புலம்பல்கள் - PULAMBALGAL

Saturday, April 28, 2007

வாழ்க்கை உண்பதற்கே!!!

யு.எஸ் ல ஆயிரம் விஷயம் பிடிக்காம இருந்தாலும், ஒரு நல்ல விஷயம், ரெஸ்டாரன்ட்ஸ். இந்தியன், சைனீஸ், மலாய், மெக்ஸிகன், மங்கோலியன், தாய், இட்டாலியன், கொரியன்னு எல்லா தேசத்து உணவும் கிடைக்கும். நம்ம மாதிரி சாப்பாட்டு ராமன்களுக்கு கொண்டாட்டம் தான் :) நான் சென்ற உணவகங்கள் சில
:
1. மங்கோலியன் உணவகம்:

மங்கோலியன் உணவகத்துல, சாப்பிடும் முறையே வித்தியாசமா இருக்கும். இங்க மத்த கோட்டல் மாதிரி ஆர்டர் செஞ்சு சாப்பிட முடியாது. வரிசையா எல்லா வகையான கறி (beef, pork, chicken, sausage, squid, crab, tuna, cat fish, tilapia, shrimp, mussels etc etc), தக்காளி, வெங்காயம், மஷ்ரூம், பாலக் கீரை, உருளை, முள்ளங்கி, முளைகட்டிய கடலை?? (sprouts), கேரட், கோஸ், பிராக்கலி (broccoli), முட்டை எல்லாமே சமைக்காம, பச்சயா வசிருப்பாஙக.. பக்கதுல, மிளகாய் பொடி, இஞ்சி பொடி, மல்லி பொடி.. அந்த பொடி, இந்த பொடின்னு நிறைய பொடி, தக்காளி சாஸ், சில்லி சாஸ் அதுல ஒரு 10 12 வகை வச்சிருப்பாங்க..நாம போய் ஒரு சட்டில (bowl) நமக்கு வேண்டிய கறி, காய் என்ன வேணும்னாலும் எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். (ஆனா அந்த bowl கொள்ளும் அளவு மட்டும் ).. இந்த உணவை சமைக்கறதுக்கு, பெரிய கல் வச்சிருப்பாங்க.. நம்ம ஊர் தோசை கல் மாதிரி, ஆனா ரொம்ப பெருசு.. அங்க ஒரு 5 - 6 சமயக்காரங்க இருப்பாங்க.. அவங்க கிட்ட உங்க சட்டிய கொடுத்தா, நீங்க கொண்டு வந்தத கல்லுல போட்டு சமைச்சு தருவாங்க.. ஒரு சில இடங்கள்ல, நூடுல்ஸையும் நீங்க சட்டில போட்டு எடுதுட்டு போகனும்.. வேற சில இடஙள்ல ஃபிரைட் ரைஸ் இல்ல டார்டியா (tortilla = நம்ம ஊர் சப்பாத்தி மாதிரி இருக்கும்) தனியா கொடுப்பாங்க..

சமையல் கொஞ்சமாச்சும் தெரிஞ்சிருந்தா பொடியெல்லம் தேவையான அளவு எடுதுக்கலாம்..இல்லேனா அப்படி இப்படி இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான் :) இங்க சாப்பாடு நல்லா இல்லைனா, சமையக்காரரை குறை சொல்ல முடியாது :) (படத்துல இருக்கறது மங்கோலியன் கிரில்)

2. ஜப்பானிய உணவகம்:

ஜப்பானிய உணவகத்துல மெயின் மேட்டரே சுஷி (sushi) தாங்க.. சுஷின்னா நம்ம ஆளுங்க எல்லாம் 10 மைல் தூரம் ஓடுவாங்க.. :) :) ஏன்னா அதுல மீன் சமைக்காம வச்சிருப்பாங்க.. ஆமா பச்ச மீனை சாதத்து மேல இல்ல உள்ள வச்சு கொழுக்கட்டை மாதிரி கையால பிடிச்சி வச்சிருப்பாங்க.. :) :)

நமக்கு ரொம்ப பிடிச்ச ஜப்பானிய உணவு நிகிரி - சுஷி (nigiri-sushi) தான். இது என்னன்னா ஒரு சிறு அளவு சாதத்தை வினகர்ல லைட்டா கலந்து நல்லா இருக பிடிசிருப்பங்க.. அந்த சாத கட்டி மேல ஒரு நல்ல 2 - 3 விரல் மொத்ததுக்கு மீன் துண்டை (தோலெல்லாம் நீக்கி, சுத்த படுத்தியது) வச்சி அழுந்த பதிச்சிருப்பாங்க.. (படத்துல இருக்கறது டூனா சுஷி)

