புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, October 16, 2007

தடங்கலுக்கு வருந்துகிறோம்...

கொடுமை கொடுமைன்னு இந்தியாவுக்கு வந்தா, இங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். நம்ம நேரம் இப்படி தான் இருக்கு. வந்து 3 மாசத்துக்கு மேல ஆச்சே.. சரி ஒரு பதிவை போட்டு, அட்டெண்டன்ஸ் போடுவோம்னு பாத்தா, யு.எஸ்-ல இருந்து கிளம்பினதுல இருந்தே பிரச்சினை தான்.

L.A-ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கவுண்டர கண்டுபிடிக்கறதே பெரிய பாடா போச்சு.. சென்னை ஏர்போர்டே தேவலாம். பஸ்ல போ, இந்த பில்டிங் போ, அங்க போ, லிப்ட்ல போ, லெப்ட்ல போன்னு ஒரு வழியா கண்டு பிடிச்சு எல்லா ஃபார்மாலிட்டீஸையும் முடிச்சேன்.

கரெக்டா விமானத்துல ஏறப்போகும் போது, உங்க கைப்பெட்டி பெருசா இருக்கு, எங்க கிட்ட குடுங்க, சிங்கப்பூர் வந்து வாங்கிக்குங்கன்னு கேட்ல ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன். சிங்கப்பூர் வந்தா பொட்டிய காணோம்.. அங்க இருந்த அக்கா கிட்ட கேட்டா, பொட்டியா என்ன பொட்டின்னு கலாய்க்குது. டேய், அண்ணன் யாரு தெரியும் இல்லன்னு சவுண்ட் விட்டப்புறம் பொட்டிய செக் இன் பண்ணிட்டோம்னு அசால்டா சொல்றாங்க. அடப்பாவிகளான்னு திட்டிகிட்டே வெளியே போய் (பாஸ்போர்ட்லாம் சரண்டர் செஞ்சப்புறம்) பொட்டிய பாத்தா உள்ள இருந்த கேமராவையும், கேம்கார்டரையும் காணோம்.

கேமரா வாங்கி 10 நாள் கூட ஆகல, நம்ம CVR கிட்ட ஆலோசனையெல்லாம் கேட்டு வாங்கினேன். அவர் சொல்லிகுடுத்த பாடத்தை எல்லாம் டெஸ்ட் பண்ணி கொடுமைபடுத்தலாம்னு வாங்கின கேமராவை சுட்டுட்டானுங்க.. படுபாவி பசங்க :( (இந்த கொடுமைய தடுக்க CVR செஞ்ச சதியான்னு தெரியல) இதுல கேமரா போனதைவிட, அதுல எடுத்த வீடியோ / படம் எல்லாம் போச்சு.. சோகத்தை வார்த்தையில வடிக்க முடியல.. கேமரா தொலைஞ்சதுக்கு துக்கம் கொண்டாடறதுலயே 1 மாசம் போயிடுச்சு.

சரி இதுக்கு மேலையும் காலம் கடத்தாம நம்ம கணிணி பொட்டிய ரெடி பண்ணி, நம்ம இணையுலக சகாக்களை எல்லாம் சந்திப்போம்னு, ரிட்சி தெருவுக்கு போய் மதர் போர்ட், ப்ராஸசர், RAM, எல்லாம் வாங்கிட்டு வந்து ஒரு வழியா கணிணியை ரெடி பண்றதுக்கே 1 மாசம் ஆயிடுச்சு. இது பத்தாதுன்னு இணைய இணைப்பு குடுங்கடான்னா, இதோ வரேன், அதோ வரேன்னு, 10 நாள் ஏர்டெல்ல இழுத்தடிச்சுட்டானுங்க.. ஏர்டெல் சர்வீஸ் வாங்கறதுக்குள்ள தொண்டை தண்ணி வத்தி போச்சு.. 6 தடவை போன் பண்ணப்புறம் தான் கனெக்ஷன் குடுத்தாங்க.

அப்பாடா, எல்லாம் செட் ஆயிடுச்சு, இந்த வாரம் பதிவ போட்டுடுவோம்னு நெனைச்சேன், நெனைச்சது தான் தாமதம், எவன் கண்ணு பட்டுதோ தெரியல, கணிணில USB ஸ்லாட் எதுவும் வேலை செய்யல, என் கிட்ட இருக்கற மவுஸ், கீபோர்ட் ரெண்டுமே USB-ல தான் இணைக்கனும். இது என்னடா மதுரைக்கு வந்த சோதனைனு நானும் எனக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் காட்டியும் என் கணிணி அசரலை..

