புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, March 18, 2007

தூக்கம் போச்சுடி.. யம்மா....

நான் காலேஜ் படிக்கும் போது சிங்கம் மாதிரி தான் இருந்தேன். உடனே வீரத்தோட, ராஜா மாதிரின்னு நீங்க தப்பா நெனைச்சா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன். நான் சொல்ல வந்தது என்னன்னா சிங்கம் மாதிரி பரட்டை தலயோட, பங்க் வச்சிகிட்டு, நல்லா சாப்ட்டு சாப்ட்டு, 18 மணி நேரம் தூங்கிட்டு, சோம்பேறியா இருந்தேன்னு. இப்படி சிங்கம் மாதிரி சந்தோஷமா இருக்கறது பிடிக்காத ஒரு நண்பன், ஆர்வக்கோளாருல உடம்ப தேத்துவோம்னு ஜிம்முல(gym) சேத்து விட்டான். காலெஜ்க்கு அதி காலை 10 மணிக்காவது போகனும்னா நடு ராத்திரி 5 மணிக்கு எழுந்து 5.30 மணிக்கு ஜிம்முக்கு போனா தான் உண்டு.. அப்ப தான் 8 மணிக்கு பஸ்-அ புடிக்க முடியும்... அந்த அஞ்சரைக்கு தான் இந்த சிங்கத்தை ஏழரை (saturn 7.30) பிடிச்சுது..

இப்படி நடு ராத்திரில எழுந்தா க்ளாஸ்ல உக்காந்தா தூக்கம் தான் வரும். அதுவும் காலைல கடைசி பீரியட், மதியம் முதல் ரெண்டு பீரியட் ரொம்பவே அவஸ்தை. அப்போன்னு பாத்து ஒரு பாவப்பட்ட மனுஷன் (MK~) முக்காவாசி நாள் இந்த மூனு பீரியட்ல எதாவது ஒரு பீரியட்க்கு வருவார்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் எல்லாம் இல்லை. அதனால அவர் பீரியட்ல தூங்கிடுவேன். மாப்பிள்ளை (கடைசி)பென்ச் தான்.. அதானால ரொம்ப வச்தியா போச்சு..

ஒரு நாள் உள்நாட்டு சதியால அவருக்கு விஷயம் தெரிஞ்சு வந்து எழுப்பினார்.. என்னப்பா தூங்கறன்னு கோவமா கேட்டார். இதுக்கெல்லாம் சிங்கம் பயந்திடுமா என்ன?? நான் ரொம்ப பொறுமையா "சார், நான் மத்தவங்க மாதிரி க்ளாச்ல டிஸ்டர்ப் பண்றதில்லையே.. அமைதியா தூங்கிட்டு தானே இருந்தேன்.."ன்னு லாஜிக் சொன்னேன். (மறந்துட்டேன்.. சிங்கம் மாதிரியே அறிவாளியாவும் இருந்தேன் he he he he) அவரும் லாஜிக் பிடிச்சு போய் "அதுவும் சரி தான் நீ தூங்கினா கூட பரவா இல்லை, டிஸ்டர்ப் பண்ணாத"ன்னு தூங்கறதுக்கு அனுமதி கொடுத்துட்டார்..

அப்புறம் என்ன.. தினம் தூங்குவேன், க்ளாஸ் முடியும் போது அட்டென்டென்ஸ்க்கு பசங்க துயில் எழுப்புவாங்க, எழுந்த உடனே "யெஸ் சார்"னு சொல்லிட்டு.. அடுத்த பீரியட்க்கு fresh ஆயிடுவேன். இப்படியே கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள், இதே மாதிரி எழுப்பினாங்க.. நானும் "யெஸ் சார்" சொன்னேன்.. சொன்ன உடனே, நண்பர்கள் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. MK~வும் அட்டென்டென்ஸ்ல அடுத்த பேர கூப்பிடாம என்னயே ஆச்சர்யத்தோட பாக்கறார்.. மொத்த க்ளாசும் என்னையே பாக்குது... MK~ சிரிச்சுகிட்டே முன்னடி வாப்பா மின்னல்னு கூப்பிட்டார்.. என்னடா சரியான லூசா இருக்காங்க.. அட்டென்டென்ஸ் குடுத்தா முன்னடி வா பின்னாடி வான்னு இமசை பண்றாங்கன்னு முனுமுனுத்துகிட்டே தூக்க கலக்கத்தோட போனேன்.