இதை அப்படியே சாப்பிடலாம். இல்லைனா, மாங்கா இஞ்சி, வாசாபியோட (wasabi) சேத்தும் சாப்பிடலாம். வாசாபி, நம்ம ஊர் புதினா துவையல் மாதிரி பச்சை கலர்ல இருக்கும்... ஆனா ரொம்ப கார நெடி வரும். அதனால வாசாபி ஒரு சிட்டிகை போட்டு, சோயா சாஸ் (soy sauce) கலந்து கொஞம் தண்ணியா செஞ்சி வச்சிகிட்டு, அதுல நிகிரி சுஷி + மாங்கா இஞ்சி முக்கி சாப்பிட்டா, என்னா டேஸ்டு, என்னா டேஸ்டு.. முடிஞ்சா ட்ரை பண்ணுங்க.. :) :)

நிகிரி சுஷில அல்பகோர் டுனா (albacore tuna), யெல்லோ டெயில் (yellow tail) மீன்கள் நல்லா இருக்கும். சால்மன் பிடிச்சவங்க அதையும் ட்ரை பண்ணலாம் :)

இது தவிர நோரி-மாகி சுஷியும் உண்டு.. இதை பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.. இதை கடல் பாசில (sea weed = நோரி) சுத்தி வச்சிருப்பாங்க.. கடல் பாசி எனக்கு ரொம்ப பிடிக்காது.. அதனால கடல் பாசி இல்லாத சுஷி தான் சாப்பிடுவேன்.. இந்த மாதிரி ரோல் கடல் பாசி இல்லாமயும் கிடைக்கும். இந்த ரோல் உள்ள மீன் முட்டை, நண்டு எல்லாம் வச்சிருப்பாங்க.. இது கொஞ்சம் இனிப்பா இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கும். (படத்துல இருக்கறது சுஷி ரோல்)


3. கொரிய உணவகம்

கொரிய உணவு, ரொம்ப ஹெல்த்தி, ஒரு பவுல் சூப், ஒரு பிடி அரிசி, 1, 2 பதார்த்தங்கள், நம்ம ஊறுகாய் மாதிரி கிம்ச்சி.அவ்வளவு தான் அவங்க உணவே.. ஒரு சில ஐட்டம்லாம் நம்ம ஊர் மக்களால வாய்ல வெக்கவே முடியாது..:) (நம்ம அந்த ஸ்டேஜ்லாம் எப்பவோ தாண்டியாச்சு :) )

இவங்க சூப் ரொம்ப சத்தானது.. ஊர்ல இருக்க பேர் தெரியாத ஐட்டமெல்லாம் போட்டு கொதிக்க வச்சிருப்பாங்க..:) நம்ம ஃபேவரிட் சூப் ஆக்ஸ் போன் சூப் (Ox bone soup) தான்.. என்ன குப்பைய போடுவான்னு நானும் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.. ஒரு மண்ணும் புரியல.. சரி எதுக்கு இந்த விபரீத விளையாட்டுன்னு சாப்பிடறதோட நிறுத்திக்கிட்டேன்..

பதார்த்தம்னு பாத்தா, எதாவது மரக்கறி, மிருககறி, டோஃபு (tofu) எல்லாம் போட்டு சாப்பிடற அளவுக்கு இருக்கும். இதோட பேரெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு பாத்து பல்பு தான் நிறைய வாங்கினேன்.. :(

அடுத்து கிம்சி (kimchi) .. நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி, ஆனா ருசி ரொம்பவே கேவலமா இருக்கும். :(. எதாவது ஒரு காய்கறி, (முட்டைகோஸ், லெட்யூஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் etc), வினிகர், மிளகாய்தூள், அப்புறம், வாய்ல நுழையாத பேர் கொண்ட இன்ன பிற சமாச்சாரங்களை எல்லாம் ஒரு சட்டியில போட்டு மாசக்கணக்குல விட்டுடுவாங்க.. அது ஃபெர்மென்ட் ஆனதும். நம்ம ஊர் ஊறுகாய் மாதிரி சாப்பாட்டுக்கு சைட் டிஷ் ஆக்கிடுவாங்க..

