புலம்பல்கள் - PULAMBALGAL

Friday, March 30, 2007

வியர்டா?? நானா?? அட... ஆமா..

நாட்ல எவ்வளவு விஷயம் இருக்கு பேச, எழுத, ஆனா பாருங்க நம்ம மக்கள்ஸ் எல்லாம், நீ வியர்ட்னு நீயே சர்டிபிகேட் கொடுத்துக்கோன்னு தான் கேக்கறாங்க.. ஏற்கனவே, கார் திருடன்ல இருந்து ஓட்டல் வெயிட்டர் வரைக்கும் எல்லாரும் நம்மள ஒரு ரேஞ்சா தான் பாக்கறாங்க.. இதுல நான் வியர்ட்னு நானே சர்டிபை பண்ணனும்னா...... இதெல்லாம் ஆவரதில்லை..

ஒரு GK கேள்வி : எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா??

சரி, விஷயத்துக்கு வருவோம்.. தம்பி பரணியின் ஆணைக்கு அடிபணிந்து இந்த tag உலக கடலில் அடியேனும் சங்கமிக்கிறேன்..

1. வெண்டைக்காய் ஃபோபியா:

நாமெல்லாம், பசிக்கு புசிக்கற ஆளு.. ருசிக்கு புசிக்கறதெல்லாம் கம்மி தான். என்ன குப்பைய கொடுத்தாலும், சுவைச்சு பாத்து நாக்கு OK சொன்னா போதும், ஸ்வாகா தான். நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. direct attack தான்.. சில சமயம் நாக்கு OK சொல்லலனாலும், ஒரு தட்டு தட்டி சாப்பிட வச்சிடுவேன்.. (எங்க அம்மா சொன்ன சித்திரகுப்தன் கதையோட effect :( )

இந்த குணத்தால, கொரியா போன போது மத்தவங்க மாதிரி சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டபடவே இல்லை.. "என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"ன்னு கொரிய நண்பர்கள் பீல் பண்ண கதையெல்லாம் நடந்திருக்கு.. (மனசாட்சி : கொஞ்சம் சாத்திகிட்டு மேட்டருக்கு வா!!) சரி சரி,

இப்படி எந்த குப்பையும் சாப்பிடற என்னால, வெண்டைக்காய் மட்டும் சாப்பிட முடியாது.. சாம பேத தான் தண்டம் எல்லாம் வீட்டுல உபயோகிச்சும் வெண்டைக்காய் மட்டும் உள்ள போகவே போகாது... மீறி போனா, உள்ள இருக்க எல்லாரும் வெளியே வந்துடுவாங்க...

2. புதியவர்களிடம் போனில் பேச பயம்:

நமக்கு அறிமுகமே இல்லாத ஆள் கிட்ட போன்ல பேசறதுன்னா உதறல் தான். என்னவோ முகம் பாத்து பேசலனா நாக்கு எழவே எழாது.. அட்லீஸ்ட் chat /e-mail பண்ணியிருந்தா OK. யாருன்னே தெரியாத ஆளுங்க கிட்ட பேசறதெல்லாம் கஷ்டம். இந்த குணத்தால, என்ன பிரச்சனை வந்தாலும் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் பண்ண மாட்டேன்.. முடிஞ்ச அளவு emailலயே முடிக்க முயற்சி பண்ணுவேன்..வேற வழி இல்லனா, ரொம்ப யோசனை பண்ணிட்டு, ஒரு சில நாள் தள்ளி தான் போன் பண்ணுவேன்.

