புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, March 6, 2007

THIRUVILAYADAL (திருவிளையாடல்)

திருவிளையாடல் படத்துல, தருமி கதைல எல்லோரும் நக்கீரரின் பெருமைய உணர்த்தவே சிவன் அப்படி திருவிளையாடல் புரிந்தார்னு சொல்லுவாங்க. ஆனா ஒரு முக்கியமான மேட்டர விட்டுடாங்க. சிவன் தருமிய ப்ராக்ஸியா அனுப்சது எவ்வளவு பெரிய தப்பு? அதனால என்னெல்லாம் நடந்திருக்கலாம்னு நகேஷ் மாமா அருமையா புலம்புவார். ஆனாலும் ஆப்பு வாங்கின தருமிய எல்லோரும் மறந்தே போயிடுவாங்க.

அதே மாதிரி ஒரு சிச்சுவேஷன் எங்க ஆபிஸ்ல நடந்துச்சு. வாடிக்கையாளர் (மகாராஜான்னு படிங்க) ஒருத்தர் "நாங்க சர்வர் SW வாங்க போறோம், எந்த சர்வர் வாங்கறதுன்னு பயங்கர டவுட், நீங்க உங்க செல் போன்ல ஒரு க்ளயன்ட் SW போட்டு கொடுத்து எங்களோட ஐயத்தை தீர்த்து வைங்கன்னு சொன்னாங்க. (தீத்து வச்சா ப்ராஜெக்ட் (1000 பொற்காசு) கொடுப்பாங்கன்னு நாங்களே நினைச்சிகிட்டோம்).ஸெட் அப் இதான்: நாங்க எங்க க்ளையன்ட் SW கொண்டு போய் 3 சர்வர் கம்பனியோட டெஸ்ட் பண்ணி எல்லாம் ஓ.கேன்னு சொல்ற கம்பனிய செலக்ட் பண்ணுவாங்க.

சரி நல்லதா போச்சு, ஆணி பிடுங்கிட்ருந்த நமக்கும் வேலை வந்துடுச்சேன்னு சதோஷமா ஓ-போடறதுக்கு முன்னாடி எங்க சொக்கன் (எங்க டேமேஜர் தான்), எவனோ 3rd party கிட்ட இருந்து ஒரு SW வாங்கி கொடுத்து, இத போன்ல போட்டு எடுத்துட்டு போங்கன்னு உத்தரவ போட்டார். சொக்கன் சொல்லை எப்படி தட்றதுன்னு நானும் இன்னொரு தருமியும் பேய் முழி முழிசிட்டு தருமி மாதிரியே "இது என்ன Softwareரோ, வொர்க் ஆகும்னு எப்படி நம்பறது? வொர்க் ஆகலைனா உதை யார் வாங்கறது?"ன்னு கேட்டோம். சொக்கன், நல்லா சகுனி மாதிரி யோசிச்சு, சர்வர் கம்பனி 3-ல இருந்து புற வாசல் வழியா ரெண்டு பேர வரவழைச்சு அவங்க சர்வரோட டெஸ்ட் பண்ண வச்சார். டெஸ்ட் எல்லாம் சூப்பர் சக்ஸஸ், இனிமே என்னன்னு நாங்களும் (தருமி 1 அன்ட் தருமி 2) மகாராஜா அரசவைக்கு போனோம். (க்ளையன்ட் டெஸ்ட் சென்டர்)

ஒரே ஆறுதல் என்னன்னா, அடி வாங்க இன்னொருத்தரும் இருக்கார்னு ஒரு அல்ப சந்தோஷம் தான். அங்க போனா உடனே மகாராஜா எங்களுக்கு terms & conditions எல்லாம் சொல்லி "டெஸ்டிங் ஆரம்பிக்கட்டும்"னு உத்தரவ போட்டார். நாங்களும் டெஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம். எங்க ராசி தான் ஊர் அறிஞ்ச ரகசியமாச்சே. கொஞ்ச நேரத்துலயே ரெண்டு மூணு டெஸ்ட் கேஸ் ஊத்திகிச்சி. எங்க திருநாக்கு தான் சனி பகவான் இருக்கிற திருநள்ளாறுன்னு மறந்து போய், எல்லாம் ஏற்கனவே டெஸ்ட் பண்ணியாச்சுங்ற மெதப்புல "உங்க சர்வர்ல தான் தப்பு"ன்னு நக்கலா சவுண்ட் விட்டோம். அந்த டீம் protocol expert (நக்கீரர்) சம டென்ஷன் ஆகி டேட்டா எல்லாம் அனலைஸ் பண்ணிட்டு வச்சான் எங்களுக்கு ஆப்பு. (பின்ன ஓ.சி SW வச்சிருக்கற நாங்களே இவ்ளோ அலும்புனா, சொந்தமா SW வச்சிருக்கிறவங்களுக்கு என்ன திமிர் இருக்கும்)