இந்த சாப்பாட்டோட ஒரு பிடின்னா, ஒரு பிடி தான் சாதம் சாபிடறாங்க.. அதுக்கு சாப்பிடாமலே இருக்கலாம்... :( நமக்கு இந்த ஒரு பிடி சாதம்லாம் கட்டவே கட்டாது.. ஒரு ரெண்டு மூனு நாள் சமாளிக்க முயற்சி பண்ணேன்.. வேலைக்காகல.. அப்புறம் கூச்சபடாம, எல்லா ஐட்டமும் எக்ஸ்ட்ரா கேப்பேன்.. நம்ம ஊர் ரெஸ்டாரன்ட் மாதிரி கடுப்படிக்காம, நம்ம தட்டு எடுதுட்டு போனாலே, சந்தோஷமா எக்ஸ்ட்ரா அள்ளி அள்ளி வப்பாங்க.. பாசக்கார மக்கள் :) :)

டிபிகல் கொரிய உணவகத்துல தரைல உக்காந்து குட்டியா ஒரு டேபில்ல சாப்பிடனும். இதுல ஒரு கொடுமை என்னன்னா, ஆளுக்கு சூப், சாதம் மட்டும் தனியா இருக்கும்.. மீதி எல்லாம் பொதுவா பவுல்ல வச்சிருப்பாங்க.. எல்லாரும் அதுல இருந்தே சாப்பிடனும்.. கொஞ்சம் மெதுவா சாப்பிடற ஆளுங்களுக்கு ஆப்பு தான் :) :)

பக்கத்துல இருக்க படம் சியோலில் இருக்கும் ஒரு ரெஸ்டாரன்டில் எடுத்தது.
-------------------------------------------------------------------------------------

இது தவிர, தாய், இத்தாலியன், மெக்ஸிகன், மலாய், சைனீஸ், பிரேஸிலியன்னு ஏகப்பட்டது இருக்கு. எத்தியோப்பியன் இன்னும் ட்ரை பண்ணல, கூடிய சீக்கிரம் சாப்பிட்டு அத பத்தியும் ஒரு பதிவு போட்டுடலாம்.. :) :)

டிஸ்கி :
1. ஆணிகள் ஜாஸ்தியானதால, இந்த பதிவு டாகுமென்ட்ரி மாதிரி ஆயிடுச்சு..
2.நான் ரொம்ப ஆராய்ச்சிலாம் பண்ணல, சும்மா நான் போன ரெஸ்டாரன்ட்ல கேட்டது பாத்ததுன்னு எழுதி இருக்கேன்.. தப்பு இருந்தா கண்டுக்காதீங்க :)
3. கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)
posted by ACE !! at 7:53 PM

78 Comments:

Namma fav topic postukku naama dhaan 1stu gummi :-))

April 30, 2007 at 4:59 AM  

//கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)//

Grr.. U too Ace??? unga vela mudiyaama innum oru 4 naal AC illadha andha dubakoor client officelayae kedandu saaga vaazhthukkal :P

April 30, 2007 at 5:05 AM  

//இங்க சாப்பாடு நல்லா இல்லைனா, சமையக்காரரை குறை சொல்ல முடியாது :) //

Sondha samayalukku bayandhu hotelukku pona anguttum indha thollaya??? enna kodumai idhu saravana??? (Idhu G3 kodumainu neenga solla mudiyaadhey.. venumna samayalkaaran kodumainu sollikonga :P)

April 30, 2007 at 5:06 AM  

//ஜப்பானிய உணவகம்://

Me rejecting this.. pachaiya non-vega... no... me running away.. :P

April 30, 2007 at 5:08 AM  

//என்ன குப்பைய போடுவான்னு நானும் நிறைய பேர் கிட்ட கேட்டேன்.. ஒரு மண்ணும் புரியல.. சரி எதுக்கு இந்த விபரீத விளையாட்டுன்னு சாப்பிடறதோட நிறுத்திக்கிட்டேன்..//

//இதோட பேரெல்லாம் தெரிஞ்சிக்கலாம்னு பாத்து பல்பு தான் நிறைய வாங்கினேன்.. :(//
ROTFL :-))

