புலம்பல்கள் - PULAMBALGAL

Saturday, March 17, 2007

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

சில பூனைகளுக்கு என்ன சூடு பட்டாலும் புத்தி வராது. இந்த பூனையும் அப்படித்தான். பதிவுலகத்துல ரிலே கவிதையெல்லாம் எழுதி கலக்கறாங்களேன்னு நானும் கிறுக்கினேன். நிறைய பேர் டிப்ஸ்லாம் கொடுத்திருக்காங்க.. அதெல்லாம் உபயோகப்படுத்தி உளறியது தான்..

________________________________________

உளறுதல் என் உள்ளத்தின் வேலை

உளறுகிறேனாம்
உளறுகிறார்கள்
ஊரில்

கண்ணே உன்.......

கயல்விழி கணை தொடுத்து
குருடாக்கியதை
அறிந்தாரில்லை போலும்

தத்தை மொழி தவிர
வேறு மொழி கேளா
செவிடாக்கியதை
தெரிந்தாரில்லை போலும்

சுந்தர வதனம் கண்டு
சொல்லிழந்து
ஊமையானதை
உணர்ந்தாரில்லை போலும்

மாசிலா வாசம்
முகர்ந்து
மூர்ச்சையானதை
புரிந்தாரில்லை போலும்

புலனனைத்தும் இழந்து
உள்ளம் உனதாக்கிய பின்
எதைக் கொண்டு
உளறுவேன் நானும்??

____________________________

படிக்கற 2, 3 பேரும் தயவு செஞ்சி, வஞ்சப்புகழ்ச்சியில்லாம உண்மைய சொன்னா ரொம்ப நல்லாயிருக்கும்... தப்பெல்லாம் திருத்திக்க வசதியாயிருக்கும்.. அதனால மறக்காம commentடிடுங்க... :)

Labels:

posted by ACE !! at 7:35 AM

40 Comments:

nesamaalume sema super-a ezhudhi irukeenga :)

March 17, 2007 at 8:20 AM  

tamizh payangara range-a iruku....vaazhthukal :)

March 17, 2007 at 8:20 AM  

aindhu pulangalukum aapu vaachada arumaya solli irukeenga :)

March 17, 2007 at 8:21 AM  

அருமை அருமை ACE..

சுந்தர வதனம், மாசில வாசம், தத்தை மொழி..

தமிழ்ல பூந்து விளையாடி இருக்கீங்க ACE

வாழ்த்துக்கள் ACE

March 18, 2007 at 7:52 AM  

/aindhu pulangalukum aapu vaachada arumaya solli irukeenga//

ரிப்பீட்டே..

March 18, 2007 at 7:53 AM  

Ungal kavidhaiyil oru perum porutkutram ulladhu..

Idhellam kirukkalgal keezh varavendiyavaiya? kirukalgalukku artham theriyavillai enil emadhu blog pakkam etti paarum.. idhellam kavidhai aiya kavidhai :-)

Unga kavidhaiya padichadhukkae enakku ivlo effecta ;-)

Kavidhai super.. Romba rare-a use pandra wordslaan use panni irukkenga.. kalakkals :-)

En sutta english poemkku translate pannadhukku romba nandringa.. :-)

Seri romba pesitten.. naan poi unga matha postellam oru round padichittu varen :-)

March 18, 2007 at 8:02 AM  

Padichutten :-)

Modhalla unga velli vizha postukku vaazhthukkal :-)

Onsitela aani anninu solliyae imbuttu jeekiram velli vizha adichiteenga.. :-)

March 18, 2007 at 9:08 AM  

ace,
unga thamizh arumaiyaa iruku chance illa..

as you have asked for suggestions, i take a little step ahead to point out things that i think you may probably correct!!

1. thathai mozhi- "thavirthu"kku badhila " thavira"nnu sollalaame..
thoduthukku rhyminga thavirthu nnu ezhutha try panni irukeenga.. but it was not continued in rest of them.. Thavirthu is always used to denote the previosuly mentioned thing(thathai mozhi) to be avoided. thavira can be used to denote the previously mentioned thing(thathai mozhi) to be exclusively used..

2. vasam "mugarnthu"- this is okay .. but it can be better.. if u inhale the smell of flower/food its perfect to say mugarndhu-the inhaling through nose thing.. but when u inhale her(living being) fragrances, a word to say how you felt the smell is important..so, here, you can say vasathil " mei marandhu moorchaiyaagi" . by this you cover all 5 senses (mei vaai kan mooku sevi) .. its just my logic.
romba overaa irundha freea vidunga !!

