புலம்பல்கள் - PULAMBALGAL

Saturday, April 28, 2007

வாழ்க்கை உண்பதற்கே!!!

யு.எஸ் ல ஆயிரம் விஷயம் பிடிக்காம இருந்தாலும், ஒரு நல்ல விஷயம், ரெஸ்டாரன்ட்ஸ். இந்தியன், சைனீஸ், மலாய், மெக்ஸிகன், மங்கோலியன், தாய், இட்டாலியன், கொரியன்னு எல்லா தேசத்து உணவும் கிடைக்கும். நம்ம மாதிரி சாப்பாட்டு ராமன்களுக்கு கொண்டாட்டம் தான் :) நான் சென்ற உணவகங்கள் சில
:
1. மங்கோலியன் உணவகம்:

மங்கோலியன் உணவகத்துல, சாப்பிடும் முறையே வித்தியாசமா இருக்கும். இங்க மத்த கோட்டல் மாதிரி ஆர்டர் செஞ்சு சாப்பிட முடியாது. வரிசையா எல்லா வகையான கறி (beef, pork, chicken, sausage, squid, crab, tuna, cat fish, tilapia, shrimp, mussels etc etc), தக்காளி, வெங்காயம், மஷ்ரூம், பாலக் கீரை, உருளை, முள்ளங்கி, முளைகட்டிய கடலை?? (sprouts), கேரட், கோஸ், பிராக்கலி (broccoli), முட்டை எல்லாமே சமைக்காம, பச்சயா வசிருப்பாஙக.. பக்கதுல, மிளகாய் பொடி, இஞ்சி பொடி, மல்லி பொடி.. அந்த பொடி, இந்த பொடின்னு நிறைய பொடி, தக்காளி சாஸ், சில்லி சாஸ் அதுல ஒரு 10 12 வகை வச்சிருப்பாங்க..நாம போய் ஒரு சட்டில (bowl) நமக்கு வேண்டிய கறி, காய் என்ன வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். (ஆனா அந்த bowl கொள்ளும் அளவு மட்டும் ).. இந்த உணவை சமைக்கறதுக்கு, பெரிய கல் வச்சிருப்பாங்க.. நம்ம ஊர் தோசை கல் மாதிரி, ஆனா ரொம்ப பெருசு.. அங்க ஒரு 5 - 6 சமயக்காரங்க இருப்பாங்க.. அவங்க கிட்ட உங்க சட்டிய கொடுத்தா, நீங்க கொண்டு வந்தத கல்லுல போட்டு சமைச்சு தருவாங்க.. ஒரு சில இடங்கள்ல, நூடுல்ஸையும் நீங்க சட்டில போட்டு எடுதுட்டு போகனும்.. வேற சில இடஙள்ல ஃபிரைட் ரைஸ் இல்ல டார்டியா (tortilla = நம்ம ஊர் சப்பாத்தி மாதிரி இருக்கும்) தனியா கொடுப்பாங்க..

சமையல் கொஞ்சமாச்சும் தெரிஞ்சிருந்தா பொடியெல்லம் தேவையான அளவு எடுதுக்கலாம்..இல்லேனா அப்படி இப்படி இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான் :) இங்க சாப்பாடு நல்லா இல்லைனா, சமையக்காரரை குறை சொல்ல முடியாது :) (படத்துல இருக்கறது மங்கோலியன் கிரில்)

2. ஜப்பானிய உணவகம்:

ஜப்பானிய உணவகத்துல மெயின் மேட்டரே சுஷி (sushi) தாங்க.. சுஷின்னா நம்ம ஆளுங்க எல்லாம் 10 மைல் தூரம் ஓடுவாங்க.. :) :) ஏன்னா அதுல மீன் சமைக்காம வச்சிருப்பாங்க.. ஆமா பச்ச மீனை சாதத்து மேல இல்ல உள்ள வச்சு கொழுக்கட்டை மாதிரி கையால பிடிச்சி வச்சிருப்பாங்க.. :) :)