3. அமைதியின்மை (restlessness/hyperactive)

நம்மாள ஒரு 5 நிமிஷம் சும்மா உக்கார முடியாது.. எதாவது செஞ்சுகிட்டே இருக்கனும்... இல்லேனா பைத்தியமே பிடிச்சிடும்.. (இனிமே தானான்னு கேக்கபடாது). இதனால, யாராவது சொன்ன நேரத்துக்கு வராம ஒரு 10 நிமிஷம் லேட் பண்ணாலும், அந்த 10 நிமிஷத்துல 5 தடவயாவது போன் பண்ணிடுவேன்.. அது மட்டும் இல்ல, பாட்டெல்லாம் கேக்கும் போது, வெறும் பல்லவி மட்டும் தான் கேப்பேன்.. அது முடியருதுக்குள்ள, வேற உலகத்துல சுத்திட்டு இருப்பேன்.. ஒரே பாட்ட, ஒரு 30 தடவை கேட்டா தான், ஒரு தடவையாவது முழுசா கேட்டிருப்பேன்.. அவசர கதில முடிவெடுத்துட்டு பின்னால புலம்பரது ரெகுலரா நடக்கர ஒரு விஷயம்

அவ்வளவு தாங்க வியர்ட்.. மீதியெல்லாம் நார்மல் தான்..இருந்தாலும் சொல்றேன்..

4. சின்ன மேட்டருக்கு டென்ஷன், பெரிய மேட்டருக்கு நோ டென்ஷன்:

Eg : ஒரு கான்ஸ்டபுள் வந்து லைசென்ஸ் கேக்கற மாதிரி சப்பை மேட்டருக்கு டென்ஷன் ஆயிடுவேன்.. ஆனா பெரிய accident நடந்து ரத்த ஆறு ஓடினாலும் டென்ஷன் ஆக மாட்டேன்..

5. பைக் / கார் வேகமா காட்டுத்தனமா ஓட்டினா கிடைக்கிற போதைக்கு நான் அடிமை. சில சமயம், நண்பர்களோட, ECR ரோட்ல பைக் ரேஸ் பண்ணதெல்லாம் உண்டு.


வேலை முடிஞ்சுது.. ஆனா இன்னும் 5 பேர இழுத்து விடனுமா??.. பரணி.. இதை நீங்களே செஞ்சிடுங்களேன்.. இல்ல யாருன்னு ஐடியாவாவது கொடுங்க ப்ளீஸ்.. எனக்கு தெரிஞ்ச கொஞ்ச பேரும், இதெல்லாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்துலயே செஞ்சு முடிச்சிட்டாங்க.. :(

நம்ம தலை கார்த்தி இந்த டேக் பண்ணலைன்னு உளவு துறை மூலமா தகவல் வந்ததால, தலைவர் கார்த்தியை இந்த டேக் செய்யுமாறு அழைக்கிறேன்.. :))

Labels: ,

posted by ACE !! at 7:42 PM

79 Comments:

first comment :-)

March 30, 2007 at 10:28 PM  

//"என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"ன்னு கொரிய நண்பர்கள் பீல் பண்ண கதையெல்லாம் நடந்திருக்கு//

ROTFL...என்ன மாதிரியே சாப்பாட்டு விசயத்துல கரெக்ட்டா இருக்கீங்க..:-)

March 30, 2007 at 10:30 PM  

//நமக்கு அறிமுகமே இல்லாத ஆள் கிட்ட போன்ல பேசறதுன்னா உதறல் தான்//

இது கேக்க கொஞ்சம் புதுசாவும், வியர்டாவும் தான் இருக்கு :-)

March 30, 2007 at 10:31 PM  

//பைக் / கார் வேகமா காட்டுத்தனமா ஓட்டினா கிடைக்கிற போதைக்கு நான் அடிமை//

இதைவிட போதைய போட்டுட்டு பைக்,கார் வேகமா ஓட்டுனா இன்னும் நல்லா இருக்கும் :-)

March 30, 2007 at 10:32 PM  

சரி ரவுண்டா ஒரு 5 :-)

March 30, 2007 at 10:33 PM  

//ஒரு GK கேள்வி : எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. //

கண்டிப்பா அது நான் இல்லைங்கோ!

March 30, 2007 at 11:37 PM  

// பசிக்கு புசிக்கற ஆளு.. ருசிக்கு புசிக்கறதெல்லாம் கம்மி தான். //

எனக்கு பசியா இருந்தாலும், பிடிக்காததை கொடுத்தா தொட்டு கூட பார்க்க மாட்டேன்.. ;-)

March 30, 2007 at 11:38 PM  

You sound like exactly my brother Sundar. I can't believe it.

