புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, May 22, 2007

சில்லறைகள்..

ரொம்ப நாளா போஸ்டே போடல, என்ன போடறதுன்னும் தெரியல.. எதாவது தேறுதான்னு வலைமேஞ்சிட்டு இருந்தா, நம்ம G3 சில்லறை வாங்கினத பத்தி கோப்ஸ் சொன்னது ஞாபகம் வந்துது.. சில்லறை வாங்கியத கூட போஸ்டரது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே, நமக்கும் நிறையா அனுபவம் இருக்கேன்னு யோசிச்சேன்.. அப்போ தான் ஒருத்தர் ஹெல்மெட்ட பத்தி எழுதியிருந்தாங்க.. அதனால நானும், நான் வாங்கிய சில்லறைகள பத்தி ஒரு மொக்கய போட்டுடலாம்னு செயற்குழு பொதுகுழு எல்லாம் கூட்டி முடிவெடுத்தேன்.. :D

சில்லறை 1:


11ம் வகுப்புல படிக்கும் போது, ஒரு நண்பன் அவங்க அப்பாவோட TVS 50 எடுத்துட்டு வந்திருந்தான்.. ஆர்வகோளாறுல அத நான் ஓட்டரேன்னு வாங்கி ஓட்டினேன். நான் வண்டி ஓட்டரத பத்தி குடுத்த பில்ட்-அப்ப நம்பி கொடுத்திட்டான்.. நம்ம வண்டி ஓட்டுறதே பைனரி ஸ்டைல்ல தான்.. 0, இல்லேனா 50.. நடுவுல 10,20,30 லாம் பழக்கமே இல்ல.. புதுவை ஈஸ்வரன் கோவில் தெரு??ல எதுத்தா போல வந்த காருக்கு வழி விடறேன்னு கட் அடிச்சு கவுந்து விழுந்தோம்.. கால் கை எல்லாம் சிராய்ச்சிட்டு ரத்தக்களரி ஆயிடுச்சு.. நல்ல அடி.. நடக்கவே முடியல... வண்டிக்கு வேற சம டேமேஜ்...

இதெல்லாம் அரசியல்ல சகஜம்டானு எத்தனை சொல்லியும், எனக்கு வண்டி ஓட்ட தெரியலன்னு அந்த பையன் அதுக்கப்புறம் வண்டி கொடுக்கவே மாட்டேன்னு சொல்லிட்டான்.. லூஸு பய.. ..ஒழுங்கா ஓட்ட விட்டுருந்தா இன்னேரம் ஒரு பைக் ரேஸ் வீரனா, அஜித் மாதிரி வர வேண்டிய ஆளு :D:D .. சரி, சரி விடுங்க.. பழைய கதைய பேசி என்ன ஆகப்போகுது..

சில்லறை 2:

இது ரொம்ப சுவாரசியமா இருக்காது.. டைடல் பார்குல இருந்து வந்து மத்திய கைலாஷ்ல சிக்னல் விழறதுக்கு முன்னடி ரைட் அடிக்கனும்னு வேகமா திரும்ப முயற்சி பண்ணேன்.. அவ்வளவு தான் தெரியும்.. ஒரு போலீஸ்கார மாமா பக்கத்துல நின்னு எதோ சொல்லிகிட்டு இருக்கார்.. என்ன நடந்ததுன்னே தெரியல.. கை மணிக்கட்டுல சம் அடி.. இங்கேயும் ரத்தக்களறி ஆயிடுச்சு.. அந்த நல்ல போலிஸ் மாமா, என்னப்பா அடி பட்டுச்சா?? ஆஸ்பத்திரிக்கு போகலாமான்னு ஆட்டோலாம் பிடிச்சிட்டார்.. நம்ம என்னிக்கு வலிச்சுதுன்னு சொல்லியிருக்கோம்.. அதனால, அடி படாத மாதிரியே ஆக்ட் வுட்டுட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்..