நக் (கடுப்புடன்) : "உங SWla பொருட்குற்றம் இருக்கு. அதனால தான் டெஸ்ட் ஃபெயில் ஆச்சு"


தருமி 1 / 2 (நக்கலா): (* நம்பறமாதிரியே இல்லயே, நாம தான் டெஸ்ட் பண்ணினோமே, சை இந்த நக்கீரர்களே இப்படி தான்*)

"அப்படி என்ன பெரிய குற்றம் இருக்கு??"


நக் 1 (சம கடுப்புல): "protocol-ல hex ல தான் ஒரு டேட்டா-வ அனுப்பணும்னு சொல்லி இருக்கும் போது நீங்க ஏன் அதை decimal-அ அனுப்பறீங்க?"

தருமி1 / 2 (ஆடி போய், திகிலுடன்): (*ஆகா இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை, இத நம்ம டெஸ்டே பண்ணலயே*) "அப்படியா, சரி நாங்க பாத்துக்கறோம், நீங்க அடுத்த டெஸ்ட் கேஸ்க்கு போங்க" (*கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாது இல்ல*)

நக் 1 (தெனாவெட்டா) : "அதெல்லம் முடியாது, இத சரி பண்ணிட்டு வந்தா தான் அடுத்த டெஸ்ட் கேஸ் போவோம்"

தருமி1 / 2 (அவ்வ்வ்வ்....) : (** நிலமை தெரியாம கழுத்தறுக்கிறியேடா**) he he இல்லீங்க, இதெல்லாம் இப்போ சட்டுன்னு சரி பண்ண முடியாது..

(*நம்ம கோட் எழுதினாலே சரி பண்ண 4 நாள் ஆகும், இதுல எவன் கோடோ, எப்படி சரி பண்றது??*)

மகாராஜா கொஞ்சம் சொல்லுங்களேன்.. (*மகாராஜாவ வேற ஸப்போர்ட் கேட்டோம்*)

மகாராஜா (தூக்க கலக்கத்தில்) : இது உங்க ரெண்டு பேர் பிரச்சனை.. நீங்களே தீத்துக்கோங்க..

நக் 1 (சந்தேகத்துடன்) : ஏன் fix பண்ண இவ்ளோ கஷ்ட படறீங்க, sw நீங்க தானே எழுதனீங்க?? இல்ல...

(**ஏற்கனவே டவுட் போல, இவனுங்க எப்படி இவ்ளோ சீக்கிரமா ச்ந் டெவலெப் பண்ணி இருக்க முடியும்னு. (நிஜமாவே கேட்டாங்க)**)

தருமி1 / 2 (பதறி போய்): அதெல்லம் இல்ல, நாங்க, நாங்களே தான் எழுதினோம். பின்ன மண்டபத்துல எவனாவது எழுதி கொடுத்தா எடுத்துட்டு வந்தோம்.. நாங்க fix பண்றோம். இன்று போய் நாளை வரோம். நெக்ஸ்ட் மீட் பண்றோம் he he

(**சொக்கா சொதபிட்டியே Grrrrrr**)

நாகேஷ் மாமா நிலைமை எப்படி இருந்திருக்கும்னு அப்போ தான் புரிஞ்சுது. அவர் மாதிரியே சம தில்லா எங்க சொக்கன் கிட்ட போய் "அங்க ஒருத்தன் இருக்கான்யா, அவன் தான் சொன்னான், நீ வாங்கி கொடுத்த sw-ல பெரிய தப்பு இருக்காம், போய் சரி பண்ண்ட்டு வான்னு அனுப்ச்சிட்டான்"னு சொன்னோம். அவ்ளோ தான்.... எங்க சொக்கனுக்கு கோவம் வந்து நெத்தி கண்ண நக்கீரர பாத்து திறக்கிறதுக்கு பதிலா எங்க கிட்டயே காட்டி "டேய், தருமிங்களா, மரியாதையா அந்த பக்-அ fix பண்ணி நக்கீரன் மூஞ்சில fair and lovely பூசுங்கடா"னு பெரிய atom bomb போட்டார். (*எல்லாம் நேரம் தான், இவர் எவன் கிட்டயோ வாங்குவாராம், நாங்க fix பண்ணனுமாம்*)