முன்னாடி போனா "சரி, நீ எந்த பார்ட் செமினார் எடுக்கற?? 5th chapter part 1ஆ இல்ல part 2ஆ??"ன்னு கேட்டு இந்த சிங்கத்த ஒரு நொடில சாச்சிட்டாரு.. தலயெல்லம் சுத்துது.. என்னாது... ??? செமினாரா..?? நானா..?? அதுவும் இந்த சப்ஜெக்ட்லயா...??? ஐயோ.. இது என்னடா சோதனைன்னு ஆடியே போயிட்டேன்.. என்ன நடக்குதுன்னு புரியாம திரு திருன்னு முழிச்சேன்.. க்ளாஸே சிரிக்குது.. அடுத்தவனுக்கு ஆப்புனா தான் அல்வா சாப்பிடற மாதிரியாச்சே நம்ம பாசக்கார பயலுவலுக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் புரிஞ்சுது சதி காரப் பசங்க, வயத்தெரிச்சல்ல செமினார் யார் எடுக்கறீங்கன்னு கேட்டதுக்கு தூங்கிட்ருந்த என்னை எழுப்பி காமெடி பண்ணியிருக்காங்கன்னு.. நானும் என்ன ஏதுன்னு தெரியாம செக்கு மாடு மாதிரி "யெஸ் சார்" சொல்லி மாட்டிகிட்டேன்.

நமக்கு தெரிஞ்ச what is your name? english-அ வச்சிட்டு செமினர்லாம் கொடுக்க முடியவே முடியாதுன்னு, MK~ கிட்ட, "சார், உங்க க்ளாஸ்ல நான் சரியா கவனிக்கல, அதனால எனக்கு திடீர்னு கடைசி சாப்டர் (chapter) படிச்சா புரியாது"னு பொய் சொல்லி பாத்தேன்.. மனுஷன் கேக்கல.. "சார், டாக்டர் என்னை ப்ளாக் போர்ட் (black board) கிட்ட நின்னு பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்"னு உண்மைய கூட சொன்னேன்.. ஒன்னும் வேலைக்காகலை.. நான் ஜிம்முக்கு எல்லாம் போறேன்னு மறைமுகமா மிரட்டல் கூட விட்டு பாத்தேன்... மனுஷன் மசியவே இல்லை.. உன்னை பழி வாங்காம விடமாட்டேன், நீ தான் செமினார் எடுக்கனும். இது தான் என்னோட தீர்ப்புன்னு syam* மாதிரி சொல்லிட்டு போயிட்டார்.

இதெல்லாம் ரொம்ப அநியாயம். நான் தூங்கறது பிடிக்கலைன்னா தூங்காதன்னு சொல்லி இருக்கனும், அத விட்டுட்டு செமினார் எடுக்க வச்சா என்ன அர்த்தம். தூங்கினவனுக்கு எப்படி செமினார் எடுக்க தெரியும். கடவுளே நீ தான் ஒரு வழி காட்டனும். மழை புயல்னு வந்து 1 வாரம் காலேஜ் லீவ் விடனும்னு வேண்டிகிட்டேன். கடவுள் என்னிக்கு நம்ம பேச்சை கேட்டிருக்காரு?. கடவுள் "டேய் மேங்கோ.. உன் அல்ப செமினார்க்கு எல்லாம் புயல் மழை வராது.. அதுவும் இது ஏப்ரல் மாசம்... பேசாம படிச்சு செமினார் எடு"ன்னு கை விட்டுட்டார்.

இந்த கடவுளுக்கு நம்மள கை விடறதே வேலையாப் போச்சுன்னு கைபுள்ள மாதிரி புலம்பிட்டு வேற வழியே இல்லாம, ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அந்த இத்து போன சப்ஜெக்ட்ல செமினார் எடுத்தேன்.. நம்ம பாசக்கார பயலுங்க எல்லாம் "என்னடா, போர்ட் கிட்ட கொஞ்சிட்டு இருக்க", "போர்ட்ல என்ன மொழில எழுதியிருக்க??" "செமினார்க்கு ஸ்பெல்லிங் (spelling)என்ன??" னு அறிவுப்பூர்வமான சந்தேகம்லாம் கேட்டு ஊக்கப்படுத்துனாங்க.. MK~வும் "இப்போ தெரியுதா என் கஷ்டம்னு" நக்கலா நினைசிட்டு உக்காந்திருந்தார்.. அவர் முகத்துல அப்படி ஒரு அல்ப சந்தோஷம்.. சை.. அந்த 40 நிமிஷத்துல இந்த சிங்கம் அடைந்த அசிங்கத்துக்கு அளவே இல்லை.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... singam is crying ya)