April 30, 2007 at 5:11 AM  

//கொஞ்சம் மெதுவா சாப்பிடற ஆளுங்களுக்கு ஆப்பு தான் :) :) //

Neenga soldra speeda paatha neenga andha listla illa pola :-)))

//எத்தியோப்பியன் இன்னும் ட்ரை பண்ணல, கூடிய சீக்கிரம் சாப்பிட்டு அத பத்தியும் ஒரு பதிவு போட்டுடலாம்.. :) :)//

Neenga asathunga.. appadiyae kathirikkaiyum try udunga :P

April 30, 2007 at 5:14 AM  

seri top 7 commentskku enakku chettinadu saapadu anuppidunga.. adhu podhum enakku :-)))

April 30, 2007 at 5:15 AM  

adada.. slightu mishtake aayiduchu.. that is not kathirikkai.. vendakkai.. vendakaiyum daily saapida try pannunganu solla vandhen. :-)))

[Idha thaan than vaayal thaanae kedaradhunnu solluvaangalo ace :P]

April 30, 2007 at 5:17 AM  

Ivlo dhooram vandhutten...

April 30, 2007 at 5:17 AM  

rounda 10 pottukaren :-))

April 30, 2007 at 5:17 AM  

Technically 2nd!! :)

April 30, 2007 at 9:39 AM  

melottama paatha orey NV ye irukunga.. apparam vandhu nidhanama padikkaren :)

April 30, 2007 at 9:44 AM  

ஆகா எல்லாம் அசைவ அயிட்டங்கள் அதனால மீ த எஸ்கேப் :)

April 30, 2007 at 10:11 AM  

//நம்ம ஊர் ரெஸ்டாரன்ட் மாதிரி கடுப்படிக்காம, நம்ம தட்டு எடுதுட்டு போனாலே, சந்தோஷமா எக்ஸ்ட்ரா அள்ளி அள்ளி வப்பாங்க.. பாசக்கார மக்கள் //

ROTFL :)

April 30, 2007 at 10:55 AM  

//கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) //

adhaane paarthen! saapadu! naale G3 akka oodi vanthruvaangale! :p

vazhakkam pola hotel billa namma billu barani thaan kattinaara? :)

April 30, 2007 at 10:56 AM  

அனியாயத்துக்கு நான்-வெஜ்.

என்ன கொடுமை இது I'm not ACE..? :)))

April 30, 2007 at 10:57 AM  

vayiru full ayidichi.....danksba...

April 30, 2007 at 1:42 PM  

//அனியாயத்துக்கு நான்-வெஜ்.

என்ன கொடுமை இது I'm not ACE..? :))) //

repeatu..

April 30, 2007 at 2:17 PM  

Thozharae ,
Atendance mattum..Paeriya pathivaa irukku apuram padikuraen ;...

April 30, 2007 at 6:17 PM  

படிச்சவுடனே சாப்பிடணும் போல இருக்குங்க சரவணன்
வெஜ் உணவு வகைகளே உங்களுக்கு தெரியாது போல :)

April 30, 2007 at 6:27 PM  

//இங்க சாப்பாடு நல்லா இல்லைனா, சமையக்காரரை குறை சொல்ல முடியாது ///

ஹி ஹி ஹி

April 30, 2007 at 6:28 PM  

//நம்ம மாதிரி சாப்பாட்டு ராமன்களுக்கு கொண்டாட்டம் தான்//

நம்ம ஆளா நீங்க!

April 30, 2007 at 6:28 PM  

Nice post.. i would suggest a seperate post for Mexican.(chimmichangas and chellakillis..)

April 30, 2007 at 6:55 PM  

kaalangaathaala pasi nerathula indha post ah padicha enaku pasi veri kolai veriyaa aagidum...so attendance...lunch mudichitu varen :-)

April 30, 2007 at 7:51 PM  

firstuuu attendanceuuuu....

April 30, 2007 at 7:59 PM  

title parthale g3 nyabagam dhan varudhu....

April 30, 2007 at 8:02 PM  

appalika vandhu medhi kummi.....

April 30, 2007 at 8:02 PM  

Ace...namakum ungala mathiri than...vith vithama sapidaruthuna pidikum

Japanese restaurant'leyum, Mongolian mathiri iruku. They call it 'Hibachi'. Here you will sit in a big circular table. Center of the table will be a big cooking plate. The cook will cook the food in front of you and serve.