சில்லறை 3:




ஒரு செப்டம்பர் மாத பின்மாலை பொழுது. லேசா மழை பெஞ்சிட்டு இருந்துது.. இந்த மாதிரி ஒரு ரம்மியமான் நேரத்துல, என்னோட வாகனத்துல மெய் மறந்து வந்துட்டு இருந்தேன்.. மழைனால ட்ராஃபிக் வேற கம்மியா தான் இருந்துது.. அந்த சில்லுனு மழைல நனைஞ்சிட்டு வர சுகம் இருக்கே....

சரி விஷயத்துக்கு வருவோம்... இப்படியா பட்ட நேரத்துல, எனக்கு முன்னடி ஒரு பிட்சா ஹ்ட் டெலிவரி ஆள், ஸ்கூட்டர்ல பறந்துட்டு இருந்தான்... (அவங்க ஸ்பீட்லாம் அடிச்சுக்கவே முடியாது.. அதுவும் ஸ்கூட்டர்ல..).. திடீர்னு பாத்தா நெஜமாலுமே பறந்துட்டு இருந்தான்.. என்னனு பாத்தா தலைவரு ரோட்டுக்கு நடுவுல மீடியனுக்காக போட்டிருந்த கல்லு மேலே ஏறி வந்த் வேகத்துல அப்படியே பறந்தார்... என்ன ஒரு கண்கொள்ளா காட்சின்னு நான் அத பாத்துட்டு ரோட்டுல சிந்தி இருந்த ஆயில பாக்கல.. எந்த வீணா போன வெண்ணையோட வண்டில இருந்து வழிஞ்சிருக்கு.. அதுல வண்டியோட முன் சக்கரம் ஏறி அங்கேயே சுத்துது.. :((( அப்புறம் என்ன, அந்த பிட்ஸா காரனுக்கு போட்டியா நானும் பறந்தேன்.. ஒரே வித்தியாசம்.. அவன் ஸ்கூட்டரோட பறந்தான்.. நான் பைக்க விட்டுட்டு பறந்தேன்.. பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்... ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE :D

விழுந்த வலி ஒரு பக்கம்னா, ஒரு வெண்ணை கூட உதவிக்கு வரல.. நானே கஷ்ட பட்டு எழுந்து, என் வண்டிய தள்ளிட்டு ரோட்டோரம் வந்தா.. ரெண்டு பேர் அட்வைஸ்.. " பாத்து ஓட்டனும்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டினா இப்படி தான்"னு. அன்னிக்கு வலினால ஒன்னும் செய்ய முடியல.. இல்லேன்னா..

சில்லறை 4:

சென்னையில மீடியன் இல்லாத தெருக்கள்ல எழுத படாத சட்டம், எதிர் பக்கம் ஆள் இல்லைனா ராங் சைட்ல எத்தனை வேகமா வேணா வரலாம்.. அதே போல் ரெண்டு பேர் எதிர்க்க எதிர்க்க வந்தா, who blinks first மாதிரி, யார் முதல்ல நகரராங்கன்னு கடைசி நொடி வரைக்கும் போட்டி இருக்கும்.. கடைசில, ரெண்டு பேருமே அவங்கவங்க லெஃப்ட் சைட் கட் அடிச்சு போவாங்க.. இதுல கொஞ்சம் டைமிங் மிஸ் ஆச்சுனா அம்பேல் தான்..

கோடம்பாக்கம் பாலத்துல, இப்படி ஒரு முறை நான் கரைக்டா போயிட்டிருந்தேன்.. கொஞ்ச தூரத்துல, ஒருத்தன் ராங் சைட்ல வந்துட்டு இருந்தான்.. ரெண்டு பேரும் வேகமா தான் வந்தோம்.. அவன் டபுள்ஸ் வேற வந்துட்டு இருந்தான்.. கடைசி நொடி வரைக்கும் யாரும் வழி விடல.. கிட்ட வந்து நான் கரைக்டா கட் அடிச்சேன்.. அந்த dog கட் அடிக்காம நேரே வந்துட்டான்... வண்டி லைட்டா உரசுச்சு.. நான் மீண்டும் ஆஞ்சநேயரா, இந்த முறை பைக்கோட பறந்தேன்.. பாலம் இறக்கத்துல விழுந்ததுல, பைக்கோட ரெண்டு மூணு முறை உருண்டு, தலை ஒரு ரெண்டு தடவயாவது தரைல வேகமா தட்டுச்சு... நல்ல வேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தப்பிச்சேன்.. (யாருப்பா நாங்க மாட்டிக்கிட்டோம்னு சொல்றது.... )