Ravi

March 31, 2007 at 12:33 AM  

aahaa namakku munnala makkal aajara inga?

March 31, 2007 at 9:06 AM  

//எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா//

enakkum, bharanikkum marutham valiyaagavum, maruthamku, Z valiyaagavum vandhuchu.. athukku munna theriyala :(

March 31, 2007 at 9:06 AM  

//நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. direct attack தான்//

ஆஹா! சூப்பர்! dumplings ellam saapiduveengala?

March 31, 2007 at 9:07 AM  

//நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. direct attack தான்//

ஆஹா! சூப்பர்! dumplings ellam saapiduveengala?

March 31, 2007 at 9:07 AM  

//முடிஞ்ச அளவு emailலயே முடிக்க முயற்சி பண்ணுவேன்..வேற வழி இல்லனா, ரொம்ப யோசனை பண்ணிட்டு, ஒரு சில நாள் தள்ளி தான் போன் பண்ணுவேன்//

ok.. now we officially enter weird zone!

March 31, 2007 at 9:08 AM  

naan pona commetna oru murai potta browser atha moonu murai publish pannuthu! baasha effect a?

March 31, 2007 at 9:08 AM  

நல்லா எழுதி இருக்கீங்க ! எப்படிய்யோ கோல்மால் பண்ணி 15 ஆச்சு! (பின்ன ஒரே கமெண்ட் மூனு மூறை வந்தா?)
இப்ப போய் தூங்கிட்ட காலையில் வந்து நீங்க நம்ம கடையில் போட கமெண்ட்டுக்க்கு நான் பதில் போடறேன்! ஒகெ!

March 31, 2007 at 9:10 AM  

Attendance. Aani pudingittu comments :)

April 1, 2007 at 3:48 AM  

இதெல்லாம் காலா காலத்துல கல்யாணம் ஆனா சரியாப் போய் விடும்...

April 1, 2007 at 8:50 AM  

//நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன் //

நண்டு நட்டுவாக்கிளிய விட வெண்டைகாய் கொஞ்சம் சுமாரா நல்லாதங்க இருக்கும்..try பண்ணி பாருங்க...

April 1, 2007 at 5:20 PM  

thanks fot you work.
have a good week

April 2, 2007 at 2:47 AM  

@syam:

நாட்டாமை.. எப்பவுமே புளியோதரை லைன்ல நீங்க தான் first :))

//என்ன மாதிரியே சாப்பாட்டு விசயத்துல கரெக்ட்டா இருக்கீங்க//

இந்த ஒரு விஷயத்துல மட்டும் நாம் எப்பவுமே கரெக்ட்டு தான் :) :)

//இதைவிட போதைய போட்டுட்டு பைக்,கார் வேகமா ஓட்டுனா இன்னும் நல்லா இருக்கும் :-) //

என்ன கோவம் என் மேல உங்களுக்கு.. உள்ள போகறதுக்கு வழி சொல்றீங்க இல்லனா நேரே மேலே டிக்கட் வாங்க வழி சொல்றீங்க :((

April 2, 2007 at 7:29 AM  

@My friend

வாங்க மை ஃபிரண்ட்.. முதல் முறையா வரீங்க.. :)

//கண்டிப்பா அது நான் இல்லைங்கோ! //

நீங்களும் இல்லையா?? அப்ப யாராத்தான் இருக்கும் :(

//எனக்கு பசியா இருந்தாலும், பிடிக்காததை கொடுத்தா தொட்டு கூட பார்க்க மாட்டேன்.. ;-) //

நானும் தாங்க பசியா இருக்கப்ப வெண்டைக்காய் கொடுத்தா சாப்பிட மாட்டேன்.. ;)

April 2, 2007 at 7:32 AM  

@Ravi

//You sound like exactly my brother Sundar. I can't believe it.//

என்ன இருந்தாலும் நீக்க எங்க அண்ணன் தானே... :))

@dreamzz
//ஆஹா! சூப்பர்! dumplings ellam saapiduveengala? //

டம்பிளிங் எல்லாம் ஜுஜுபிங்க..
கொஞ்சம் தள்ளியே உக்காருங்க.. பசிச்சா, உங்க கை கால் எதாவது காணாம போக வாய்ப்பு இருக்கு :))

//naan pona commetna oru murai potta browser atha moonu murai publish pannuthu! baasha effect a? //

இந்த ஐடியா கூட நல்லாத் தான் இருக்கு.. ஒரே கமென்ட பல தடவை போட்டுட்டு பாட்ஷா மேல பழி போடறது..