May 1, 2007 at 1:20 AM  

Mudincha peru, cuban, Arabian, indonesian, flipino, isralei kosher, russian, german ellam try pannugo

Athuvum German, cuban and indonesian tastu therikum.

May 1, 2007 at 1:20 AM  

If you eat beef, try ruth kris's fillet Mignon. It will cos u 60-75 dollars...but its worth it

May 1, 2007 at 1:20 AM  

Ace,
நானும் இந்த மூன்றும் ட்ரை பண்ணி இருக்கேன்.
சுஷி தான் எனக்கு பிடித்தது இந்த மூன்றில்.

இப்ப சைனீஷ்ல கூட மங்கோலியன் ஸ்டைல் வர ஆரம்பித்து விட்டது..ட்ரை பண்ணி இருக்கீங்களா??

May 2, 2007 at 7:43 AM  

//நம்ம மாதிரி சாப்பாட்டு ராமன்களுக்கு கொண்டாட்டம் தான்//

ஹிஹிஹி.. என்னையும் சேர்த்துட்டீங்கள்ல ACE

May 2, 2007 at 9:55 AM  

சாப்பாட்டு விஷயத்துல நமக்கு எல்லா தேசமும் ஒரு தேசமே ACE

May 2, 2007 at 9:55 AM  

உள்ளே போன, கடையை காலி பண்ணாம வெளிய வர்றது இல்ல ACE

May 2, 2007 at 9:56 AM  

உங்களுக்கு பிடிச்ச மெக்க்ஷிகன் உணவை விட்டுட்டீங்க.. முக்கியமா சிப்போட்லே என்னாச்சு ACE

May 2, 2007 at 9:57 AM  

//நீங்க கொண்டு வந்தத கல்லுல போட்டு சமைச்சு தருவாங்க.. //

கூடவே பாட்டும் பாடுவாங்க சில நாட்கள்..


ஒரு நல்ல விஷயம்.. சாப்பாட்டை பத்தி நாம குறை சொல்ல முடியாது.. ஏன்னா எல்லாமே நம்ம போடுற அளவுகள் தான் இல்லீங்களா ACE

May 2, 2007 at 9:58 AM  

andava! parakradhula aeroplane odhakkaradhula kappal thavira meedhi ellam eatable a?? enna kodumai i m not ace idhu :-)

-porkodi

May 2, 2007 at 9:59 AM  

/ஜப்பானிய உணவகம்:

//

நம்ம ஊர்ல இருக்க மாதிரி இங்க இல்லீங்க ACE

May 2, 2007 at 9:59 AM  

ACE neenga solrathu romba romba kareetu.. U.S la irukkara advantagela ithuvum onnu.. Romba different differenta food try pannalam... Aana ennai maathiri veg sappidaravangalukku waste. not much variety.

Naan saapidara item romba kammi... Veggie whooper in Burger King, Big and Tasty veggie burger in Macdonalds, Veg bean burrito, fiesta potato from Taco bell..Itha maathiri options rombave kammi..

I like Thai Food a lot.. Anga irukkara thai restaurantukku once in a fortnightavathu poiduvom.

Mudinja varaikkum innum neraiya try pannunga..

May 2, 2007 at 2:48 PM  

//கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)//

ROTFL-O-ROTFL :)

May 2, 2007 at 8:49 PM  

supera analyze pannirkinga ACE :)

May 2, 2007 at 8:49 PM  

naan indha weekend thaan sushi try pannen.. neenga sonna andhi inji+soy sauce+pudhina equalent ellam vachi thaan try pannen.. aana first time naalaya ennanu theriyala. suthama pidikkala :(

May 2, 2007 at 8:50 PM  

mangolian and koream inime thaan try pannanum

May 2, 2007 at 8:50 PM  

dallas-la idhe vela pola :)

May 2, 2007 at 8:50 PM  

sari vandhadhukku 45 potu poikuren.nalla saapdunga :)

May 2, 2007 at 8:50 PM  

//
சாப்பாட்டு விஷயத்துல நமக்கு எல்லா தேசமும் ஒரு தேசமே ACE
//
repeatu

May 2, 2007 at 8:52 PM  

@G3:

//Neenga soldra speeda paatha neenga andha listla illa pola :-)))//

Nichayama illa.. nammalaam super power grinder :) :) thattula vacha vehathula kaanama poidum :)

May 2, 2007 at 10:18 PM  

@G3

//rounda 10 pottukaren :-)) //

Romba nanringa..