அதோட, இந்த சேஷ்டைலாம் நிறுத்திகிட்டேன்.. அடுத்தவன் திறமைய நம்பி போனா இப்படி தான், அதனால் என் திறமைய மட்டும் நம்பி பைக் ஓட்டனும்னு முடிவு கட்டியாச்சு...

--------------------------------------------------------

பைக்ல அவ்ளோ தான்.. இன்னும் ரெண்டு சில்லறை கார்ல வாரினேன்.. அது இன்னொரு நாளைக்கு... சரி சரி.. மொக்கை ஸ்டாப் பண்ணிக்கறேன்.. கல்லெல்லாம் கீழ போடுங்க ப்ளீஸ் :D:D:D

டிஸ்கி : ஹார்லி டேவிட்சன் படம்லாம் ஒரு பில்ட் அப்புக்கு தான்.. :D :D.. (ஓட்டி பாக்கனும்னு ஆசை இருக்கு.. ஆனா இளிச்சவாயன் எவனும் சிக்க மாட்றான். :D :D)

Labels: ,

posted by ACE !! at 4:01 AM

65 Comments:

hai ace,

இவ்வளவு சில்லறை வாரியிருக்கீங்க, அப்படியே அந்த அக்கவுண்ட் நம்பரையும்,பேங்க் பேரையும் சொல்லிட்டீங்கன்னா எனக்கு(மட்டும்) செளகர்யமா இருக்கும்ல....

May 22, 2007 at 9:42 AM  

Attendance ma....comment appalika

May 22, 2007 at 5:02 PM  

//பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்... ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE :D
//

singam thaan ACE.

May 22, 2007 at 5:05 PM  

//பைக்ல அவ்ளோ தான்.. இன்னும் ரெண்டு சில்லறை கார்ல வாரினேன்.. அது இன்னொரு நாளைக்கு... சரி சரி.. //


Carlayuma... Neenga romba panakkaran pola....

May 22, 2007 at 5:06 PM  

//மொக்கை ஸ்டாப் பண்ணிக்கறேன்.. கல்லெல்லாம் கீழ போடுங்க ப்ளீஸ் :D:D:D//

pottachu.. pottachu...

May 22, 2007 at 5:06 PM  

கண்ணு,
நீ என்னா செய்வே,நம்ப ஊர் சாலை அப்படி, நம்ம மக்களும் அப்படி.இது சில்லரை சமாச்சாரம். ந எப்பவும் உன் சைடுதான்.என்னா சொல்லர?

May 22, 2007 at 9:04 PM  

seri indhaanga 25 paisa :-)

-porkodi

May 22, 2007 at 11:27 PM  

sillarai allina singamle ace ke sillaraiya! enna koduma singamle ace idhu :-)

-porkodi

May 22, 2007 at 11:28 PM  

எத்தனை சிலறை எத்தனை சில்லறை... நிஜமாலுமே நீங்க சிம்கம்லே (சிங்கம் இல்லே) தான்.. ஹீஹீ..

May 23, 2007 at 8:39 AM  

Summa parandhu parandhu vizhundhurukkeenga..singam dhaalae ACE:)

Ipdiyae paradhu parandhu dhaan US varaikkum poi irukeengaloo?

May 23, 2007 at 8:40 AM  

Summa parandhu parandhu vizhundhurukkeenga..singam dhaalae ACE:)

Ipdiyae paradhu parandhu dhaan US varaikkum poi irukeengaloo?