நமக்கு ரொம்ப பிடிச்ச ஜப்பானிய உணவு நிகிரி - சுஷி (nigiri-sushi) தான். இது என்னன்னா ஒரு சிறு அளவு சாதத்தை வினகர்ல லைட்டா கலந்து நல்லா இருக பிடிசிருப்பங்க.. அந்த சாத கட்டி மேல ஒரு நல்ல 2 - 3 விரல் மொத்ததுக்கு மீன் துண்டை (தோலெல்லாம் நீக்கி, சுத்த படுத்தியது) வச்சி அழுந்த பதிச்சிருப்பாங்க.. (படத்துல இருக்கறது டூனா சுஷி)

இதை அப்படியே சாப்பிடலாம். இல்லைனா, மாங்கா இஞ்சி, வாசாபியோட (wasabi) சேத்தும் சாப்பிடலாம். வாசாபி, நம்ம ஊர் புதினா துவையல் மாதிரி பச்சை கலர்ல இருக்கும்... ஆனா ரொம்ப கார நெடி வரும். அதனால வாசாபி ஒரு சிட்டிகை போட்டு, சோயா சாஸ் (soy sauce) கலந்து கொஞம் தண்ணியா செஞ்சி வச்சிகிட்டு, அதுல நிகிரி சுஷி + மாங்கா இஞ்சி முக்கி சாப்பிட்டா, என்னா டேஸ்டு, என்னா டேஸ்டு.. முடிஞ்சா ட்ரை பண்ணுங்க.. :) :)

நிகிரி சுஷில அல்பகோர் டுனா (albacore tuna), யெல்லோ டெயில் (yellow tail) மீன்கள் நல்லா இருக்கும். சால்மன் பிடிச்சவங்க அதையும் ட்ரை பண்ணலாம் :)

இது தவிர நோரி-மாகி சுஷியும் உண்டு.. இதை பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.. இதை கடல் பாசில (sea weed = நோரி) சுத்தி வச்சிருப்பாங்க.. கடல் பாசி எனக்கு ரொம்ப பிடிக்காது.. அதனால கடல் பாசி இல்லாத சுஷி தான் சாப்பிடுவேன்.. இந்த மாதிரி ரோல் கடல் பாசி இல்லாமயும் கிடைக்கும். இந்த ரோல் உள்ள மீன் முட்டை, நண்டு எல்லாம் வச்சிருப்பாங்க.. இது கொஞ்சம் இனிப்பா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும். (படத்துல இருக்கறது சுஷி ரோல்)


3. கொரிய உணவகம்

கொரிய உணவு, ரொம்ப ஹெல்த்தி, ஒரு பவுல் சூப், ஒரு பிடி அரிசி, 1, 2 பதார்த்தங்கள், நம்ம ஊறுகாய் மாதிரி கிம்ச்சி.அவ்வளவு தான் அவங்க உணவே.. ஒரு சில ஐட்டம்லாம் நம்ம ஊர் மக்களால வாய்ல வெக்கவே முடியாது..:) (நம்ம அந்த ஸ்டேஜ்லாம் எப்பவோ தாண்டியாச்சு :) )

இவங்க சூப் ரொம்ப சத்தானது.. ஊர்ல இருக்க பேர் தெரியாத ஐட்டமெல்லாம் போட்டு கொதிக்க வச்சிருப்பாங்க..:) நம்ம ஃபேவரிட் சூப் ஆக்ஸ் போன் சூப் (Ox bone soup) தான்.. என்ன குப்பைய போடுவான்னு நானும் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.. ஒரு மண்ணும் புரியல.. சரி எதுக்கு இந்த விபரீத விளையாட்டுன்னு சாப்பிடறதோட நிறுத்திக்கிட்டேன்..

பதார்த்தம்னு பாத்தா, எதாவது மரக்கறி, மிருககறி, டோஃபு (tofu) எல்லாம் போட்டு சாப்பிடற அளவுக்கு இருக்கும். இதோட பேரெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு பாத்து பல்பு தான் நிறைய வாங்கினேன்.. :(

அடுத்து கிம்சி (kimchi) .. நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி, ஆனா ருசி ரொம்பவே கேவலமா இருக்கும். :(. எதாவது ஒரு காய்கறி, (முட்டைகோஸ், லெட்யூஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் etc), வினிகர், மிளகாய்தூள், அப்புறம், வாய்ல நுழையாத பேர் கொண்ட இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் ஒரு சட்டியில போட்டு மாசக்கணக்குல விட்டுடுவாங்க.. அது ஃபெர்மென்ட் ஆனதும். நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி சாப்பாட்டுக்கு சைட் டிஷ் ஆக்கிடுவாங்க..