@padmapriya

//melottama paatha orey NV ye irukunga..//

Naan ennanga panrathu.. neenga keezhottama paathalum NVa thaan irukkum :D

@Raji

Attendence noted :D

@சுப.செந்தில்

//வெஜ் உணவு வகைகளே உங்களுக்கு தெரியாது போல :) //

ஹி ஹி ஹி நல்லாவே தெரியுங்க.. ஆனா அதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே.. இதெல்லாம் எனக்கும் புதுசு.. அதனால தான்..

//நம்ம ஆளா நீங்க!//

ஆமாங்க.. நம்ம வாழறதே சாப்பிடத்தானே :)

May 2, 2007 at 10:22 PM  

@ambi
//vazhakkam pola hotel billa namma billu barani thaan kattinaara? :) //

Avarukku innum bill-a anuppala.. anuppiduvom :)

//அனியாயத்துக்கு நான்-வெஜ்.//

நியாயமான NV தாங்க :) :)இங்க கிடைக்கர வெஜ் பத்தியும் போட்டுடுவோம்..@Bharani

//vayiru full ayidichi .....danksba... //

Ippadi sonna mattum pothathu.. billu anuparom.. kattidunga :)

May 2, 2007 at 10:25 PM  

@analyst
//Nice post.. i would suggest a seperate post for Mexican.(chimmichangas and chellakillis..) //

Thanks :) Yep.. mexican in itself needs a full post :) so much to write about it.. :) :)

@syam
//kaalangaathaala pasi nerathula indha post ah padicha enaku pasi veri kolai veriyaa aagidum...so attendance...lunch mudichitu varen :-) //

Enna naataamai, lunch mudichittu varennu sollittu poneenga.. innum lunche mudikkalaya?? :D

May 2, 2007 at 10:27 PM  

@VEDA
//ஆகா எல்லாம் அசைவ அயிட்டங்கள் அதனால மீ த எஸ்கேப் :) //

அடுத்ததா ஒரு சைவ பதிவும் போட்டுடுவோம்.. :)

@K4$
//title parthale g3 nyabagam dhan varudhu.... //

LOL :) :)

//appalika vandhu medhi kummi..... //

Vaanga vaanga porumaya vaanga.

May 2, 2007 at 10:28 PM  

@Wyvern

//Ace...namakum ungala mathiri than...vith vithama sapidaruthuna pidikum//

Super.. neraya per companykku irukkaanga :) :)

//Mudincha peru, cuban, Arabian, indonesian, flipino, isralei kosher, russian, german ellam try pannugo//

Nichayama.. kannula oru puthu restaurant pattuchunna mudhalla try panniduvom illa.. :)

//They call it 'Hibachi'. Here you will sit in a big circular table. Center of the table will be a big cooking plate. //

Heard about it.. never tried.. athayum try panniduvom :D

//If you eat beef, try ruth kris's fillet Mignon. It will cos u 60-75 dollars...but its worth it //

Ellame saapiduvom.. ithum try pannuvom seekirame :) :)

May 2, 2007 at 10:31 PM  

@balar

//இப்ப சைனீஷ்ல கூட மங்கோலியன் ஸ்டைல் வர ஆரம்பித்து விட்டது..ட்ரை பண்ணி இருக்கீங்களா?? //

வருக.. வருக..
இல்லீங்க.. சைனீஸ்ல ட்ரை பண்ணதில்லை.. ஆனா ஜப்பானிஸ்ல ட்ரை பண்ணி இருக்கேன்.. ட்ரை பண்ணிடுவோம்..

May 2, 2007 at 11:38 PM  

@M.K

//ஹிஹிஹி.. என்னையும் சேர்த்துட்டீங்கள்ல ACE //

ஹிஹிஹி... நீங்க இல்லாமையா தல..

//சாப்பாட்டு விஷயத்துல நமக்கு எல்லா தேசமும் ஒரு தேசமே ACE //

அதேதான் .. :)

//உள்ளே போன, கடையை காலி பண்ணாம வெளிய வர்றது இல்ல ACE //

நம்ம பாலிஸியும் அதே தான் :) :)

//உங்களுக்கு பிடிச்ச மெக்க்ஷிகன் உணவை விட்டுட்டீங்க.. முக்கியமா சிப்போட்லே என்னாச்சு ACE //

அதுவே ஒரு தனி பதிவா போடனும்.. அத்தனை இருக்கு மெக்ஸிகன்ல.. :)

//ஏன்னா எல்லாமே நம்ம போடுற அளவுகள் தான் இல்லீங்களா ACE //

ஆமாங்க..