May 23, 2007 at 8:40 AM  

//0, இல்லேனா 50.. //

enna ACE....singamnu sollikittu 50 le poringa....singamna oru 100 le poga vendam....asingama illa eruku

// வண்டிக்கு வேற சம டேமேஜ்...//
repair ku neenga kasu koduthingala...illa valakam pola escape'a

May 23, 2007 at 7:58 PM  

ippo than neenga ponathu tvs 50nu parthen....antha vandi 50 than pogum....sorryba ACE...neer meiyalume 'SINGAM' than

May 23, 2007 at 8:00 PM  

ada.. Idhu epo?? solla koodadha?? enna koduma idhu Ace?? :(
seri poi padichutu varen

May 24, 2007 at 10:51 AM  

//கட் அடிச்சு கவுந்து விழுந்தோம்.. கால் கை எல்லாம் சிராய்ச்சிட்டு ரத்தக்களரி ஆயிடுச்சு.. நல்ல அடி.. நடக்கவே முடியல... //
cha.. naa illama poiteney indha kan kolla katchiya paakkaradhuku!! :(

May 24, 2007 at 11:11 AM  

//அடி படாத மாதிரியே ஆக்ட் வுட்டுட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்//
ROTFL :)

//அந்த பிட்ஸா காரனுக்கு போட்டியா நானும் பறந்தேன்.. //
ayyoo.. idhayum paaka kuduthu vaikkalaye :(

//ரெண்டு பேர் அட்வைஸ்.. " பாத்து ஓட்டனும்.. கண்ணு மண்ணு தெரியாம ஓட்டினா இப்படி தான்"னு.//
Soooper... anda rendu perum ladies eh???

//அன்னிக்கு வலினால ஒன்னும் செய்ய முடியல.. இல்லேன்னா..//
illena??

May 24, 2007 at 11:14 AM  

Aana pizza pasanga paavam thriyuma?? namakku 1 hour la delivery avalena.. innoru pizza free nu sollidaraanga.. aana actual eh anda pasanga salary la adhaa kazhichukkuvaangalaam.. pavam la.. avan enna avasarathula ponano..paavam ipdi aayiducheyy :(

May 24, 2007 at 11:16 AM  

//அதனால் என் திறமைய மட்டும் நம்பி பைக் ஓட்டனும்னு முடிவு கட்டியாச்சு...
//
so adhula irundhu.. bike eh edukkaradhey illaya..
zimba maadhiri adhum thoongitu iruka vitula??

May 24, 2007 at 11:18 AM  

//டிஸ்கி : ஹார்லி டேவிட்சன் படம்லாம் ஒரு பில்ட் அப்புக்கு தான்.. :D :D.. (ஓட்டி பாக்கனும்னு ஆசை இருக்கு.. ஆனா இளிச்சவாயன் எவனும் சிக்க மாட்றான். :D :D)
//
idhu ennanu puriyala :(

May 24, 2007 at 11:19 AM  

Pidinga round eh iruvadhu...
soo enna thareenga???
[enaku oru thadava pulsar ootanumnu aasai :)]

May 24, 2007 at 11:20 AM  

@padmapriya
avaru ivalavu kadha sonathukku apuramum
//[enaku oru thadava pulsar ootanumnu aasai :)]
//
ipdi kaetukkureengalae unga mana dhairiyatha paaratama irukkavae mudiyala padma...

May 24, 2007 at 6:14 PM  

@sumathi:

பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா, நீங்களும் அதுல சில்லறைய போட்டுடுவீங்களா?? :D நிறைய போடுங்க.. நிச்சயமா தரேன்...

@mgnithi

//singam thaan ACE.//

:D.. அது..

//Carlayuma... Neenga romba panakkaran pola....//

ஹி ஹி.. :D.. இதுக்கு தான் உண்மைய வெளிய சொல்றது இல்ல :D

//pottachu.. pottachu... //

ரொம்ப டாங்கீஸ் :D:D

May 24, 2007 at 7:57 PM  

@ulagam sutrum valibi:

ஆமாங்க.. அதுவும் கரெக்ட் தான்.. :D :D நமக்கு ஆதரவு குடுத்ததுக்கு நன்றிங்க.. :D


@porkedi

//sillarai allina singamle ace ke sillaraiya! enna koduma singamle ace idhu :-)//

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. இவ்ளோ சில்லறை அள்ளி இருக்கேன்.. எனக்கே 25 பைசா கொடுத்துட்டு, கொடுமைன்னு வேற சொல்றீங்க..