இந்த சாப்பாட்டோட ஒரு பிடின்னா, ஒரு பிடி தான் சாதம் சாபிடறாங்க.. அதுக்கு சாப்பிடாமலே இருக்கலாம்... :( நமக்கு இந்த ஒரு பிடி சாதம்லாம் கட்டவே கட்டாது.. ஒரு ரெண்டு மூனு நாள் சமாளிக்க முயற்சி பண்ணேன்.. வேலைக்காகல.. அப்புறம் கூச்சபடாம, எல்லா ஐட்டமும் எக்ஸ்ட்ரா கேப்பேன்.. நம்ம ஊர் ரெஸ்டாரன்ட் மாதிரி கடுப்படிக்காம, நம்ம தட்டு எடுதுட்டு போனாலே, சந்தோஷமா எக்ஸ்ட்ரா அள்ளி அள்ளி வப்பாங்க.. பாசக்கார மக்கள் :) :)

டிபிகல் கொரிய உணவகத்துல தரைல உக்காந்து குட்டியா ஒரு டேபில்ல சாப்பிடனும். இதுல ஒரு கொடுமை என்னன்னா, ஆளுக்கு சூப், சாதம் மட்டும் தனியா இருக்கும்.. மீதி எல்லாம் பொதுவா பவுல்ல வச்சிருப்பாங்க.. எல்லாரும் அதுல இருந்தே சாப்பிடனும்.. கொஞ்சம் மெதுவா சாப்பிடற ஆளுங்களுக்கு ஆப்பு தான் :) :)

பக்கத்துல இருக்க படம் சியோலில் இருக்கும் ஒரு ரெஸ்டாரன்டில் எடுத்தது.
-------------------------------------------------------------------------------------

இது தவிர, தாய், இத்தாலியன், மெக்ஸிகன், மலாய், சைனீஸ், பிரேஸிலியன்னு ஏகப்பட்டது இருக்கு. எத்தியோப்பியன் இன்னும் ட்ரை பண்ணல, கூடிய சீக்கிரம் சாப்பிட்டு அத பத்தியும் ஒரு பதிவு போட்டுடலாம்.. :) :)

டிஸ்கி :
1. ஆணிகள் ஜாஸ்தியானதால, இந்த பதிவு டாகுமென்ட்ரி மாதிரி ஆயிடுச்சு..
2.நான் ரொம்ப ஆராய்ச்சிலாம் பண்ணல, சும்மா நான் போன ரெஸ்டாரன்ட்ல கேட்டது பாத்ததுன்னு எழுதி இருக்கேன்.. தப்பு இருந்தா கண்டுக்காதீங்க :)
3. கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)
posted by ACE !! at 7:53 PM 78 comments

Sunday, April 15, 2007

அழகிலே ஆறு!!!

அழகை பத்தி எழுதுன்னு நம்ம கட்சி தலைவர் கார்த்தி பணித்திருக்காக..., நம்ம பில்லு பரணி எழுதி இருக்காக..., நம்ம டிரீம்ஸ் தம்பி எழுதி இருக்காக..., நம்ம Dr DD எழுதி இருக்காக... நம்ம k4karthi அண்ணாத்த எழுத போறாக...

(டேய் போதுன்டா.. இன்னும் எத்தனை நேரம் தான் காக.. காக..ன்னு இழுப்ப..).. சரி சரி நமக்கு தெரிஞ்ச அழகு இதாங்க..