அன்னிக்கு போன தூக்கம் தான்.. இன்னிக்கும், மீட்டிங், ட்ரைனிங், லெக்சர்னு எங்க போனாலும் தூங்க முடியாம ரொம்ப கஷ்டபட்டு, தூங்கறவங்கள பாத்து வயித்தெரிச்சலோட , "க்ளாஸ் ரூமிலே..... யம்மா.... தூக்கம் போச்சுடி... யம்மான்னு" புலம்பிட்டு இருக்கேன்.. தூங்கறதுக்கு வழி ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா...ப்ளீஸ்..

படிக்கற கொஞ்சம் பேரும், எதயாவது கமென்ட்ல சொல்லிட்டு போங்க ப்ளீஸ்..

டைப் அடிக்க ரொம்ப கஷ்டமா இருந்தா நானே கீழ டைப் பண்ணி இருக்கேன்.. அவங்கவங்க இஷ்டத்துக்கு எதாவது ஒன்னே ஒன்ன மட்டும் கமென்ட்ல copy paste பண்ணிக்கோங்க :)

copy & paste 1 : த்த்தூதூதூதூதூதூ..............

copy & paste 2 : எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...

_________________________________________________
* syam = நாட்டாமை.. வேறெந்த மேம்படுத்தும் எண்ணமும் இல்லை.. :))

Labels:

posted by ACE !! at 10:27 PM

49 Comments:

LOL!Came through g3 comment section.
nagaisuvai saralama varudhu.:D
Enjoyed reading.

March 20, 2007 at 8:55 PM  

//* syam = நாட்டாமை.. வேறெந்த புண்படுத்தும் எண்ணமும் இல்லை//

என்னாது இது சின்ன புள்ளதனமா இருக்கு...இந்த அமெரிக்கா வந்து எல்லோரும் கெட்டு போய்டாங்கப்பா...எது எதுக்கு தான் * போடுறதுனு இல்லாம...நாங்க எல்லாம் நிஜமா புண்படுத்துனாலே கண்டுக்க மாட்டோம்... :-)

March 21, 2007 at 12:36 AM  

மொத்தத்துல காலேஜ்ல என்ன மாதிரியே சிங்கமா கர்ஜித்து இருக்கீங்க...வாழ்க வளமுடன்..இனம் இனத்தோட தான சேரும் :-)

March 21, 2007 at 12:37 AM  

@skm:

//nagaisuvai saralama varudhu.:D//

வருக வருக.. முதல் முறையா வரீங்க.. ரொம்ப நன்றிங்க.. நீங்க நகைச்சுவைனு சொல்றீங்க.. நமக்கு எல்லாமே புலம்பல் தாங்க.. :):)


@syam

//எது எதுக்கு தான் * போடுறதுனு இல்லாம.//

நன்றி நாட்டாமை.. மன்னிச்சுடுங்க.. இப்போ மாத்திட்டேன்..:).. சரி நம்ம சிபாரிசை மறந்துடாதீங்க..
:))

//மொத்தத்துல காலேஜ்ல என்ன மாதிரியே சிங்கமா கர்ஜித்து இருக்கீங்க...வாழ்க வளமுடன்..இனம் இனத்தோட தான சேரும் :-) //

கர்ஜனை தானே.. அதெல்லாம் தூக்கத்துல கூட பண்றது தான்.. (குறட்டைய நாங்க இப்படி தான் சொல்லிக்குவோம்)

March 21, 2007 at 1:19 AM  

//அந்த அஞ்சரைக்கு தான் இந்த சிங்கத்தை ஏழரை (saturn 7.30) பிடிச்சுது//

லொள்ளு எல்லாம் சூப்பரா வருது ACE.. வார்த்தைல சரளமா விளையாடுறீங்க ACE

March 21, 2007 at 3:27 AM  

//என்னை எழுப்பி காமெடி பண்ணியிருக்காங்கன்னு.. நானும் என்ன ஏதுன்னு தெரியாம செக்கு மாடு மாதிரி "யெஸ் சார்" சொல்லி மாட்டிகிட்டேன்//

ஹாஹாஹா.. நல்ல நகைச்சுவையான பதிவு ACE.. ஆபீசுல படிச்சதால ரொம்ப சத்தம் போட்டு சிரிக்க முடியலப்பா