என்னங்க பைசாலாம் கொடுத்துகிட்டு.. டாலர், செண்ட்ஸ்னு கொடுங்க..

May 24, 2007 at 8:00 PM  

@myfriend
//எத்தனை சிலறை எத்தனை சில்லறை... நிஜமாலுமே நீங்க சிம்கம்லே //

சிங்கத்த அசிங்க படுட்தறதே வேலையா போச்சு..:((

சில்லறை வாரிய சிங்கம்லே ace.. :D :D

@raji
//Summa parandhu parandhu vizhundhurukkeenga..singam dhaalae ACE:)//

அப்பா, உங்களுக்காவது தெரியுதே.. அப்படியே myfriend கிட்ட சொல்லுங்க.. :D

//Ipdiyae paradhu parandhu dhaan US varaikkum poi irukeengaloo? //

வர முயற்சி பண்ணேன்.. work out ஆகல.. :D

2 கமெண்ட்க்கு 2 நன்றி..:D

May 24, 2007 at 8:03 PM  

@wyvrenn:
//repair ku neenga kasu koduthingala...illa valakam pola escape'a //

என்ன பேச்சு பேசறீங்க.. காசு குடுத்து நட்ப கேவலபடுத்த விரும்பல.. ஹி ஹி...

//ippo than neenga ponathu tvs 50nu parthen....antha vandi 50 than pogum.//

அதே அதே.. :D..

May 24, 2007 at 8:05 PM  

@priya:
//cha.. naa illama poiteney indha kan kolla katchiya paakkaradhuku!! :( //

சை எதிரிய தேடி எங்கேயும் போக வேண்டாம்.. இங்கேயே சதி கார மக்கள் இருக்காங்க.. :(((

//Soooper... anda rendu perum ladies eh???//

இல்ல, 2 பேரும், ஆண் மக்கள் தான்.. மழைல நனைய கூடாதுன்னு கடை ஓரம் ஒதுங்கி இருந்த கூட்டத்துல 2 பேர்.. :(((

//illena?? //

வேலைய பாத்துட்டு போங்கையான்னு சொல்லியிருப்பேன்.. :D :D

//pavam la.. avan enna avasarathula ponano..paavam ipdi aayiducheyy :( //

பிட்ஸா காரன் விழுந்தா பாவம், நான் விழுந்தா கண் கொள்ளா காட்சி.. ஹ்ம்.. நல்ல உலகம்டா சாமி..

//so adhula irundhu.. bike eh edukkaradhey illaya..
zimba maadhiri adhum thoongitu iruka vitula?? //

இதுக்கே அசந்துட்டா எப்படி.. அதெல்லாம் இல்ல..

//idhu ennanu puriyala :( //

அங்க இரூக்க பைக் படம்லாம் harley davidson company பைக்.. இங்கே ரொம்ப பிரபலம்.. :D

//enaku oru thadava pulsar ootanumnu aasai //

எப்பே எந்த ரூட்ல ஓட்ட போறீங்கன்னு சொல்லுங்க.. நான் ரோட்டுக்கு வரவே மாட்டேன்.. :D

May 24, 2007 at 8:13 PM  

@raji
//ipdi kaetukkureengalae unga mana dhairiyatha paaratama irukkavae mudiyala padma... //

மன தைரியம், ரோட்டுல போற மத்தவங்களுக்கு தான் இருக்கனும் :D :D:

May 24, 2007 at 8:13 PM  

ஏகப்பட்ட சில்லறைகளை அள்ளியிருக்கீங்க போல! ஒவ்வொரு சில்லறையும் ROTFL :)

May 24, 2007 at 8:21 PM  

hmnn..inga car vechirukeengalaa???

May 25, 2007 at 10:46 AM  

eththana sillarai?? vaazkai fullaa vaangitte irupeenga pola ;))

May 25, 2007 at 11:56 AM  

athellaam sari.. singamle nu pera vatchikittu puli sorry siruththai vaala pottirukeenga????