"ஐயோ சொக்கா சொக்கா இப்படி சொருவிட்டியே, இதுக்கு அந்த நக்கீரனே மேல்"னு புலம்பிட்டு ராத்திரி எல்லாம் நைட் அவுட் போட்டு அந்த பக்-அ fix பண்ணோம். ஆனாலும் அந்த நக்கீரருக்கு எங்க மேல கோவம் தீராம சும்மா சும்மா பொருட்குற்றம் கண்டுபிடிச்சு எங்க ராத்திரி எல்லாம் சிவ ராத்திரியா ஆக்கிட்ருந்தார். நாங்களும் சொக்கன மனசுகுள்ள சபிச்சிட்டே ஒரு வழியா எல்லா bugகும் fix பண்ணி, நக்கீரர்க்கே ரெண்டு ரிவிட் அடிச்சிட்டு வந்தோம்.

நக்கீரர்-1 மேல இருந்த கடுப்புல, 2வது கம்பனி நக்கீரர வெறி நாய விட பயங்கரமா கடிச்சு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வச்சோம். கடைசில 3-வதுகம்பனி டெஸ்ட் பண்ணி எல்லாம் பாஸ் ஆச்சுன்னு மகாராஜா கிட்ட சொல்லி 1000 பொற்காசு பரிசு வாங்கினோம்.

மறந்த moral of the story 1:
பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் சிலர் தான், ஆனா குற்றம் கண்டு பிடிச்சு வாழும் புலர்வர்கள் நெறைய..
(என்ன தான் மாங்கு மாங்குன்னு கோட் அடிச்சாலும் ரிலீஸ்க்கு 2 நாள் முன்னாடி, வெத்துக்குன்னு 2 bug போட்டு பேர் வாங்கறது என்னவோ டெஸ்ட் டீம் தான்)

மறந்த moral of the story 2:
சொக்கனே சொன்னாலும், அடுத்தவன் பாட்டை எடுத்துகிட்டு அரசவைக்கு போகவே கூடாது.அப்படியே போனாலும் உண்மைய முதல்ல சொல்லிடனும்.
இல்லேனா எவனாவது நக்கீரன் கிட்ட ஆப்பு வாங்க வேண்டியது தான்

Labels:

posted by ACE !! at 2:14 AM

6 Comments:

ROTFL....செம நக்கலா எழுதி இருக்கீங்க...:-)

March 9, 2007 at 1:02 AM  

@syam : நக்கல்லாம் இல்லீங்க. நெசமாலுமே புலம்பல் தான். :)

மிக்க நன்றி.

March 9, 2007 at 7:54 PM  

ace,
unga mindla eppadi ippadi ella characterukum analogy thonudho !!

lay manukum puriyara maari irundhichu!!

March 11, 2007 at 1:03 AM  

மாப்பு, கலக்கலா எழுதியிருக்கே.. இந்த டெஸ்டிங் பன்ற பயலுவலோட ரவுசு இருக்கே.. டெலிவரின்னா ஒரே சுறுசுறுப்பாகி போட்டு தாக்கி பேரை வாங்கிடரானுவப்பா..

March 14, 2007 at 10:08 PM  

wow.. unga pulambala romba nagaichuvaya solli irukeenga ace..
super.

March 22, 2007 at 9:21 PM  

mmmm நகச்சுவை கலந்த நக்கல் புராணம். தருமிகள் பாவம்தான் எப்பவுமே - சொக்கன்கள் சும்மா இருக்க மாட்டானுங்க. நக்கீரன் கிட்ட மாட்றதுக்குன்னே எவனோ எழுதுன நிரல என்னன்னே தெரியாம தருமி கிட்டே கொடுத்தனுப்பிடுவானுங்க.

November 22, 2007 at 7:32 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home