நானும் மனம் தளராத விக்கிரமாதித்தனா, கடன் வாங்கியாவது ஒரு பதிவை போடனும்னு, ஒரு ஃபிரண்ட் கிட்டேயிருந்து PS2 கீபோர்ட், மவுஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன். நேரம் நல்லா இல்லைனா, ஒட்டகத்துல மேல உக்காந்தாலும் நாய் கடிக்கும்னு சும்மாவா சொன்னாங்க. சிரைக்க போனவன் பொட்டிய மறந்த மாதிரி, கீபோர்ட் வாங்க போன நான் பை எதுவும் எடுத்துக்காம போயிட்டேன். மொபெட்ல வரும் போது, ஒரு பள்ளத்துல இறங்கி ஏறினப்போ சைட் பொட்டியில இருந்த கீபோர்ட் கீழே விழுந்துடுச்சு. எவனாவது அது மேல வண்டிய ஏத்திட போறானுங்கன்னு அவசர அவசரமா ஓடி ஏற்கனவே அடிபட்ட கால்ல இன்னும் நல்லா அடிபட, கீபோர்ட மட்டும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

இனிமே சந்தோஷமா பதிவ போட்டு டார்ச்சர் பண்ண்லாம்னு பாத்தா, கீபோர்ட்ல இருந்து ஸ்பேஸ் பாரும், Atl கீயையும் காணோம். :(.. கீழே விழுந்த வேகத்துல எங்கேயோ கழண்டு விழுந்துடுச்சு.. :(

அட போங்கப்பா, ஒரே ஒரு பதிவை போடறதுக்கு இத்தனை தடங்கலா?? என்ன கொடுமை சார் இது.. :(

Labels: ,

posted by ACE !! at 4:55 PM

42 Comments:

நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நன்றாக இருக்கட்டும்...

இனிதே வரவேற்கிறோம்... அடிச்சு ஆடுங்க...

October 16, 2007 at 9:23 PM  

/இங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்/
உங்களுக்கேவா என்ன கொடும ஏஸ் இது? :)

October 16, 2007 at 9:40 PM  

/படுபாவி பசங்க :( (இந்த கொடுமைய தடுக்க CVR செஞ்ச சதியான்னு தெரியல)/
யார் செஞ்சதா இருந்தா என்ன நாங்க தப்பிச்சோம் ;)

October 16, 2007 at 9:41 PM  

/நானும் மனம் தளராத விக்கிரமாதித்தனா, கடன் வாங்கியாவது ஒரு பதிவை போடனும்னு,/
என்னே ஒரு கடமையுணர்ச்சி!!!

October 16, 2007 at 9:42 PM  

/ஒரே ஒரு பதிவை போடறதுக்கு இத்தனை தடங்கலா?? என்ன கொடுமை சார் இது.. :(/
இதுக்கெல்லாம் கவலப்படாதீங்க தொடர்ந்து முயற்சி செஞ்சு கடன் வாங்கியாவது மொக்க சீசீ போஸ்ட் போடுங்க ;)

October 16, 2007 at 9:44 PM  

சிங்கம் கிளம்பிடுச்சே....

October 16, 2007 at 11:46 PM  

//சிங்கப்பூர் வந்து வாங்கிக்குங்கன்னு கேட்ல ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன்.//

//பொட்டிய பாத்தா உள்ள இருந்த கேமராவையும், கேம்கார்டரையும் காணோம்.//

இப்படி பிகர பார்த்து ஏமாந்துடீங்களே!!

October 16, 2007 at 11:48 PM  

உங்களுக்கே கொடுமையா...
எது எப்படியோ.. நல்லபடியா ரீ-எண்டரி குடுத்துருக்கீங்க...தொடரட்டும்..

இருந்தாலும் நீங்க அந்த ஸ்பேஸ் பார்,Alt கீ-க்கு எல்லாமா லிங்க் குடுப்பீங்க...!!??
என்ன கொடுமை இது ரீ-எண்டரி குடுத்த சிங்கம்லே ஏஸ்!