May 25, 2007 at 11:57 AM  

//நம்ம G3 சில்லறை வாங்கினத பத்தி கோப்ஸ் சொன்னது ஞாபகம் வந்துது.. சில்லறை வாங்கியத கூட போஸ்டரது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே, நமக்கும் நிறையா அனுபவம் இருக்கேன்னு யோசிச்சேன்///

oh, neeenga pudhai'ala sollureeengala... ok ok

May 26, 2007 at 1:33 AM  

// ஒரு மொக்கய போட்டுடலாம்னு செயற்குழு பொதுகுழு எல்லாம் கூட்டி முடிவெடுத்தேன்.. :D
//

yaaru andha korean, chinese ellam andha kootathula undaa?

May 26, 2007 at 1:35 AM  

//ஒழுங்கா ஓட்ட விட்டுருந்தா இன்னேரம் ஒரு பைக் ரேஸ் வீரனா, /

PORAMAI pudicha pasanga..... loosla vidunga thala...
(aama, ungalukku cycle otta varuma )

May 26, 2007 at 1:57 AM  

//அந்த நல்ல போலிஸ் மாமா, என்னப்பா அடி பட்டுச்சா?? ஆஸ்பத்திரிக்கு போகலாமான்னு ஆட்டோலாம் பிடிச்சிட்டார்.. நம்ம என்னிக்கு வலிச்சுதுன்னு சொல்லியிருக்கோம்.. அதனால, அடி படாத மாதிரியே ஆக்ட் வுட்டுட்டு சிரிச்சிகிட்டே வந்துட்டேன்..//

nalla yosichi solllunga... andha police kaar mani kattai idikum bodhu, avaru pakkathula vera yaaru irundha?

May 26, 2007 at 2:07 AM  

//அப்புறம் என்ன, அந்த பிட்ஸா காரனுக்கு போட்டியா நானும் பறந்தேன்.. ஒரே வித்தியாசம்.. அவன் ஸ்கூட்டரோட பறந்தான்.. நான் பைக்க விட்டுட்டு பறந்தேன்.. பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்... ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE :D
//

ROTFL....

pizza delivery seira avaney appadina, avan kodukira pizza va saaapdra namakku evlo irukum??????

May 26, 2007 at 2:08 AM  

//... நல்ல வேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தப்பிச்சேன்.. (யாருப்பா நாங்க மாட்டிக்கிட்டோம்னு சொல்றது.... )
//

ennanga ivlo comedy a sollureeenga...

May 26, 2007 at 2:32 AM  

//ஹார்லி டேவிட்சன் படம்லாம் ஒரு பில்ட் அப்புக்கு தான்.. :D :D.. (ஓட்டி பாக்கனும்னு ஆசை இருக்கு.. ஆனா இளிச்சவாயன் எவனும் சிக்க மாட்றான். :D :D)
//

he he he......andha ooorla evanumey illai a? n

May 26, 2007 at 2:33 AM  

@செந்தில்
//ஒவ்வொரு சில்லறையும் ROTFL :) //

ஆகா.. நம்ம சில்லறை உங்களுக்கு சிரிப்பா இருக்கா.. இருக்கும்யா இருக்கும்.. :D :D

நீங்களும் எங்கே போனாலும் ஹெல்மெட் போட்டுகிட்டு போங்க.. :D

@ப்ரியா
//hmnn..inga car vechirukeengalaa??? //

இருக்கு.. 10 வயசாச்சு அதுக்கு..:D

@Z
//vaazkai fullaa vaangitte irupeenga pola ;)) //

ஆகா.. ஆசைபடறதே சரி இல்லையே..:D :D..

//singamle nu pera vatchikittu puli sorry siruththai vaala pottirukeenga????
//
அடடா.. தப்பா புரிஞ்சிகிட்டீங்க..சிறுத்தை பக்கத்துல கால் தெரியுதே.. யார் கால்.. நம்மளுது தான் :D

May 26, 2007 at 6:11 AM  

@Gops:
//yaaru andha korean, chinese ellam andha kootathula undaa? //
இல்லீங்க.. அவங்கள எல்லாம் குழுவுல சேக்கறது இல்ல.. :D

//PORAMAI pudicha pasanga..... loosla vidunga thala...//

அதான் விட்டாச்சே..