March 21, 2007 at 3:29 AM  

//இது தான் என்னோட தீர்ப்புன்னு syam* மாதிரி சொல்லிட்டு போயிட்டார்.
//

ithu ultimate ACE.. சீக்கிரத்துல மக்கள் நாட்டாமைனு சொல்றதுக்கு பதிலா ஷ்யாம்னு சொல்லப் போறாங்க ACE

March 21, 2007 at 3:31 AM  

@MK
//லொள்ளு எல்லாம் சூப்பரா வருது ACE.. //

சொந்த சரக்கு இல்லீங்கோ.. யாரோட (வேதா??) ப்ளாக்ல இருந்துச்சு.. பிடிச்சிருந்துது.. சுட்டுட்டேன்.. :))

//நல்ல நகைச்சுவையான பதிவு //

இன்னிக்கு நினைச்சா எனக்கும் சிரிப்பு தான் வருது.. ஆனா க்ளாஸ்ல ரொம்ப வருத்தமா போச்சு.. (அவமானமா போச்சுன்னு தான் எழுத நினைச்சேன்.. அப்புறம் தான் உறைச்சுது நமக்கு ஏது அதெல்லாம்னு??:)) ) ஃபிகருங்க முன்னாடி இது அரங்கேறி ரொம்ப இமேஜ் டாமேஜ் பண்ணிடுச்சு.. :))

//ithu ultimate ACE.. சீக்கிரத்துல மக்கள் நாட்டாமைனு சொல்றதுக்கு பதிலா ஷ்யாம்னு சொல்லப் போறாங்க ACE //

எல்லாம் ஒரு பில்டப் தான்.. நாட்டாமை, அமைச்சரவைல ஒரு சீட் கொடுக்க சிபாரிசு பண்றேன்னு சொல்லியிருக்கார்.. யார் கிட்டேயும் சொல்லாதன்னாரு.. அதனால ரகசியமா வச்சுடுங்க.. :))

March 21, 2007 at 4:21 AM  

வாய் விட்டு சிரிக்க வைத்ததிற்கு நன்றி.

ராஜா

March 21, 2007 at 9:23 AM  

hi ace!!!
nalla nagaichuvai..
athu eppavume namma muunadi varutha patta sambavangal ellame ippo namalai sirika vaikum...
intha mathiri niraya tortoise koluthunga

March 21, 2007 at 12:25 PM  

Hi ACE,
Ahaha nallavae comedy ya ezhudheerukkeenga...

Neenga yenna kadasi bench laa dhaan thoongirukkeenga...Namba first bench la yae thoongirukkoom la....Nambala maaadhiriyae irundhurukkenga...

March 21, 2007 at 1:59 PM  

///மழை புயல்னு வந்து 1 வாரம் காலேஜ் லீவ் விடனும்னு //

Cha cha naan mazhai puyal yellam naan koopida maataen nga....
Oru CM illa PM kaduvulae un kitta kooptikkoo nu simpleah thaan kaetpaen;)

March 21, 2007 at 2:00 PM  

13 th my fav spot..

btw, first attendance'um thaaan

March 21, 2007 at 6:47 PM  

பதிவின் தலைப்பிற்கேற்ற(தொல்லையோ தொல்லை) பதிவு!
ஆனா இந்த சிங்கத்து கதை யப் படிச்சு சிரிக்கலன்னு யாரும் சொல்ல முடியாதுங்ணா! :)

March 21, 2007 at 6:55 PM  

//நான் காலேஜ் படிக்கும் போது சிங்கம் மாதிரி தான் இருந்தேன். //
nalla velai naaana yedavadhu yosichi eludhurathukku munaaala neeeengaley solliteeeenga..

//உடனே வீரத்தோட, ராஜா மாதிரின்னு நீங்க தப்பா நெனைச்சா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன். நான் சொல்ல வந்தது என்னன்னா சிங்கம் மாதிரி பரட்டை தலயோட, பங்க் வச்சிகிட்டு, நல்லா சாப்ட்டு சாப்ட்டு, 18 மணி நேரம் தூங்கிட்டு, சோம்பேறியா இருந்தேன்னு. //

LOl.. ippadi singam'a ethanai yrs nga irundheeenga?

March 21, 2007 at 7:22 PM  

//அதி காலை 10 மணிக்காவது போகனும்னா நடு ராத்திரி 5 மணிக்கு எழுந்து//

Rotfl..

btw, kanakku idikurdhey

18hrs sleep, gym poitu college 8rhs eppadinga poveeenga?