அம்மா, தமிழ் இது ரெண்டும் ரொம்பவே அழகு.. நிறைய பேர் அழகு தமிழ்ல சொல்லியிருக்காங்க..அவங்கள விட நம்மாள தமிழ்ல அழகா சொல்ல முடியாது. (வேற எந்த மொழில சொல்லுவன்னு கேக்கபிடாது)

1. ஆர்பரிக்கும் அழகு

புதுவையில் இருந்த போதும், சென்னையில் இருந்த போதும், நமக்கு ரொம்ப அழகா தெரிஞ்சது கடல் தாங்க.. மணற்பரப்பு நிறைந்த சென்னை கடற்கரைகள் ஆகட்டும், பாறைகள் நிறைந்த புதுவை கடற்கரை ஆகட்டும், என்ன ஒரு அழகு. முழு நிலவு தினதன்று நள்ளிரவில், சென்னை<-> புதுவை ECRல நிறைய இடங்களில், நிலவின் ஒளியில் கடலை பாத்துகிட்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகு. அதே போல், புயல் மழையில், சீறி பாயும் அலை கொண்ட கடலும், அழகு தாங்க..


2. கம்பீர அழகு
கம்பீரம்னா என் மனசுக்கு தோணறது, தஞ்சாவூர் பெரிய கோவில் தான். என்ன தான் புத்தகத்துல படிச்சாலும், ஃபோட்டோல பாத்தாலும் நேர்ல பாத்தா தான் அதோட அழகு தெரியும். நேரில் பாத்த போது ஒரு 5 நிமிஷம் வாய பொளந்து நின்னிட்டு இருந்தேன். இவ்வளவு அழகாய், இவ்வளவு பெரிதாய் இவ்வளவு கம்பீரமாய்.. அதுவும் 10 நூற்றாண்டுக்கு முன்னடியே உருவாக்கி இருக்காங்க.. இன்னும் எனக்கு அந்த பிரமிப்பு அடங்கல.. என்ன ஒரு அழகு.

3. இயற்கை அழகு

வயநாடு வட கேரளாவில் இருக்கிற ஒரு மாவட்டம். மலை சார்ந்த பகுதி. கேரளாவே சம அழகு. அதுல இந்த இடம் அழகோ அழகு. நிறைய கூட்டம் இருக்காது. வெள்ளை மனம் கொண்ட கிராமத்து மக்கள்..சுற்றிலும் ஆள் அரவமற்ற காடுகள், நடு நடுவே அருவிகள்..சிற்றோடைகள்னு அட்டகாசமான ஒரு அழகு... இயற்கை விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்..4. சின்னஞ்சிறு அழகு
குழந்தைகள்னா மனித குழந்தைகள் மட்டுமில்ல, மிருகக் குட்டிகள் கூட அழகு தான். பூனைகுட்டி, நாய்குட்டியெல்லாம், கொள்ளை அழகு தான்.. உருவத்தில் மட்டிமில்ல, செய்கை, விளையாட்டு குறும்பு எல்லாமே அழகு தான்.. இந்த அழகையும் நாள் பூரா பாத்துட்டே இருக்கலாம்

5. என்றும் அழியா அழகு

எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நல்லதை மட்டுமே நினைக்கற நட்பு, மிகவும் அழகானது. சுக துக்கங்களில் பங்கேற்று, அறிவுரையில் இருந்து, அறுவை ஜோக் வரைக்கும் எதை வேணா பகிர்ந்துக்கலாம். என்றும் நிலைத்திருக்கும் இந்த மாதிரியான நட்பு, என்னிகுமே அழியாத அழகு


6. இல்லாத அழகு

எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். தமிழ்நாடோ ரொம்ப சின்னது. அதுல சேரன், சோழன், பாண்டியன், பல்லவன்னு ஒரு நாலன்சு ராஜவம்சம். இவங்க ஒத்துமயா இருக்காம, ஏன் ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுகிட்டு இருந்திருக்காங்க.. ஒரு வேளை இவங்க சண்டை போடாம ஒருத்தருக்கொருத்தர் அனுசரிச்சு போயிருந்தா, இன்னேரம், இந்த உலகையே அவர்களின் கீழ் கொண்டு வந்திருக்கலாமோ??

நம் நாட்டை விட சிறியதான, இங்கிலாந்து, இங்கு வந்து நம்மை ஆட்சி புரிந்தார்கள். அதற்கு ஒரு காரணம், நம்பிக்கையும் ஒற்றுமையும் தான். இங்கு வந்த எந்த பிரதிநிதியும், அவன் அரசனை ஏமாற்றவோ, நம்பிக்கை துரோகம் செய்யவோ இல்லை..