//நம்ம ஊர்ல இருக்க மாதிரி இங்க இல்லீங்க ACE //

பக்கத்துல எங்காவது இருந்தா சாப்பிட்டு பாருங்க.. :)

May 2, 2007 at 11:42 PM  

//andava! parakradhula aeroplane odhakkaradhula kappal thavira meedhi ellam eatable a?? enna kodumai i m not ace idhu :-)
//

innonnu vittuteengale.. odarathula car/bus thavira ellame edible thaan :)

Ithu kodumaye illaye.. :) :)

@mgnithi

//Aana ennai maathiri veg sappidaravangalukku waste. not much variety. //

NV alavukku variety illa thaan..aanalum veggie items neraya irukku..

//Mudinja varaikkum innum neraiya try pannunga.. //

Namma policy-e athu thaane :) ;)

@arunkumar

//supera analyze pannirkinga ACE :) //

Athu theriyaathu.. aana supera saaptirukken :) :)


// aana first time naalaya ennanu theriyala. suthama pidikkala :( //

Enna fish try panneenga.. poha poha sariyaayidum :) :)

//mangolian and koream inime thaan try pannanum //

Try pannunga super-a irkkum..

//dallas-la idhe vela pola :) //

He he he.. dallas-la mattum illa.. engeyum ithe velai thaan :D

May 2, 2007 at 11:48 PM  

appuram varentu poitu appuram marandhy poiten...naangalum namma inam thaana...enakkum indha maathiri ella cuisines kum poi explore panrathu pidikkum...fish avolavaa pidikkaathu irundhaalum naalaikku Syam sushi saapidalanu histroy la yaarum thappa pesida koodathunnu athayum oru kai paarthiten :-)

May 4, 2007 at 9:36 PM  

sappatu ramana? ramiya? theriyalai!

May 5, 2007 at 7:24 AM  

he he he profile parthen. sapatu raman than. vazhga! valarka!

May 5, 2007 at 7:24 AM  

//Syam sushi saapidalanu histroy la yaarum thappa pesida koodathunnu athayum oru kai paarthiten :-) //

நாட்டாமை.. இது தான் நமக்கு அழகு...:) :)

வாக்கு மாறாம வந்ததுக்கு ஓரு டாங்கீஸ் ;)

//sappatu ramana? ramiya? theriyalai! //

என்னங்க.. இப்படி கேட்டுட்டீங்க.. ராமன்னு தெளிவா பதிவுல போட்டிருந்தேனே :(

//sapatu raman than. vazhga! valarka!
//

ஹி ஹி.. நன்றிங்க..

May 6, 2007 at 9:52 AM  

aaandava...u are really singam...pinna sushi saaptadhoda illama adha pathi oru post vera!...na oru thadava salad saapidra pervazhinu, ela thalayoda sethu oru slice tuna eduthu potutu vandhuten...andha tuna-va vaila vecha aparam thaan theriyudhu adhu verusa boiled fish...no salt nothing...in fact not even fully cooked...thaangala...appadiye kottitu vandachu...pachaya eppadi thaan...eeeesssshhh!

May 7, 2007 at 8:36 AM  

Ahaha pala naatu samayal aa saapttu irukkeenga..
Enna irundhaalum indha nellu soorum ,sambarum sapudura tasteyae thani dhaangoo...

May 8, 2007 at 4:06 PM  

நண்பா நமக்கு தான் வர கொஞ்சம் லேட்!

வித விதமான உண்ணவ பத்தி போட்டு இருகீங்க்க! சூப்பர்!!

May 8, 2007 at 5:49 PM  

எனக்கும் இப்பெல்லாஅம் சுஷி ரொம்ப பிடிக்குது :((

May 8, 2007 at 5:49 PM  

நீங்க chinese பத்தி ஒன்னும் சொல்லல? அங்க dumplings ellam unda?

May 8, 2007 at 5:50 PM  

65!

May 8, 2007 at 5:50 PM  

நா புதுசு இப்பதான் உங்க பதிவுகளை பார்த்தேன்
Bien என் புகுந்த வீடு உங்க ஊர்தான் Au revoir.