//அதானால ரொம்ப வச்தியா போச்சு..

so, neeenga thoooonga thaaan poneeengala college'ku?

fan vasadhi ellam eppadi?

March 21, 2007 at 7:24 PM  

//நான் ஜிம்முக்கு எல்லாம் போறேன்னு மறைமுகமா மிரட்டல் கூட விட்டு பாத்தேன்... மனுஷன் மசியவே இல்லை/

neeenga singam'nu solli irundha escape aaagi irrupaaro ennamo?

//இது தான் என்னோட தீர்ப்புன்னு syam* மாதிரி சொல்லிட்டு போயிட்டார்.

theerpu naaa adhu naaataamai, naaataamai naaa adhu syam brother thaaaana....

March 21, 2007 at 7:25 PM  

//கடவுள் என்னிக்கு நம்ம பேச்சை கேட்டிருக்காரு?.//

kadasi kattathula kooopteengana eppadi'nga?

//(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... singam is crying ya)

woodwards gripe water engapaaaaa

March 21, 2007 at 7:27 PM  

//க்ளாஸ் ரூமிலே..... யம்மா.... தூக்கம் போச்சுடி... யம்மான்னு" புலம்பிட்டு இருக்கேன்.. //


neeeeenga ippa teacher'a irrukeeengala?

//தூங்கறதுக்கு வழி ஏதும் இருந்தா சொல்லுங்கப்பா//
tortise koluthunga... ellam sare aaaagidum.

March 21, 2007 at 7:28 PM  

remba comedy'a eludhi irrukeeeenga ace..... nalla irrundhaadhu..


varta.. round a 20

March 21, 2007 at 7:29 PM  

எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...
எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...
எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...
எதோ எழுதியிருக்க... பிழைச்சுப் போ...
summmmaaa try pannen ...rompa nalla joka comedya nakaisuvaya eluthi irukingo...tank u...

March 21, 2007 at 9:27 PM  

@raja:

//வாய் விட்டு சிரிக்க வைத்ததிற்கு நன்றி.//

வாய் விட்டு சிரித்ததுக்கு நன்றி.. வருகைக்கும் நன்றி :)

----------------------------------

//athu eppavume namma muunadi varutha patta sambavangal ellame ippo namalai sirika vaikum... //

உண்மை தாங்க..

//intha mathiri niraya tortoise koluthunga//

கொளுத்திடுவோம்..:)) ரொம்ப நன்றிங்க

----------------------------------

@raji

//Neenga yenna kadasi bench laa dhaan thoongirukkeenga...Namba first bench la yae thoongirukkoom la....Nambala maaadhiriyae irundhurukkenga... //

உங்க அளவுக்கு நமக்கு தில் இல்லீங்கோ.. கடைசி பென்ச்ல தூங்கினதுக்கே இவ்ளோ ஆப்புன்னா... முதல் பென்ச்ல தூங்கி இருக்கீங்களே... உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு.. (வடிவேல் ஸ்டைல்ல படிச்சிக்கோங்க) :))

//Cha cha naan mazhai puyal yellam naan koopida maataen nga....
Oru CM illa PM kaduvulae un kitta kooptikkoo nu simpleah thaan kaetpaen;) //

இதுக்கு ஒரு நாளோ 2 நாளோ தான் லீவ் கிடைக்கும்.. அதுவும் தவிர நாங்களாம் ரொம்ப நல்ல நல்லவங்க.. மத்தவங்களை துன்புறுத்தவே மாட்டோம்.. :)) :) பேசாம உங்க ஐடியாவ கடவுள் கிட்ட கேட்டிருந்தா கை விட்டிருக்க மாட்டார்னு நினைக்கிறேன்.. ரொம்ப நன்றிங்க

March 22, 2007 at 1:45 AM  

@சுப.செந்தில்

//பதிவின் தலைப்பிற்கேற்ற(தொல்லையோ தொல்லை) பதிவு!
ஆனா இந்த சிங்கத்து கதை யப் படிச்சு சிரிக்கலன்னு யாரும் சொல்ல முடியாதுங்ணா! :) //

ஆமாங்க.. மத்தவங்களை தொல்லை படுத்த தாங்க பதிவு.. உங்களை ரொம்ப தொல்லை பண்ணியிருந்தா பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கோங்க.. :)) ரொம்ப நன்றிங்க

----------------------------
@anonymous

ஆகா 4 தடவை பிழைச்சு போக விட்டுருக்கீங்க.. ரொம்ப நன்றிங்க..