March 19, 2007 at 12:34 AM  

@barani
//tamizh payangara range-a iruku//

நன்றிங்க.. தமிழ்ல ரேஞ்லாம் இல்லை, எல்லா சொல்லும் சினிமா பாட்டுல இருந்து காப்பி அடிச்சது தான்... :)

மு.க:
//அருமை அருமை ACE..//

வருகைக்குக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

g3:
//Ungal kavidhaiyil oru perum porutkutram ulladhu.. //

என்ன ஒரே ஒரு பொருட்குற்றமா?? உங்களுக்கு அடுத்த பின்னூட்டத்தை பாருங்க.. :))

//Modhalla unga velli vizha postukku vaazhthukkal :-)//

நீங்க சொன்னதுக்கப்புறம் தான் பார்த்தேன். :)

March 19, 2007 at 1:37 AM  

g3:
மிக்க நன்றி...

@priya:
//unga thamizh arumaiyaa iruku chance illa..//
மேலே சொன்ன மாதிரி எல்லாம் சினிமா பாட்டுல இருந்து கத்துகிட்டது தான்...மிக்க நன்றி...

//as you have asked for suggestions, i take a little step ahead to point out things that i think you may probably correct!!//

தவறுகளை சுட்டி காட்டியதுக்கு நன்றி.. இது என்னோட 2-வது கவிதை?? தான்.. அடுத்த முயற்சியில் தப்பெல்லாம் கொஞ்சம் குறைச்சிக்கிறேன்..

//thathai mozhi- "thavirthu"kku badhila " thavira"nnu sollalaame..
thoduthukku rhyminga thavirthu nnu ezhutha try panni irukeenga.. but it was not continued in rest of them.. Thavirthu is always used to denote the previosuly mentioned thing(thathai mozhi) to be avoided. thavira can be used to denote the previously mentioned thing(thathai mozhi) to be exclusively used.. //

நான் முதலில் எழுதும் போது "தொடுத்து" "தவிர்த்து" "பார்த்து" முகர்ந்து"னு தான் ரைமிங்கா எழுதினேன். ஆனா "பார்த்து" கொஞ்சம் பிடிக்கலை, ஏன்னு தெரியலை.. அதனால அதை கண்டுன்னு மாத்திட்டேன். மத்தது எல்லாம் அப்படியே இருந்திடுச்சி.. "தவிர்த்து"னு வந்தது தவறு தான்.. மாத்திடறேன்.

March 19, 2007 at 2:06 AM  

ace...
neenga nalla ezhuthi irukeenga.. enaku dhaan teacher budhi..kekareengalennu edhavadhu solren..
okay.. ippo purinju pochu.. ineme sollala..

March 19, 2007 at 2:08 AM  

//2. vasam "mugarnthu"- this is okay .. but it can be better.. if u inhale the smell of flower/food its perfect to say mugarndhu-the inhaling through nose thing.. but when u inhale her(living being) fragrances, a word to say how you felt the smell is important..so, here, you can say vasathil " mei marandhu moorchaiyaagi" . by this you cover all 5 senses (mei vaai kan mooku sevi)//

உங்க லாஜிக்கும் நல்லா தான் இருக்கு...கண், செவி, வாய், நாசி இதெல்லாம் இழந்ததை வெளிப்படையா சொல்லியிருந்தேன். ஆனா மெய்-க்கு ஒன்னும் தோணலை.. அதனால, கடைசி பத்தியில், "உள்ளம் உனதாக்கிய பின்"னு மறைமுகமா சொல்லிட்டேன். "புலனனைத்தும் இழந்து"னு சொன்ன அப்புறம் "உள்ளம் உனதாக்கிய பின்"னு வருது.. இதையும் ஒரு முரண்பாடா எடுத்துக்கலாம். ஆனா என்னோட விவாதம் என்னவா இருக்கும்னா புலனனைத்தும் இழ்ந்தேன்னு சொல்லிட்டேன், அதனால உள்ளமும் இழந்தாச்சு.. எப்படி இழந்தேன்னா உன்னிடம் ஒப்புவித்து இழந்தேன்னு அடுத்த அடியில் தெளிவுபடுத்தறேன்.

ரொம்ப உளறர மாதிரி இருந்தா freeya விட்டுடுங்க.. :))

March 19, 2007 at 2:12 AM  

@priya:
//neenga nalla ezhuthi irukeenga.. enaku dhaan teacher budhi..kekareengalennu edhavadhu solren..okay.. ippo purinju pochu.. ineme sollala.//

என்னங்க நான் கமென்ட் போட்டு முடிக்கவே இல்லை அதுக்குள்ள இன்னொரு கமென்டா?? ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகரீங்க..

