்தன்னு சொல்லு ஆன எத்தன்னு மட்டும் சொல்லாத. நான் உடம்புக்கு சட்டை போடுவேன், உள்ளதுக்கு போட மாட்டேன், ஊறுகாய்க்கு போட மாட்டேன்"னு கன்னா பின்னான்னு மண்ட காய வைக்கிறார்.. ஒரு 2 நிமிஷதுல என்ன கேள்வி கேட்டாங்கன்னு மறந்தே போயிடுச்சு. அப்புறமா "என்னை யார் ஏமாத்தினாலும் நான் ஏமாத்தமா எடுத்துக்க மாட்டேன்" னு ரொம்ப கூலா சொல்றார். அத 5 நிமிஷம் முன்னாலயே சொல்ல வேண்டியது தானே.. என்னை மாதிரி ஞான சூனியங்களுக்கு சிம்பிளா சொன்னாலே கஷ்டம், இதுல இப்படியெல்லாம் முறுக்கு சுத்தினா என்ன பண்றது.. :(

அதுலயும், ஏதோ வேற ஒரு கேள்விக்கு, மன் மோகன் சிங், MGR எல்லாரையும் இழுக்கறார். ஸோனியாவோ வாஜ்பையோ PM-ஆ வர மாட்டாங்கன்னு இவர் சொன்னாராம், அத யோசிக்க ஏதோ special ஞானம் வேணுமாம், அது அவர் கிட்ட இருக்காம்.. இதெல்லாம் பாத்தா எனக்கென்னவோ, இன்னொரு யாகவா முனிவர் உருவாகராரோன்னு தோணுது.

இத வீடியோல வேற படம் புடிக்கராங்கன்னு சமயா voice modulation என்ன, (முக்காவாசி நேரம் over sound), கண்ணுல தண்ணி என்ன, நவரசத்தையும் கொட்றார். அதிலயும் "நான் நமிதா இல்லைன்னு" அவர் bear-body-அ (bare body இல்லீங்க) ஒரு குலுக்கு குலுக்கறார் பாருங்க.. கொஞ்சம் பயமா தான் இருந்துது..

கொஞ்ச நேரம் காமெடியா இருந்துது.. ஆனாலும் மீதி நேரம் எல்லாம் "கொடுமைடா சாமி" (கொடுமை உஷான்னு ஒருதவங்க ஏற்கனவே இத குத்தகை எடுதுட்டாங்க. இருந்தாலும் நாங்க சுடுவோம்ல.)
posted by ACE !! at 9:15 PM 6 comments