புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, March 18, 2007

ஒளிக்குமிழ் (bulb)

நம்மளும் எதாவது கவிதைன்னு கிறுக்கலாங்ர நப்பாசைல 2 கவிதை (??) கிறுக்கினேன். அத படிச்ச அத்தனை பேரும் (சரி சரி.. 3,4 பேர் தான்) நல்லா இருக்குன்னு வேற ஏத்தி விட்டாங்க.. இந்த கவிதயை வச்சி நண்பர்கள் கிட்ட / ஆபிஸ்ல படத்த போடுவோம்னு பாத்தா பல்ப் தான் நிறைய கெடைச்சுது... :(

கவிதைய படிச்ச நம்ம நண்பர் பட்டாளத்தோட கருத்துக்கள் சில...

"புதுசா எழுதற இல்ல, போக போக மத்தவஙளுக்கு புரியர மாதிரி தானா வந்துடும்" ( உண்மை தான்.. பரவாயில்லை..)

"உன் கவிதைல (??) என்ன சொல்ல வர??" (நியாயமான கேள்வி.. இத கேட்ட அப்புறம் எனக்கே சந்தேகம் வந்துடிச்சி)

"நீ எழுதினதோட உட்கருத்து என்ன??" (உட்கருத்தா?? அப்படின்னா??)

"நீ தமிழ்ல எழுதினா நல்லாயிருக்கும்" (இது ரொம்ப ஓவர்)

எல்லாரும் ஒன்னு போல இப்படியே சொல்லி பல்ப் கொடுத்துட்டாங்க... (சதிகாரர்கள்).. சரி இதெல்லம் அரசியல்ல சகஜம், இதுக்கே அசந்துட்டா எப்படி.... இந்த மாதிரி சதி பண்ணவங்கள பழி வாங்க இன்னும் 2 கவிதை கிறுக்குவோம்னு திட்டம் போட்டேன்.

எல்லாத்துக்கும் சிகரமா அந்த திட்டத்துக்கே ஆப்பு வச்சான் ஒருத்தன். அந்த சதிகாரன் என்கிட்ட "என்னடா அப்பாவெல்லாம் பாட்டுல இழுக்கற??"ன்னு ஒரு குண்டை போட்டான்.

நான் குழம்பி போய் "அப்பாவா?? யார் ப்ளாக படிக்கற நீ?? என்னுத படிடா".

நண்பன் அதுக்கு "தந்தை மொழி தவிர்த்துனு நீ தான்டா எழுதியிருக்க....".

ஆகா இப்போ புரிஞ்சுது எனக்கு, நண்பன் தத்தை மொழியை, தந்தை மொழின்னு படிசிட்டான்னு.இதுக்கே டென்ஷன் ஆயிட்டா எப்படி.. நான் "தம்பி, இது தந்தை மொழி இல்ல, தத்தை மொழி... காதலுக்கு மரியாதை படத்துல எனை தாலாட்ட வருவாளா?? பாட்டுல ஒரு வரி வருமே தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா??. ஞாபகம் இல்லயா.. அந்த தத்தை.. தத்தைனா கிளி"ன்னு விளக்கம் கொடுத்தேன்.

அந்த நல்லவன் சொன்னான் "ஓ.. தத்தை தானா அது.. நீ தப்பா அடிச்சிட்டியோன்னு நெனைசேன்.. நீ திருவள்ளுவர் மாதிரி எல்லாம் எழுதினா யாருக்கு புரியும்"னு வள்ளுவர எல்லாம் வம்புக்கு இழுத்து அவமானப்படுத்திட்டான்.

டப்புனு ஒரு சத்தம்.. என் இதயம் தான் வெடிச்சுது... நான் நொந்து போய், "அடப்பாவி, வள்ளுவர் உனக்கு என்னடா பாவம் செஞ்சாரு, அவர போய் கேவலப்படுத்தரயே??"னு நெனைச்சிகிட்டேன். கடவுளே, இந்த கொடுமைய கேக்க ஆளே இல்லையா??.. நல்ல வேளை வள்ளுவர் உயிரோட இல்ல.. உயிரோட இருந்து இத கேட்டிருந்தா என் கை காலை முறிச்சி குரல்வளையை நெறிச்சி கொன்னு போட்டிருப்பார்...