_------------------------------


@ My days(Gops)
//btw, first attendance'um thaaan //

மேயருக்கு வணக்கம், வந்தனம்.. தங்கள் வரவு நல்வரவாகுக.. என்னட நம்ம போஸ்ட்க்கு 20 பின்னூட்டமா, இருக்காதே, அடிச்சு ஆட நம்ம டீம்ல யாருமே இல்லையேன்னு யோசிச்சேன்.. அப்புறம் தான் பாத்தா நம்ம சச்சின் ஸிக்ஸர் அடிச்சிருக்கீங்க..

//nalla velai naaana yedavadhu yosichi eludhurathukku munaaala neeeengaley solliteeeenga..//

ஆகா டிஸ்கி இல்லாம பதிவ போட்டா விவகாரமாயிடும் போலிருக்கே..

//LOl.. ippadi singam'a ethanai yrs nga irundheeenga? //

பங்க் கிட்ட தட்ட 2 1/2 வருஷம் வச்சிருந்தேன்.. அப்புறம் வேலைக்கு சேந்த உடனே அதெல்லாம் வெட்டிட்டு அசிங்கம் அயிட்டேன்.. :((

//kadasi kattathula kooopteengana eppadi'nga?//

நமக்கு தூங்கரதுக்கே டைம் பத்தல.. இதுல இதெல்லாம் முதல்ல இருந்தே எப்படிங்க முடியும்??


//woodwards gripe water engapaaaaa //

சிங்கத்துக்கு குழந்தை மனசு தான்.. அதனால பரவாயில்லை..சீக்கிரம் கொண்டு வாங்கப்பா..

//neeeeenga ippa teacher'a irrukeeengala?//

ஏங்க மாணவர்கள் மேல இப்படி ஒரு கொலை வெறி.. அவங்க நல்லா இருக்கரது பிடிக்கலையா??


//remba comedy'a eludhi irrukeeeenga ace..... nalla irrundhaadhu..//

ரொம்ப டாங்க்ஸ்னா!!

//varta.. round a 20 //

வர்டான்னு போயிட்டீங்களேண்ணா.. ஓ.. அந்த வர்டாவா?? சந்தோஷமா போயிட்டு வாங்கண்ணா

March 22, 2007 at 2:05 AM  

@டுபுக்கு டிசைப்பில்

உங்க பேரை பதில்ல போட மறந்துட்டேன்.. மன்னிச்சுக்கோங்க.. உங்களுக்கான பதில் ராஜாவுக்கும் ராஜிக்கும் நடுவில்.. :)

March 22, 2007 at 2:08 AM  

Vanakkam...mudan murai entry
Supera ezhudareenga.
Che..irundaalum classla namala maadiri padikira (!) pasangala thoonga vidama panni inda maanava samudaayatukke izhukku erpadutaraanga pa :-(

March 22, 2007 at 9:06 AM  

என் இனம்டா நீ :-)

March 22, 2007 at 8:45 PM  

செம ரவுசா எழுதியுருக்கீங்க.. ரொம்ப ரசிச்சேன் ஏஸ்.

காலேஜ்ல தூங்க கூட முடியாம செஞ்சிட்டாய்ங்களா பாசக்கார பயலுவ? ஆட்டோ அனுப்பனும்னா சொல்லுங்க... சங்கத்துல சொல்லி ஏற்பாடு பண்ணிடுவோம் :)

March 22, 2007 at 8:47 PM  

//
Oru CM illa PM kaduvulae un kitta kooptikkoo nu simpleah thaan kaetpaen;)
//

@raji
collegela irundhe oru kolai veriyoda thaan alanjirukeenga.. hmm...

March 22, 2007 at 8:50 PM  

@harish

//Vanakkam...mudan murai entry
Supera ezhudareenga.
Che..irundaalum classla namala maadiri padikira (!) pasangala thoonga vidama panni inda maanava samudaayatukke izhukku erpadutaraanga pa :-( //

வருக வருக!!
ஆமாங்க... க்ளாஸ்ல நிம்மதியா தூங்க ஒரு சட்டம் போடனும்..


@arunkumar

//என் இனம்டா நீ :-) //

இனம் இனத்தோட தானே சேரும். :)

//செம ரவுசா எழுதியுருக்கீங்க.. ரொம்ப ரசிச்சேன் ஏஸ்.//

ரொம்ப நன்றிங்க..