April 2, 2007 at 7:38 AM  

@ arunkumar

//Attendance. Aani pudingittu comments :) //

Attendence noted.. porumaya vaanga.. :)

@jegan

//இதெல்லாம் காலா காலத்துல கல்யாணம் ஆனா சரியாப் போய் விடும்...//

என்ன அனுபவமா??.. :))

@sundari
//நண்டு நட்டுவாக்கிளிய விட வெண்டைகாய் கொஞ்சம் சுமாரா நல்லாதங்க இருக்கும்..try பண்ணி பாருங்க... //


ட்ரை பண்ணாமையா?? எல்லாம் செஞ்சேங்க.. ஒன்னும் work out ஆகலை.. வெண்டைக்காய் எதிரியாவே இருப்பேன்னு சொல்லிடிச்சு :((

April 2, 2007 at 7:41 AM  

1. Vendayakka phobeia Ipdi oru vyathiya?
Research paana aaramichutaangalaam "AIMS" la ...koodiya viraivil result therinjudum...
//நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. //Apa unga thangamanikku prichanai illa...

2.Namba katchi ....Naan kooda ipdi thaan mailaa paesura alavukku phone layoo nerulayoo paesa maataen ...Innum sollanumuna en friends veetukku phone pannina avanga yeduththaan paesuvaen illa avalavudhaan...

3.Ahaaha apa edhavadhu senju kittae irupeenganu sollunga...

4,5: Aamam nga konjam weird illa thaan

4. Hmmm ipdi pala paeru irukka thaan seyuraanga...

5.Aana oru sila paerukku thaan idhu pidikkum ..So konjam vithiyasamaana vishyam dhaan...

April 2, 2007 at 10:57 AM  

Okay ..Silver jubliee comment..Oru soda annupeedunga enna?

Apuram enna Tag pannuraenu solli Tag panavae illa paartheengalaa? Very bad...

April 2, 2007 at 10:58 AM  

//எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா??//...idhu therinji irundha avanga chumma vitu vachi irupom...inneram kaimadhaan :)

April 2, 2007 at 11:34 AM  

//வெண்டைக்காய் மட்டும் சாப்பிட முடியாது//...ada kodumaye...ennoda fav vendi dhaan :)

April 2, 2007 at 11:37 AM  

//என்ன பிரச்சனை வந்தாலும் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் பண்ண மாட்டேன்//...LOL :)....vishyam illanaalum CC-ku call panni andha figure pesaradha ketpen naan :)

April 2, 2007 at 11:38 AM  

//இல்லேனா பைத்தியமே பிடிச்சிடும்//...oru velai payithiyam pudichathunaala dhaan restlessness vandhucho :)

April 2, 2007 at 11:40 AM  

//இதை நீங்களே செஞ்சிடுங்களேன்.//...ennaku theriyaamathaan naan ungala izhuthu viten...neenga ennadana ennaye ketkareenga....ezhudhina enna..yarayavdhu izhuthu vidunga....thirumba ezhudhuvaanga...naan ellam rendu thadava ezhudhalaya :)

April 2, 2007 at 11:42 AM  

//"என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"//

அவ்ளோ நல்லவுகளா நீங்க???

April 2, 2007 at 2:47 PM  

//எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா//
ennanga idu oru padivu podarthuku ivalavu nalla idea kuduthu irukaanga

April 2, 2007 at 5:07 PM  

vendaikai pidikatha??
che enaku romba pidikum

April 2, 2007 at 5:28 PM  

//இதுல நான் வியர்ட்னு நானே சர்டிபை பண்ணனும்னா...... இதெல்லாம் ஆவரதில்லை..
//
adhu ellam aaavum... neenga sollunga modhal la

April 2, 2007 at 6:56 PM  

//எந்த புண்ணியவான் இந்த tag-அ ஆரம்பிச்சது.. ரிஷி மூலம், நதி மூலம் யாருக்காவது தெரியுமா??
//

enakku therinchi enga pakkuthu veeetu uncle peru, aadhimoolam.. avarukita venumna kettu paarunga..