(aama, ungalukku cycle otta varuma )

என்ன இப்படி கேட்டுட்டீங்க.. அதுல வாரன சில்லறைய, எழுத இடம் இருக்காது..

//avaru pakkathula vera yaaru irundha? //

அவரு தொப்பை மறைச்சிடுச்சு.. :D

//ennanga ivlo comedy a sollureeenga... //

இது காமெடியா?? :(( ட்ராஜெடிங்க..

//he he he......andha ooorla evanumey illai a? n //

மாட்ட மாட்றானுங்க..

May 26, 2007 at 6:16 AM  

சுவாரஸ்யமா இருந்தது தல! :-)
கலக்குங்க!! :-)

May 26, 2007 at 7:14 AM  

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

May 26, 2007 at 5:45 PM  

//அங்க இரூக்க பைக் படம்லாம் harley davidson company பைக்.. இங்கே ரொம்ப பிரபலம்.. :D//

ohh...

//எப்பே எந்த ரூட்ல ஓட்ட போறீங்கன்னு சொல்லுங்க.. நான் ரோட்டுக்கு வரவே மாட்டேன்.. :D//

:(

May 26, 2007 at 6:29 PM  

@Gops:
//neenga nallavara kettavara?//

idhellam oru kelvi eh??
adhum yaara paathu..

@Ace,
Innum ungala pathi sariya purinjukala gops..adhaan ipdi oru kelvi ya ketutaar.. paavam vitudunga

May 28, 2007 at 10:47 AM  

//2 கமெண்ட்க்கு 2 நன்றி..:D
//

Nandri vaendaam..Chocolate vaenum .....

May 28, 2007 at 11:42 AM  

கும்மி முடிஞ்ச்சிடுச்சா..:)

May 30, 2007 at 8:56 PM  

voode kattalaam pola irukku unga sillarai ellam vachi :)

May 31, 2007 at 1:49 AM  

naan indha long weekend sillarai-ya oru maama kitta maatinen :)

May 31, 2007 at 1:49 AM  

Label potta maathiri mokkaiyaa irukkumnu paaththa, nalla interesting a irukku ACE

May 31, 2007 at 10:48 PM  

ivlo chillaraiya vaangi irukka ace.. cingamla nee :)

May 31, 2007 at 10:52 PM  

ennanga sir.. koncha naala silentaa keerenga!!

June 5, 2007 at 11:13 AM  

Oru vazhiya padichuten saar!! Installment'la padichalum swarasyama than irunthathu unga sillarailam.... neengalavathu parava illai innoruthana nambi than sillara vaangineenga... sila peru speed breaker naala lam sillarai vaanguraanga :D

Seri seri... naan padichuten seekiram adutha post podunga :)

June 6, 2007 at 3:06 AM  

////மொக்கை ஸ்டாப் பண்ணிக்கறேன்.. கல்லெல்லாம் கீழ போடுங்க ப்ளீஸ் :D:D:D//

sure sure...thoo varen

June 6, 2007 at 12:23 PM  

// லூஸு பய.. ..ஒழுங்கா ஓட்ட விட்டுருந்தா இன்னேரம் ஒரு பைக் ரேஸ் வீரனா, அஜித் மாதிரி வர வேண்டிய ஆளு //

avaru loosa?sir ungalai innum bike otha vithu irunthaal...avar bike enna agi irrukum...hehe

June 6, 2007 at 12:25 PM  

//.. நான் பைக்க விட்டுட்டு பறந்தேன்.. பறந்து தரையில நெஞ்சு பட லேண்ட் ஆனேன்//

action movie paartha effect

June 6, 2007 at 12:29 PM  

funny post.nice :-))

June 6, 2007 at 12:37 PM  

Next post please :)

June 8, 2007 at 9:59 AM  

Enna koduma singamulae Ace idhu...
Summa comment :-)

June 13, 2007 at 8:53 AM  

naaaaaa..next part up :D

June 15, 2007 at 2:11 PM  

vaarina chilaraiyelam setha peria amt therum pola :D :D rounda 60

June 15, 2007 at 4:45 PM  

//ஆனாலும் மீசைல மண்ணு ஒட்டல.. சிங்கம்லே ACE//

ROTFL :) nejamaalume sirichutten. sorry pa!

on a serious note, take care! ada, nambala nambi ethanai figures irukku!
Disci: inga namala!nu solli iruppathu ACE unnai thaan!