இதே நம்மூரில், பல்லவன், வடக்கே படை எடுத்தால், தெற்கே இருந்து பாண்டியன், பல்லவனின் நாட்டை அபகரிக்க முனைகிறான்.. இப்படிபட்ட சூழலில் எப்படி எந்த ஒரு அரசனாலும், survival பத்தி மட்டுமே யோசிக்க் முடியும், dominate செய்யவோ யோசிக்கவோ முடியாது. அதனால தான் நம்ம வேற எந்த நாட்டையும் கைபற்றவில்லையோ??

நம்ம கிட்ட ஒற்றுமை, நம்பிக்கை என்ற அழகுகள் இல்லயோன்னு ஒரு சந்தேகம் தான்....

-----------------------------------------------------------------------
சரி மக்கா, என் மொக்கைய இத்தோட நிறுத்திட்டு, இன்னும் மூனு பேரை பிடிச்சு போடனுமாம். யாருன்னு தேடி பாத்து பிடிச்ச மூனு பேர் இவங்க தான். இவங்க எல்லாம் கொஞ்ச நாளா தான் பழக்கம். அதனால சும்மா விட்டுட முடியுமா??

நீ யாருடா டேக் பண்ணனு, கேள்வி கேக்காம, அருமையா அழகா ஆறு அழக அதிவிரைவில் பதிவிடுங்க.. இல்லேனா, தலைவர் கார்த்தி உங்களை பென்ச் மேல நிக்க வச்சிடுவாரு.. சொல்லிட்டேன்..

மிக சமீபத்தில் உளறிய உள்ளம் கொண்ட mgnithi

மதுரைகாரரான சுப.செந்தில்

ஆடி பாடி பரிசெல்லாம் சுருட்டிய பத்மபிரியா
posted by ACE !! at 3:20 AM 77 comments

Sunday, April 8, 2007

என்ன கொடுமை இது!!

பதிவு உலகம். விசித்திரம் நிறைந்த சில பதிவுகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பதிவுகள் எல்லாம் கண்டு இருக்கிறது. ஆனல் இந்த பதிவு விசித்திரமும் அல்ல, இதை பதியும் நானும் புதுமையான மனிதனும் அல்ல.பதிவுலகத்திலே சர்வ சாதரணமாக தென்பட கூடிய ஜீவன் தான் நான். பதிவுகளில் கும்மி அடித்தேன், நட்டாமையை நக்கலடித்தேன். என்ன கொடுமை இது என்று கேட்க பட்டிருக்கிறேன்.

நீங்கள் எதிர்பார்பீர்கள், நான் இந்த கொடுமை எல்லாம் செய்யவில்லை என மறுக்க போகிறேன் என்று, இல்லை, நிச்சயமாக இல்லை.பதிவுகளில் கும்மி அடித்தேன். பதிவு கூடாது என்பதற்காக அல்ல. பதிவு, மொக்கை போடுபவர்க்ளின் கூடாரமாய் இருக்க கூடாது என்பதற்காக. நாட்டாமையை நக்கலடித்தேன். நாட்டாமை மொக்கை போடுகிறார் என்பதற்க்காக அல்ல. பதிவுகள், மொக்கையாகி, மழுங்கி விட கூடாது என்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகதில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கபட்டேன். நேரடியாக பாதிக்க பட்டேன். சற்று பின்னோக்கி பார்த்தால் நான் கடந்து வந்த பதிவுகள் எத்தனை என்று தெரியும். கவிதைகள் இல்லை என் பாதையில்.. உளறலகள் நிறைந்திருக்கின்றன. காவியங்கள் பல படித்ததில்லை நான். பலர் விடும் கரடிகளை கேட்டிருக்கிறேன்.

கேளுங்கள் என் கதையை. என்ன கொடுமை இது என்று கேட்கும் முன் கேங்கள் என் கதையை. தமிழ்நாட்டிலே, திருமயிலையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலை எழுத்துக்கு நான் மட்டும் விதி விலக்கா?? மொபைல் போன் (mobile phone) உலகிலே தட்டு தடுமாறி கொண்டிருந்த என் க்ளையன்ட்டை காண வந்தேன். டல்லஸ் என் உயிரை குடித்தது. வெயிலிலே கருகவைத்தது. பரிட்டோவும் (burritto) சாப்பிட வைத்தது.