April 2, 2007 at 6:57 PM  

//ஆணைக்கு அடிபணிந்து இந்த tag உலக கடலில் அடியேனும் சங்கமிக்கிறேன்..
//

naan adhai vali mozhigiren....

vaaanga vaaanga vaaaanga vaaaanga vaaaanga vaaaanga

April 2, 2007 at 6:58 PM  

//பசிக்கு புசிக்கற ஆளு.//

aiya, puli pullu thingaadhu, but singam ???..ippppa thaan ketkuren..


//நாக்கு OK சொன்ன அப்புறம் அது நண்டா நட்டுவாக்களியான்னு ஆரய்ச்சி எல்லாம் பண்ண மாட்டேன்.. direct attack தான்.. சில சமயம் நாக்கு OK சொல்லலனாலும், ஒரு தட்டு தட்டி சாப்பிட வச்சிடுவேன்.. //


me too too too too too too the same

April 2, 2007 at 7:00 PM  

//"என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"ன்னு கொரிய நண்பர்கள் பீல் பண்ண கதையெல்லாம் நடந்திருக்கு..//

rotfl..eppadinga dialogue ellam thonuddhu.......:))

//மீறி போனா, உள்ள இருக்க எல்லாரும் வெளியே வந்துடுவாங்க...
//
unga wife vandhu vendikaai seianum, appuram neenga saaapduveeenga illla , appppa varuven naaan

April 2, 2007 at 7:03 PM  

//நமக்கு அறிமுகமே இல்லாத ஆள் கிட்ட போன்ல பேசறதுன்னா உதறல் தான். என்னவோ முகம் பாத்து பேசலனா நாக்கு எழவே எழாது.. //

he he he enakkum appadi thaan irundhadhu modhal'la...

ippavum thaan... starting mattum thaan trouble enaku..

April 2, 2007 at 7:20 PM  

//யாராவது சொன்ன நேரத்துக்கு வராம ஒரு 10 நிமிஷம் லேட் பண்ணாலும், அந்த 10 நிமிஷத்துல 5 தடவயாவது போன் பண்ணிடுவேன்..//

apppppa sight adikira figures kitta epadi?

//அவசர கதில முடிவெடுத்துட்டு பின்னால புலம்பரது ரெகுலரா நடக்கர ஒரு விஷயம்
//
onnum sollurathukku ilai

April 2, 2007 at 7:24 PM  

//ஒரு கான்ஸ்டபுள் வந்து லைசென்ஸ் கேக்கற மாதிரி சப்பை மேட்டருக்கு டென்ஷன் ஆயிடுவேன்.. ஆனா பெரிய accident நடந்து ரத்த ஆறு ஓடினாலும் டென்ஷன் ஆக மாட்டேன்..
//
eppadi ippadi ellam .....

appo knife a vida blade thaaan ungalukku tension aaakum pola?
ok ok noted.

April 2, 2007 at 7:26 PM  

//1. வெண்டைக்காய் ஃபோபியா://

ennanga ippadi vendakkai matterukku ellam bayapaduveengala?

April 2, 2007 at 7:48 PM  

//2. புதியவர்களிடம் போனில் பேச பயம்://

Ithu neraiya perukku irukkarathu
thaan aana customer carekku kooda phone panna yosipeenganu solreenga. ithu konjam wierd thaan.

April 2, 2007 at 7:51 PM  

// "என்ன போட்டாலும் சாப்பிடறான்டா.. எக்ஸ்ட்ரா வேற கேக்கறான்டா.. இவன் ரொம்ம்ம்ம்ம்பபபப நல்ல்லவன்டா"//

LOL

April 2, 2007 at 7:52 PM  

ennadhu idhu adisayama iruku....