//காலேஜ்ல தூங்க கூட முடியாம செஞ்சிட்டாய்ங்களா பாசக்கார பயலுவ? ஆட்டோ அனுப்பனும்னா சொல்லுங்க... சங்கத்துல சொல்லி ஏற்பாடு பண்ணிடுவோம் :)//

விடுங்க. விடுங்க.. சின்னப்ப்சங்க..

//collegela irundhe oru kolai veriyoda thaan alanjirukeenga.. hmm... //

கரைக்டா சொன்னீங்க.. நாட்டாமைக்கு, அவங்க டேமேஜர் தலைல ஆணி அடிக்க ஐடியா வேற கொடுக்கறாங்க.. ஜாக்கிரதையா இருக்கனும் போல..

March 23, 2007 at 7:48 AM  

Helo!
This work is very good. thank you
have a good weekend

March 23, 2007 at 9:17 AM  

Arun
//collegela irundhe oru kolai veriyoda thaan alanjirukeenga.. hmm... //

Oru small correction ngoo..
College la irundhu illa School la irundhae;)

March 23, 2007 at 9:22 AM  

//மத்தவங்களை துன்புறுத்தவே மாட்டோம்.. :)) //

Aanaalum ungalukku romba nalla manasunga....


Namba naatu makkals naalla irukanumula..Adhaan apdi vendipoom...
Puyal mazhai na neraya prichanai varum...Nivaaruna nidhii adhula vera sadhi panuvaanga...Adhaan ..Hehehe yepdi namba idea?

March 23, 2007 at 9:26 AM  

First time here..

//காலெஜ்க்கு அதி காலை 10 மணிக்காவது போகனும்னா நடு ராத்திரி 5 மணிக்கு எழுந்து 5.30 மணிக்கு ஜிம்முக்கு போனா தான் உண்டு.. அப்ப தான் 8 மணிக்கு பஸ்-அ புடிக்க முடியும்... அந்த அஞ்சரைக்கு தான் இந்த சிங்கத்தை ஏழரை (saturn 7.30) பிடிச்சுது..
//

neenga solre antha nadu raathiri 5, early morning 10 ellam ippa thaan enakku apply aaguthu...

My college used to start by 8.

March 23, 2007 at 7:03 PM  

neenga nalla interestinga narrate panreenga..

March 23, 2007 at 7:06 PM  

மாப்ள, இந்த கதையெல்லாம் நீ சொன்னதே இல்லையே. கலக்கலா எழுதியிருக்கேடா

March 23, 2007 at 8:08 PM  

//18hrs sleep, gym poitu college 8rhs eppadinga poveeenga?//

இப்படி கேட்கப்படாது.. சிங்கம் அழுதுடும் கோப்ஸ் :-)

March 23, 2007 at 8:27 PM  

/ ஃபிகருங்க முன்னாடி இது அரங்கேறி ரொம்ப இமேஜ் டாமேஜ் பண்ணிடுச்சு.. //

நல்லா எல்லா ஃபிகருங்களையும் கேட்டுப்பாருங்கோ ACE.. யாராவது ஒரு ஆள், ரெட்டைசடை பின்னி, ஒத்தப் பக்கம் பூ வச்ச ஒரு ஆள், உங்க மேல பரிதாபப்பட்டு வருத்தப்பட்டிருக்கும்.. கவனிக்காம விட்டுட்டீங்களே ACE.. இந்நேறம் ஒரு காதல் கதையே நடந்திருக்கும்..

மிஸ் பண்ணிட்டப்பா ACE :-)

March 23, 2007 at 8:29 PM  

naanum vandhutten! :)

March 23, 2007 at 11:08 PM  

rotfl :) enakkum idhu pola anubava ellam undu collegela! :p

March 23, 2007 at 11:08 PM  

// College la irundhu illa School la irundhae;) //

என்னங்க இப்படி பயமுறுத்தறீங்க.. எதாவது தப்பா சொல்லியிருந்தா பேசி தீத்துக்குவோம் வன்முறையெல்லாம் வேணாம்... சொல்லிட்டேன்.. :( :(

March 24, 2007 at 4:43 AM  

// neenga solre antha nadu raathiri 5, early morning 10 ellam ippa thaan enakku apply aaguthu...
My college used to start by 8. //

வருக வருக....காலேஜ்னா அப்படி இப்படி தான் இருக்கும், ஆனா நம்மளாம் அத கடைபிடிக்க கூடாதுங்க.. அதெல்லாம் சிங்க வர்கத்துக்கே அவமானம்.. :) :)

BTW, college life is the best part of anyone's life. Enjoy!!!