காண வந்த க்ளையன்டை கண்டேன். பக் (bug) நிறைந்த software கொண்ட போனோடு. போன் மாடலோ ஜூக்.. மங்களகரமான மாடல். ஆனால் hardware- ஏ வொர்க் பண்ண வில்லை. மொபைல் போன் (mobile phone) என்றாலே என்னவென்று தெரியாமல் எங்கள் உயிரை எடுக்கிறானே என் டேமேஜர், அவனிடம் மாட்டியவர் பலர். அதில் நானும் ஒருவன். போனிலே பக்(bug). பழுது பார்க்கவோ டயம் இல்லை. போனை விற்க க்ளையன்ட் அலைந்தான். அவனுக்காக நாங்கள் பூச்சியை பிடித்து கொல்ல அலைந்தோம். ஆணிகளை பிடுங்கினேன்.. வீக் என்ட் மறந்தேன், உறக்கம் இழந்தேன். கடைசியில் ஆணி பிடுங்கும் மிஷினாய மாறினேன்.

பக் (bug) என்னை விரட்டியது. பயந்து ஓடினேன். டேமேஜர் ஆணி பிடுங்க மிரட்டினான். மிரண்டு ஓடினேன். யு.எஸ் விசா, expire ஆகி விடுவேன் என்று துரத்தியது. மீண்டும் ஓடினேன். ஓடினேன் ஓடினேன்..பதிவு உலகின் விளிம்பிற்கு ஓடி வந்தேன். அப்படி கொடுமை படுத்த பட்டு ஓடி வந்த என்னை அமைதியாக பதிவிட்டு இருக்க வேன்டும் இந்த பதிவுலகம். அப்படி விட்டர்களா, என்னை அப்ப்டி பதிவிட விட்டர்களா? என்ன கொடுமை கொடுமை என்று கும்மியோ கும்மி அடித்து தொலைத்து எடுத்து விட்டார்கள்.

சரி,போகட்டும்.. பதிவுலகம் மட்டும் தான் இப்படி என்று orkutக்கு ஓடினேன். அங்கேயும் வந்து என்ன கொடுமை என்ன கொடுமை என்றால் என்ன செய்வது நான். என்ன கொடுமை என்று கேட்கப்படும் கொடுமைகளில் இருந்து இந்த பதிவுலகம் என்னை காப்பாற்றி இருக்க வேண்டும்.. செய்தார்களா?? செய்யவில்லை...

இது யார் குற்றம். என் குற்றமா??, பின்னூட்டம் எனும் பெயரில் கும்மி அடிக்கிறார்களே அவர்கள் குற்றமா? இத்தனை கும்மியும் அடித்து விட்டு என்ன கொடுமை என்ன கொடுமை இது என்று என்னிடமே கேட்கிறார்களே அவர்கள் குற்றமா?? அதனால் தான் சரவணன் என்ற மங்களகரமான என் பெயரை, ACE என்று மாற்றினேன்..

அப்ப கூட விடாம வந்து என்ன கொடுமை இதுன்னு கேக்கற பாசக்கார மக்கா.. உங்க கொடுமைக்கும் ஒரு அளவில்லையா? .... :(


என்ன கொடுமைன்னு தான் கேக்க வேணாம்னு சொன்னேன்.. கமென்ட் போட வேணாம்னு சொல்லவே இல்லை.. அதனால, மறக்காம, கமென்ட் போடுங்க.. ப்ளீஸ் :) :) :)

-----------------------------------------------------------------------

இந்த பதிவிற்கு காரணம், ஒருவரல்ல இருவரல்ல.. 9 பேர்.. யாருன்னு இங்க இல்ல இங்க போய் பாருங்க.. இவர்களையாவது இந்த பதிவுலகம் கொடுமை படுத்த்தாமல் இருக்கட்டும். (நான் ரொம்ம்ம்ம்ம்ப்பபபப நல்ல்ல்ல்ல்லலலவவவன் :) :) )

இது பராசக்தியின் அசல்

Labels: ,

posted by ACE !! at 1:13 PM 118 comments