April 3, 2007 at 12:56 PM  

ennake onnum puriyalaye....

April 3, 2007 at 12:56 PM  

innuma oruthar kooda...

April 3, 2007 at 12:56 PM  

maranthutaangala.....

April 3, 2007 at 12:57 PM  

irukaadhe....

April 3, 2007 at 12:57 PM  

sari...nane 50 poduren :)

April 3, 2007 at 12:57 PM  

'வியர்ட் = நான்' அப்டின்னு எழுதி சிம்பிளா முடிச்சிருக்கலாம்.. :D

April 3, 2007 at 5:25 PM  

@raji
//Research paana aaramichutaangalaam "AIMS" la ...koodiya viraivil result therinjudum...//

Antha research mudinjitta naan wierd illanu ayidum :))

//Apa unga thangamanikku prichanai illa...//

yaarukku theriyum.. varapora thangamanikku kastam thaan.. naan etha vena saapiduven.. avangalaala mudiyaathe..

//Innum sollanumuna en friends veetukku phone pannina avanga yeduththaan paesuvaen illa avalavudhaan...//

athisayama irukku.. pesa madanthaiya.. wierd thaan neenga

April 3, 2007 at 7:49 PM  

//Silver jubliee comment..Oru soda annupeedunga enna?//

Rajikku oru soda parcel pannungappa..

April 3, 2007 at 7:50 PM  

@bharani

//idhu therinji irundha avanga chumma vitu vachi irupom...inneram kaimadhaan :) //

Correcta sonnenga.. :))

April 3, 2007 at 7:50 PM  

//ada kodumaye...ennoda fav vendi dhaan :) //

Amanga.. neraya per ippadi thaan solraanga.. enna panrathu.. aandavan oru kathava moodi enakku meethi ella kathavayum thiranthu vittuttan :)

//vishyam illanaalum CC-ku call panni andha figure pesaradha ketpen naan :) //

Aha.. nee thaana avan.. :))

//oru velai payithiyam pudichathunaala dhaan restlessness vandhucho :) //

illeenga.. innum pidikala.. aana intha blogellam padichu padichu ayiduvennu nenaikiren


//thirumba ezhudhuvaanga...naan ellam rendu thadava ezhudhalaya :) //

Unga alavukku nallavanga yaarum irukka maattaanga.. (avvv...)

@சுப.செந்தில்
//அவ்ளோ நல்லவுகளா நீங்க??? //

ஆமாங்க.. (அவ்வ்வ்வ்...)

@Dr DD
//ennanga idu oru padivu podarthuku ivalavu nalla idea kuduthu irukaanga //

athu engalukku.. ungalukkenna.. Dr pattam vaangi irukeenga..

//vendaikai pidikatha??
che enaku romba pidikum //

thappa sollitten.. vendaikaaikku ennai pidikaathu.. naan enna panrathu

April 3, 2007 at 7:55 PM  

@gops
//vaaanga vaaanga vaaaanga vaaaanga vaaaanga vaaaanga //

vanthutenga.. :))

//aiya, puli pullu thingaadhu, but singam ???..ippppa thaan ketkuren..//

Intha singamum pullai thinnathu.. keerai vena saapidum :))

//me too too too too too too the same //

Parava illai, nattamai, neenga naan ellam ore case thaan..

//eppadinga dialogue ellam thonuddhu//

Ellam unga aasirvaatham thaan :))

//unga wife vandhu vendikaai seianum, appuram neenga saaapduveeenga illla , appppa varuven naaan //

Ennanga neenga.. mudhalla wife varanum.. avangalukku samaikka theriyanum.. athileyum vendaikaai samaikka theriyanum.. appuram naan sappidanum... ithellam nadanthu neenga vanthu paathu.. aiyooo ayioo.. ungala paatha enakku paavama irukku :):)

//starting mattum thaan trouble enaku.. //

Neengaluma bro' (avvv...)

//apppppa sight adikira figures kitta epadi?//

intha figure illana vera figure.. sight thaane.. adikka aala illa..