நம்மாள ஏன் ஒருத்தருக்கு அவப்பெயர்லாம் வரனும்னு ஒரே பீலிங்க்ஸா போச்சு.. :( அதனால, வாங்கிய பல்புகள் ப்யூஸ் போற வரைக்கும் கவிதையெல்லாம் மூட்டை கட்டிட்டு சொந்த கதை சோக கதை தான்...

பி.கு 1: இந்த பதிவுக்கு "தூக்கம் போச்சுடி யம்மா.."னு தான் தலைப்பு வச்சிருந்தேன். ஆனா முன்னுரையே இவ்ளோ பெரிய மொக்கையா போச்சு.. அதனால "தூக்கம் போச்சுடி... யம்மா..." அடுத்த பதிவுல.. (அது மட்டும் என்ன காவியமான்னு கேக்காதீங்க)

பி.கு 2: பல்புக்கு தமிழ்ல என்னன்னு தெரியல.. அதனால ஒளிக்குமிழ்னு போட்டுட்டேன். தெரிஞ்சவங்க சொன்னா மாத்திடறேன்.

----------------------------------------------------------------------------------

Labels:

posted by ACE !! at 8:01 PM

12 Comments:

I am the firstu :-)

March 19, 2007 at 8:55 PM  

ஒளிக்குமிழ்...என்னமா யோசிக்கறீங்க...தல கிட்ட சொல்லி உங்களுக்கு தமிழ் வளர்ப்புதுறை அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யனும் :-)

March 19, 2007 at 8:58 PM  

//தத்தை மொழியை, தந்தை மொழின்னு படிசிட்டான்னு//

ROTFL...யாரு என்ன சொன்னாலும் முன் வெச்ச கால பின் வைக்க கூடாது...அடிச்சு ஆடுங்க :-)

March 19, 2007 at 8:59 PM  

oru 3 para comment adichen.finalaa submit panna posukkunnu kaanaa pochu.. no patience now.. wiill tell it later :)-

March 20, 2007 at 6:17 AM  

//சந்தேகம் வந்துடிச்சி//
Kavinyanah ipdi thaan ..Adhukkaga ipdiya...

The same blood..

Sikkiram podunga unga kaaviyama...

March 20, 2007 at 10:09 AM  

@syam:

நிச்சயமா உங்களுக்கு புளியோதரை உண்டு...

எனக்கு அமைச்சர் பதவி கிட்டுமேயானால், அனைத்து பதிவுகளுக்கும் சென்று ஆங்கில கவிதைகளை தமிழாக்கம் செய்தும், சிறந்த தமிழ் கவிதைகளை சுட்டு நம் பதிவில் இட்டு தமிழ் வளர்க்க பாடுபடுவேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக் கொள்(ல்)கிறேன். :)))

March 20, 2007 at 6:47 PM  

@priya

பரவாயில்லங்க.. உங்க அரிய கருத்துக்களை நேரம் கிடைக்கும் போது நிச்சயமா சொல்லுங்க.. நன்றி

@raji
//Kavinyanah ipdi thaan ..//
பாத்துங்க.. சத்தமா சொல்லாதீங்க.. நிஜ கவிஞர்கள் கல்லால அடிக்க போறாங்க.. வருகைக்கு நன்றிங்க.. காவியத்தை போட்டாச்சு...:)

March 20, 2007 at 6:50 PM  

ada ada enna tamizhakam.. naatamai solra maathiri ungaluku oru padavi kuduka vendiyathu thaan...

March 21, 2007 at 12:17 PM  

nalla comedyum kalanthu iruku

March 21, 2007 at 12:18 PM  

vanthathuku rounda 10.. edavathu parthu potu kudunga

March 21, 2007 at 12:18 PM  

@dubukku disciple

உங்களுக்கு இல்லாததா?? என்ன வேணுமோ கேளுங்க..

(ஆனா நீங்க என்ன வெறும் தண்ணி போதும்னு சொல்வீங்க.) :))

March 22, 2007 at 5:10 AM  

enna nanbare , indha bulbukkellam varutha padalaama?
podhu vaazkai-na idhellam jagajam.
neenga adichu aadunga syam sonna maathiri !!!

March 22, 2007 at 9:27 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home