நீங்க சொல்லலைனா எப்படி தப்பெலலாம் திருத்திக்கறது?? நீங்க சொன்னது எல்லாம் ஆக்கப்பூர்வமானவை தான்.. நீங்க சொன்னதில் எனக்கு சந்தோஷமே.. அத்னால கவலைப்படாம உங்களுக்கு தோணியதை சொல்லுங்க..நான் தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன்.. நீங்க சொல்லலைனா தான் பிரச்சனையே...

March 19, 2007 at 2:19 AM  

illave illa.. as i can follow ur logic, it does seem proper and sooper:)-

i thot meethi ellam dhaane ezhudhineenga " ullam unathakkinnu" en sonneengannu nenachen!! unadhaginnu soilveengannu nenachen.. now i get ur logic!!

March 19, 2007 at 2:22 AM  

மு.க:
//தமிழ்ல பூந்து விளையாடி இருக்கீங்க ACE//
எல்லாம் சுட்டது தான்..மிக்க நன்றி...
:))

g3:
//Seri romba pesitten.. naan poi unga matha postellam oru round padichittu varen :-) //
உங்க தலையெழுத்தை யார் மாத்த முடியும்.. கொடுமைய அனுபவிங்க..

March 19, 2007 at 2:24 AM  

ayyo naan tension ellam aagala..
in the first comment towards me, you kindaa agreed upon what i said..i thought that
neenga thappellaam seiyala..naanum onnum tamil pulavi illa...ipdi neenga explanation kudukaama nan solradha ethukireengannu nenachen..so, i thought you kindaa mistook..

but, in the next comments, i understood that i was wrong heehe..

yahoo messenger chat panra effect :)-

March 19, 2007 at 2:25 AM  

//i thot meethi ellam dhaane ezhudhineenga " ullam unathakkinnu" en sonneengannu nenachen!! unadhaginnu soilveengannu nenachen.. now i get ur logic!! //

இது நல்லா இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி, உனதாகின்னு இருந்தா நல்லா தான் இருக்கும்..

March 19, 2007 at 2:28 AM  

//in the first comment towards me, you kindaa agreed upon what i said//

நீங்க தான் சொல்லனும்.. இங்க எல்லாரும் நான் argue பண்றத கேட்டு, பேசாம வக்கீலா ஆக வேண்டியது தானேன்னு திட்றாங்க..நமக்கு எல்லாத்துக்குமே விவாதம் தான்..ஆட்சேபனை இல்லைனா yahoo messengeer id வேனா தரேன்..

ஒரு சந்தேக்ம். நீங்க ஏன் கவிதை எழுதறது இல்லை?? இல்லை நான் தான் பாக்கலையா??

March 19, 2007 at 2:34 AM  

@priya
தவிர்த்து - தவிர வா மாத்திட்டேன் :)

March 19, 2007 at 2:38 AM  

ace,

YM id kudunga!!

ipo dhaan koncha naalaa kavithai ezhuthi post panni uyira edukaaama iruken.. even in jan i have posted a kavithai..

neenga koncham aarvam kattinaa naan ungalukku bore adikra alavukku kavithai aarvam kaatuven..so beware of me :)-

this is the first kavithai that i published (kutti kutti idhuku minnadi birthday kku ezhuthi kuduthirken.but idhu dhaan first one that i stored)
http://kuttipriya.blogspot.com/2005_08_01_archive.html

interest irundha sollunga.. archivesla thedi matha links anuparen..ilaanaalum free.. naan thappa eduthuka maaten:)-

March 19, 2007 at 3:01 AM  

This comment has been removed by the author.

March 19, 2007 at 3:02 AM  

@priya

naan nichayama padippen.. intrest nerayave irukku.. nalla vaarthai irunthaa, illa usage irunthaa suttutuven :)) athanaala thairiyamaa linklam kodunga..

March 19, 2007 at 3:04 AM  

underscoreku aprom 'v'yaa??

March 19, 2007 at 11:58 AM  

@priya
Nope.. sarav_a

underscore-kku appuram a

March 19, 2007 at 7:01 PM  

//வஞ்சப்புகழ்ச்சி//

யூ மீன் உள்குத்து :-)

March 19, 2007 at 8:54 PM  

நீங்களும் தொடர் ஜோதில ஐக்கியம் ஆகிட்டீங்களா...கவித சூப்பர்...தப்பு கண்டுபுடிக்கற அளவுக்கு நமக்கு ஞானோதயும் இல்லீங்கோ :-)

March 19, 2007 at 8:55 PM  

Neengalumaa...Super...

Aaha tamil vaarthaigala summa pugundhu vilayaadirukeenga...

School la tamil seyula padicha words maadhiri irukkudhu enakku...

Nalla poem...