//appo knife a vida blade thaaan ungalukku tension aaakum pola?//

Eppadinga ithellam.. :))

April 3, 2007 at 7:59 PM  

@mgnithi
//Ithu neraiya perukku irukkarathu
thaan aana customer carekku kooda phone panna yosipeenganu solreenga//

Nanum rendu varushama maatha muyarchi panren.. onnum velaikahala..

@bharani

//sari...nane 50 poduren :) //

50 adicha bharanikku oru special chai sollungappa..

April 3, 2007 at 8:01 PM  

@sun

//'வியர்ட் = நான்' அப்டின்னு எழுதி சிம்பிளா முடிச்சிருக்கலாம்.. :D //

எங்கடா ஆளை காணுமேன்னு நெனைச்சேன்.. இந்த மாதிரி உண்மயெல்லாம் சபைல சொல்லக்கூடாதுன்னு தெரியாதா??

April 3, 2007 at 8:02 PM  

ada idhukku yen ipdi thalaiya pichukringa?? pala maasam munnadi indha tag suthitu irundhudhu. aparam ambi enakku tag pannapo enaku kalyana timela ezhuda mudiala! so ippo aarambichen! padhivu poda idea kudutha, adhuku enna indha bharani kaimangraru?! :(

-porkodi

April 3, 2007 at 11:11 PM  

haiya 60! :)

-porkodi

April 3, 2007 at 11:12 PM  

nallave weirdana aalu thaan neenga! agreed!! ;)

-porkodi

April 3, 2007 at 11:12 PM  

hmnn...vendaikkai matter weird dhaan

April 4, 2007 at 6:38 AM  

//athisayama irukku.. pesa madanthaiya.. wierd thaan neenga //

Paesa madandhaiya laam irundhaen oru 2,3 yrskku munnadi...
Aana ipa illa...

Aana en friends vettukku phone pannina avanga edutha mattum dhaan paesuvaen..Adhu konjam weird dhaanoo?
...

//Rajikku oru soda parcel pannungappa.. //
Veyilukku idhama irukku..Danks ba..

April 4, 2007 at 9:05 AM  

Aaha.. konjam late attendence dhaan indha vaatiyum :-)))

Aaha.. vendaikkaaikku ivvvvvvvvlo allergya??? appo ungalukku treat kudukanumna vendakka spla pottu thakalaamnu soldreenga ;-)))

//(எங்க அம்மா சொன்ன சித்திரகுப்தன் கதையோட effect :( )//
Adhu enna kadhannu thaniya oru postu podungalaen :-)

2nd point nijamaavae wierd dhaan :-)))

Matha 3 pointumae konjam normal dhaan.. romba wierd illa :D

April 4, 2007 at 5:55 PM  

@dreamzz : //enakkum, bharanikkum marutham valiyaagavum, maruthamku, Z valiyaagavum vandhuchu.. athukku munna theriyala :(//

Z-kkku porkodi vazhiyaavum.. porkodikku ambi vazhiyaavum vadhudhu.. adhukku munnadi enakkum theriyaadhu :-)

April 4, 2007 at 5:56 PM  

ACE, ஆளக்காணோம் ரொம்ப நாளா.. இது நான் வந்துட்டு போனதற்கு அடையாளம், ACE :-)

April 5, 2007 at 12:34 AM  

// வெண்டைக்காய் ஃபோபியா:
//

me too, ACE..

iNtha postai padikkaama miss pannitten pola.. :-)

April 5, 2007 at 12:35 AM  

/என்னவோ முகம் பாத்து பேசலனா நாக்கு எழவே எழாது.. அட்லீஸ்ட் chat /e-mail பண்ணியிருந்தா OK./

அட! என்ன ஆச்சர்யம்.. இதுவும் எனக்கு உண்டு ACE

April 5, 2007 at 12:36 AM  

//தெரிஞ்ச கொஞ்ச பேரும், இதெல்லாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்துலயே செஞ்சு முடிச்சிட்டாங்க///

ஸ்ஸ்...அப்பாடா.. நல்லவேளை எஸ்கேப், ACE.. :-)

April 5, 2007 at 12:37 AM  

@raji

//Aana ipa illa...//

Appa.. pen kulathukke oru izhukkahi irukkum.. nalla velai kaapathaneenga.. :)