March 24, 2007 at 4:48 AM  

@//mgnithi
neenga nalla interestinga narrate panreenga //

ரொம்ப நன்றிங்க

March 24, 2007 at 4:49 AM  

//@Sun
மாப்ள, இந்த கதையெல்லாம் நீ சொன்னதே இல்லையே. கலக்கலா எழுதியிருக்கேடா //

டென்ஷன் ஆகாத மாம்ஸ்.. நம்ம அருமை பெருமையெல்லாம் நம்மளே சொல்லக்கூடாதுன்னு இத்தனி நாள் சும்மா இருந்தேன்.. :))

@MK, Gops
//18hrs sleep, gym poitu college 8rhs eppadinga poveeenga?
இப்படி கேட்கப்படாது.. சிங்கம் அழுதுடும் கோப்ஸ் :-) //

ஆகா சிங்கத்த சொறண்டிப்பாக்கறாங்கப்பா... இருங்க ஷூ கழட்ரேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. கைல 10 விரல் தானே இருக்கு.. இன்னும் 8 விரல் வேணும்.. அதுக்கு தான்...

பஸ்ல போக வர 4, ராத்திரி ஒரு 8 (9PM - 5ஆM).. க்ளாஸ்ல ஒரு 1.. ஐயோ... கணக்கு இடிக்குதே.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........)

யப்பா அக்கவுன்டன்ட் கோப்ஸ், நல்லாயிருப்பா, நல்லாயிரு.. ஆபிஸ்ல....., டேமேஜர், கணக்கு போட சொன்னா திட்டுங்க...... இங்க வந்து கணக்கு கேட்டு சிங்கத்தை அசிங்க படுத்துங்க... (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...)

March 24, 2007 at 4:58 AM  

@MK

//யாராவது ஒரு ஆள், ரெட்டைசடை பின்னி, ஒத்தப் பக்கம் பூ வச்ச ஒரு ஆள்,//

ரெட்டை சடை, ஒத்த ரோஜாப்பூ..ஆமாயா, ஆமா. அப்படியே பாத்த மாதிரியே சொல்றீங்களே..

//மிஸ் பண்ணிட்டப்பா ACE :-) //

ஆகா... நான் தான் மிஸ் பண்ணிட்டேனா??
ஐயோ.. ஐயோ... இப்போ வந்து சொல்றீங்களே... இதெல்லாம் நடக்கும் போது இந்த மாதிரி சொல்லி கொடுக்க ஒரு நண்பனும் இல்லயே... (அவ்வ்வ்வ்...)

March 24, 2007 at 5:04 AM  

@PORKODI

//anum vandhutten! :) //

சுகாதாரத் துறை அமைச்சரா...?? வாங்கம்மா வாங்க.. வருவீங்கன்னு கொஞ்சம் முன்னடியே தெரிஞ்சிருந்தா.. இடத்த சுத்தமா தொடைச்சி வச்சிருப்பேனே...வருகைக்கு ரொம்ப நன்றிங்க

//roftl :) enakkum idhu pola anubava ellam undu collegela! :p //

நீங்க்ளும் சிங்கம் தானா...?? நம்ம இனம் தான்...

March 24, 2007 at 5:17 AM  

//Namba naatu makkals naalla irukanumula..Adhaan apdi vendipoom...
Puyal mazhai na neraya prichanai varum...Nivaaruna nidhii adhula vera sadhi panuvaanga...Adhaan ..Hehehe yepdi namba idea? //

உங்க ஐடியா ரொம்ப சூப்பருங்க.. (வேற எதாவது சொன்னா என் தலயில ஆணி அடிச்சிடிவீங்களோன்னு ஒரு பயம் தான்...) )

(ஆத்தா மகமாயி, இந்தம்மா, அடுத்தவன் தலயில ஆணி அடிக்க ஐடியா கொடுக்குது... நான் எதாவது தப்பா பேசியிருந்தாலும், அவங்க கண்டுக்க கூடாது தாயி.. உனக்கு 2 ரூவா சூடம் ஏத்தறேன்... காப்பாத்துமா)

March 24, 2007 at 6:47 AM  

This comment has been removed by a blog administrator.

April 18, 2007 at 11:05 PM  

Hillarious post, enjoyed !

September 4, 2007 at 11:26 PM  

romba nalla irunthuchu boss.... nice timing sense

May 28, 2013 at 3:19 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home