March 20, 2007 at 10:03 AM  

//புலனனைத்தும் இழந்து
உள்ளம் உனதாக்கிய பின்
எதைக் கொண்டு
உளறுவேன் நானும்??//
super varigal ace!!!
arumaiyana varthai prayogangal!!!
idu pondru niraya kavithaigal ezhutha en vazhthukal

March 20, 2007 at 11:45 AM  

@syam

//யூ மீன் உள்குத்து :-) //

ஆமாங்க.. அதே தான்.. உங்க அளவுக்கு நமக்கு தமிழ்ல பரிச்சயம் இல்லீங்கோ.. இனிமே இந்த சொல்லயே போட்டுடறேன்..

//தப்பு கண்டுபுடிக்கற அளவுக்கு நமக்கு ஞானோதயும் இல்லீங்கோ :-)//

என்ன நாட்டாமை இப்படி சொல்லிட்டீங்க.. அதான் முதல் பின்னுட்டத்துல ஒரு திருத்தம் சொல்லிட்டீங்களே..:)

@Raji

வருக வருக..

//School la tamil seyula padicha words maadhiri irukkudhu enakku...//

இருக்காதா பின்ன.. எல்லாம் அங்கேந்து சுட்டது தானே.. :))

March 20, 2007 at 6:57 PM  

@dubukku diciple..

//super varigal ace!!!
arumaiyana varthai prayogangal!!!
idu pondru niraya kavithaigal ezhutha en vazhthukal //

ஆகா.. வாங்க வாங்க.. முதல் முதல்ல வரீங்க.. என்ன சாப்பிடறீங்க.. ஐயோ காலும் ஓடல கையும் ஓடல.. பெரியவங்க எல்லம் நம்ம குடிலுக்கு வந்து சிறப்பிச்சிருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க..அடிக்கடி வாங்க..

March 20, 2007 at 7:01 PM  

@வேதா

உங்கள் வருகையும் நல்வரவாகுக.. ரொம்ப நன்றிங்க.. முதல் முறைய வரீங்க.. உங்க பதிவெல்லாம் படிச்சிருக்கேன்.. அருமைய எழுதறீங்க.. வாழ்த்துக்கள்..

March 20, 2007 at 7:04 PM  

innaikku onnum ezhuthala pOla..

iNthaanGka, Namma Attendance, ACE :-)

March 20, 2007 at 10:36 PM  

என்ன தல இப்படி சொல்லிட்டீங்க.. அதுக்கப்புறம் மொக்கை 2 போட்டாச்சு..

March 21, 2007 at 1:13 AM  

@MK

தல, தப்பான இடத்துல பாக்கறீங்க போல.. இங்கே சுட்டுங்க..

http://thollayothollai.blogspot.com

March 21, 2007 at 1:21 AM  

//ஆகா.. வாங்க வாங்க.. முதல் முதல்ல வரீங்க.. என்ன சாப்பிடறீங்க..//
neenga anba oru tumbler thanni kuduthalum seri thaanunga!!!

// ஐயோ காலும் ஓடல கையும் ஓடல.. பெரியவங்க எல்லம் நம்ம குடிலுக்கு வந்து சிறப்பிச்சிருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க..அடிக்கடி வாங்க..//
idula ul kuthu eduvum illeye???
adikadi varen kavalai padatheenga

March 21, 2007 at 12:05 PM  

//புலனனைத்தும் இழந்து
உள்ளம் உனதாக்கிய பின்
எதைக் கொண்டு
உளறுவேன் நானும்??//
எப்பிடி இப்பிடியெல்லாம் தோணுதோ போங்க! உளறுவதற்கும் சரக்கு வேணும்னு நிரூபிச்சீட்டீங்க அண்ணா!

March 21, 2007 at 6:43 PM  

//idula ul kuthu eduvum illeye???
adikadi varen kavalai padatheenga //

உள்குத்தெல்லாம் இல்லீங்கோ!!! தமிழ் நாட்டு விருந்தோம்பல் தான்.. தைரியமா வாங்க :)

March 22, 2007 at 1:25 AM  

//எப்பிடி இப்பிடியெல்லாம் தோணுதோ போங்க! உளறுவதற்கும் சரக்கு வேணும்னு நிரூபிச்சீட்டீங்க அண்ணா!
//

வாங்க மதுரைகாரரே.. உளறரதுக்கு எதுக்குங்க சரக்கு எல்லாம்.. சும்மா நீங்களும் வார்த்தைய மாத்தி மாத்தி போட்டு பாருங்க.. தானா வந்துடும்..வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.. :)

March 22, 2007 at 1:28 AM  

மு.கா பதிவிலிருந்து இங்கே வந்தேன்.

இதைப் பாருங்கள்... உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கலாம்:

அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்

பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் :-)

March 22, 2007 at 2:28 AM  

Beautiful!!
really!! :-)

April 7, 2007 at 9:52 AM  

Post a Comment

<< Home