May 9, 2007 at 11:57 PM  

@sat

ungalukku TUNAvum pidikkaatha.. nangallam appadiye saapiduvom.. canned tuna-vum nalla than irukkum..

//pachaya eppadi thaan...eeeesssshhh//

Pachaya, elai thazayallam saapidara maathiri thaan ithuvum :D

@Raji
//Ahaha pala naatu samayal aa saapttu irukkeenga..
Enna irundhaalum indha nellu soorum ,sambarum sapudura tasteyae thani dhaangoo... //

Athennavo unmai thaanga.. namaloda favorite food murungai keerai kootu thaanga.. :D

@Dreamz
//நண்பா நமக்கு தான் வர கொஞ்சம் லேட்!//

Better late than never :D

//வித விதமான உண்ணவ பத்தி போட்டு இருகீங்க்க! சூப்பர்//

நன்றிங்க..

//எனக்கும் இப்பெல்லாஅம் சுஷி ரொம்ப பிடிக்குது :(( //

இதுக்கு எதுக்கு அழுகாச்சி போடறீங்க.. :)))) ஸ்மைலி போடுங்க..

//நீங்க chinese பத்தி ஒன்னும் சொல்லல? அங்க dumplings ellam unda? //

சைனீஸ்லாம் நிறைய பேர் சாப்பிட்டிருப்பாங்க.. அதனால விட்டுட்டேன்.. dumplingslam உண்டு.. அதெல்லாமும் ஸ்வாகா செய்யப்படும்..

May 10, 2007 at 12:06 AM  

@Ulaham sutrum valibi

//நா புதுசு இப்பதான் உங்க பதிவுகளை பார்த்தேன்//

நன்றிங்க..

//Bien என் புகுந்த வீடு உங்க ஊர்தான் Au revoir.//

நான் 4 ஊர் போட்டிருக்கேன்.. அதுல ஒரு ஊர் உங்க புகுந்த வீடா??

Bien = ?? Google ரொம்ப குழப்புது :((

May 10, 2007 at 12:08 AM  

புதுவைங்க, french ங்க

May 10, 2007 at 2:40 AM  

நமக்கு french தெரியாதே.. :( :( Au revoir தெரியும்..

புதுவையா நீங்க... பரவாயில்லை நம்ம ஊரில் இருந்தும் ஒருத்தர் கமெண்ட் போட்டிருக்கீங்க :) :)

நான், பண்ருட்டி, புதுவை, சென்னை, 3 ஊர்லேயும் இருந்திருக்கேன் :) :) அதனால, எல்லாமே நம்ம ஊர் தான் :) :)

May 10, 2007 at 2:45 AM  

பன்ருட்டியா? முன்னெரு காலத்தில நான் அங்கு இருந்நிருக்கேன்
பலாபழம் ரொம்ப ருசியா இருக்கும்,என் அப்பா ஒரு காவல் துரை அதிகாரியாய்
அங்கு இருந்தார்.

May 10, 2007 at 3:00 AM  

ஆமாங்க.. பலாப்பழம், முந்திரி ரெண்டுமே பண்ருட்டில பிரசித்தம்..

நீங்க நெஜமாலுமே உலகம் சுற்றும் வாலிபி தான் :) :)

May 10, 2007 at 3:05 AM  

பன்ருட்டி பற்றி ஒரு பதிவே போடலாம்
நெல்லிகுப்பம் சர்கரை தொழில்சாலை
நெய்வேலி அனுமின் உற்பத்தி இன்னும்
சொல்லிக்கொண்டே போகலாம் கடிலம்ஆறு
என் நினைவில் பசுமையாக இருக்கு.

May 10, 2007 at 3:35 AM  

Apuram Sari oru 75 podalaamaenu dhaan

May 14, 2007 at 10:17 AM  

75:)

May 14, 2007 at 10:17 AM  

uss..eba paathathukay full meals rendu saapta mari iruku...

////கொரிய படத்த தவிர மீதி எல்லாம் இணையத்துல இருந்து G3 செஞ்சது.. :) :)//

//
ROTFL :D :D chancela ponga..pinreenga

May 15, 2007 at 10:44 PM  

gils here:)

May 15, 2007 at 10:45 PM  

Singam thaaney thoongudhu..ring master ma??

May 16, 2007 at 11:46 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home