Naan avan illai! :p

June 18, 2007 at 3:21 PM  

கலக்கல் போஸ்ட்

October 12, 2007 at 12:33 PM  

government travel requlastion gsa http://kumus.eu/paving/pattern-imprinted-concrete-paving-lancashire-uk sensuous travel [url=http://kumus.eu/moving/moving-truck-rental-in-columbus-ohio]moving truck rental in columbus ohio[/url]
punta cana travel owners http://kumus.eu/sunrooms/four-season-sunrooms kids travel [url=http://kumus.eu/sunroom/designing-a-sunroom]minute travel deals mexico[/url]
oahu travel http://kumus.eu/siding/how-to-apply-vinyl-siding platinum travel virginia [url=http://kumus.eu/home/best-home-manicure-nail-treatment-growth]best home manicure nail treatment growth[/url]
travel antennas http://kumus.eu/home/staging-home-to-sell travel nurse hawaii [url=http://kumus.eu/sunroom/patio-sunroom-enclosure]occidental hotel and resorts travel agent bonus[/url]
electron travel direction http://kumus.eu/siding/reusing-cedar-siding travel working adventure gap year college work ove [url=http://kumus.eu/floor/self-propelled-floor-scrubbers]self propelled floor scrubbers[/url]
ferry boat travel guide http://kumus.eu/bathroom/vanities-bathroom raa travel [url=http://kumus.eu/landscaping/areawide-landscaping-oh]directory of travel clubs[/url]

October 27, 2010 at 5:43 PM  

preemier travel lodge http://wowa.eu/bankruptcy_clean-credit-after-bankruptcy the travel channel [url=http://wowa.eu/advance_personal-cash-advance-paycheck-advance-payday-loans-cash]personal cash advance paycheck advance payday loans cash[/url]
itaska travel trailers http://wowa.eu/visa_visa-requirements-indonesia travel to budapest [url=http://wowa.eu/finance_air-france-sales-finance-2007]travel agent liverpool[/url]
american express travel starling drive richmond virginia http://wowa.eu/bank_north-fork-bank-in-bayshore adventure travel trips [url=http://wowa.eu/visa_united-states-of-america-visa-renewal]united states of america visa renewal[/url]
travel agencies in voorhees new jersey http://wowa.eu/bankruptcy_florida-bankruptcy-court-middle-district medications needed for travel to cambodia and vietnam [url=http://wowa.eu/finance_best-universities-for-master-in-finance]travel inn near consett for 28 29 sept[/url]
travel agent new york http://wowa.eu/advance_advance-global-communications gatwick travel medicine [url=http://wowa.eu/business_zero-down-business-loan]zero down business loan[/url]
cheap insurance personal travel index php http://wowa.eu/bank_bank-of-ald discount travel trailers [url=http://wowa.eu/bank_comerical-bank-on-line]kennesaw travel[/url]

October 29, 2010 at 6:30 AM  

சென்னையில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒரு தெரு ..ரிட்சி ஸ்ட்ரீட் ! குறைந்த விலை என்பதோடு, இங்கு கிடைக்காத எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களே இல்லை என்பதால் மிக பிரபலம்! இந்த தெருவிற்கென தனி இணைய தளம் இப்போது வந்துள்ளது.

http://www.ritchiestreet.co.in/ என்கிற இந்த தளத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் பெயரும் அங்கு கிடைக்கும் பொருள்கள் அவற்றின் விலை என்ன என்பதும் அறிய முடிகிறது. நீங்களும் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வீர்கள் என நம்புகிறேன்

August 30, 2016 at 11:42 AM  

Post a Comment

<< Home