//Aana en friends vettukku phone pannina avanga edutha mattum dhaan paesuvaen..Adhu konjam weird dhaanoo?//

Ithula santhegam veraya..:)

April 5, 2007 at 7:22 AM  

@G3

//Aaha.. konjam late attendence dhaan indha vaatiyum :-)))//

Konjcham illa.. rombave :)))

//Aaha.. vendaikkaaikku ivvvvvvvvlo allergya??? appo ungalukku treat kudukanumna vendakka spla pottu thakalaamnu soldreenga ;-)))//

Treatnu vantha pidikaathatha thaan poduveengala?? aana neenga mattum ellam pidikarathaa sapuduveenga.. nalla ennam pa ungalukku.. :((

//Adhu enna kadhannu thaniya oru postu podungalaen :-)//

Naan enna gopsa?? etha pathi vena ezhutha :(

2nd point nijamaavae wierd dhaan :-)))

amanga.. enna try pannalum maatha mudiyala..

April 5, 2007 at 7:24 AM  

@MK

//ACE, ஆளக்காணோம் ரொம்ப நாளா.. இது நான் வந்துட்டு போனதற்கு அடையாளம், ACE :-) //

ஆமாங்க.. ஆணி ஜாஸ்தி... :( பொன்னியின் செல்வன்னு ஒரு பதிவு மனசுல இருக்கு.. எழுத நேரம் ஒதுக்க முடியல... சீக்கிரம் போட்டுடறேன்.. :)


//me too, ACE..//

Neengaluma.. super.. namakku companykku oru aal irukku :))

//அட! என்ன ஆச்சர்யம்.. இதுவும் எனக்கு உண்டு ACE //

ஆகா. கேக்கவே சந்தோஷமா இருக்கு :)) நம்ம மாதிரியே இன்னொருத்தரா ??

//ஸ்ஸ்...அப்பாடா.. நல்லவேளை எஸ்கேப், ACE.. :-) //

சொல்லிட்டீங்க இல்ல.. செஞ்சிடறேன்.. :)))

April 5, 2007 at 7:29 AM  

alo! enna enakku pinnadi vandhavangluku ellam badhil varudhu? naan enna uppuku chappaniya appo? indha aatam selladhu selladhu! :)

-porkodi

April 5, 2007 at 10:30 PM  

@ porkodi

Mannichidunga porkodi.. kavanikkala.. :(( en thappu thaan.. naan thaan wierdaana aal aache :)) athanaala thaan.. :))

//ada idhukku yen ipdi thalaiya pichukringa??//

Naan pichukalainga.. yaar aarambichangalo, avanga thalaya pikka thaan :))

//haiya 60! :)//

60 adicha porkodikku oru apple juice parcel pannungappa.. :)

//nallave weirdana aalu thaan neenga! agreed!! ;)//

Intha unmaya maraikka vidaama pannittaanga namma aalungka :))

April 6, 2007 at 12:41 AM  

naan dhaan 75th comment!

thank u for wishing me on my b'day!

April 6, 2007 at 11:52 AM  

bye

April 6, 2007 at 11:53 AM  

அடடா! ரொம்ப நாளா உங்க வீட்டு பக்கம் வரனும்!னு ஆசை. ஆனா மறந்து போயிடுவேன்.
இப்ப வந்தாசு!
நான் ரொம்ப லேட் போலிருக்கு. கலக்கி இருக்கீங்க. உங்க உள்றலையும் படிச்சேன்! :)

April 6, 2007 at 5:11 PM  

edhukku ivlo tensan kuraichukonga! :)

namma kadaila paathadhu illiya neenga? ellarum evlo menakettu thuppinalum naan badhil poda kooda thupu illama iruppen! neenga theriyaa thane gavanikkala?? idhukellam manippu kettukittu... cha cha :)

-porkodi

April 6, 2007 at 9:50 PM  

naanum inniku evening + morning ukkandhu k ezhutha poren!!

subject matter strike aayiduchu!!
let me see!!

April 13, 2007 at 9:20 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home