October 16, 2007 at 11:54 PM  

கீதா மேடத்தை விட அதிகமா சிரமபட்டு இருக்க போல பதிவு போட! :p

October 17, 2007 at 10:18 AM  

ஆஹா என்னே உன் கடமையுணர்ச்சி. சரி, விட்டு தள்ளு, இனி பதிவா போட்டு தள்ளு! :))

October 17, 2007 at 10:19 AM  

Evlo break eduthu late aa vandhaalum Full form la irukeenga nu post aa padichaale theriyudhu!!!

October 17, 2007 at 10:40 AM  

////சிங்கப்பூர் வந்து வாங்கிக்குங்கன்னு கேட்ல ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன்.//

//பொட்டிய பாத்தா உள்ள இருந்த கேமராவையும், கேம்கார்டரையும் காணோம்.//

இப்படி பிகர பார்த்து ஏமாந்துடீங்களே!! //
Repeattu!!

and thanks Veda, naa solla nenaichadhu ellam solliteenga :D

October 17, 2007 at 10:41 AM  

ஹாய் ஏஸ்,

//ஒரு ஃபிகர் சொல்லுச்சேன்னு நம்பி பொட்டிய குடுத்தேன்.//

ஹா ஹா ஹா... பிகர் கேட்ட உடனே யோசனையே இல்லாம தாராளமா குடுத்துட்டீங்களே...வாழ்க..வாழ்க..

எனிவே, அங்க இங்க சுத்தி பத்திரமா நீங்க பலவித சோதனைகளுக்கு அப்பறமும் திரும்பி வந்ததுக்கு ஒரு ஜே...

October 17, 2007 at 11:52 AM  

ஹாய் ,

ஏர்டெல்லயாவது 10 நாள் தான் ஆச்சு. அதே BSNL பக்கம் போனீங்கன்னா தெரியும், மாசக் கணக்குல காக்க வைப்பானுங்க..

October 17, 2007 at 11:54 AM  

ஹாய்,

//என்ன கொடுமை சார் இது..//

அட கொடுமைக்கே கொடுமையா?

October 17, 2007 at 11:56 AM  

ஹாய்,

//இருந்தாலும் நீங்க அந்த ஸ்பேஸ் பார்,Alt கீ-க்கு எல்லாமா லிங்க் குடுப்பீங்க...!!??
என்ன கொடுமை இது ரீ-எண்டரி குடுத்த சிங்கம்லே ஏஸ்!//

ரிப்பீட்டேய்..

October 17, 2007 at 11:57 AM  

ivalo thadangalai thaandi post panniteenga.. neenga rommmmmba nallavaru...

October 17, 2007 at 12:25 PM  

// நேரம் நல்லா இல்லைனா, ஒட்டகத்துல மேல உக்காந்தாலும் நாய் கடிக்கும்னு சும்மாவா சொன்னாங்க//

R.O.T.F.L

October 17, 2007 at 12:26 PM  

pataya kilapiyache re-entry kuduthu.. sogama irunthuthu ungaluku.. konjam siripa irunthuchu engluku

October 17, 2007 at 2:41 PM  

aduku thaan blog union makkaluku ellam edavathu eduthutu varanamnu solarathu..ada vitutu ungaluku mathram eduthutu vantha ippadi thaan kanama pogum

October 17, 2007 at 2:42 PM  

//நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும்.. இனி நடப்பவை நன்றாக இருக்கட்டும்...

இனிதே வரவேற்கிறோம்... அடிச்சு ஆடுங்க...

//

repeatuu...

October 17, 2007 at 3:00 PM  

ivalavu thadangalukku pinbum unga pathivu poadum aarvathai naan paaratugiraen...(ellar kai thatinadhu poadhum pa)

October 17, 2007 at 3:00 PM  

as usual ultimate ROFL post!!!! :-D

October 18, 2007 at 6:34 AM  

Hello ACE,

first time being here.. have seen ur name in many other posts.. but today thru Sumathi, just a peep!

நெறையப் பேரு உங்களோட நொந்த புண்ல .. ச்சீ.. வெந்த புண்ல வேல் பாய்ச்சினதால நீங்க பாவம் நானும் அந்த களேபரப்பட்ட மனசுல கபடி ஆட விரும்பலைங்க.

நீங்க தொலைச்ச பொருட்களுக்காகவும் அதுனால நீங்க அடைஞ்ச மனச்சங்கடங்களுக்காகவும் என் வருத்தத்தையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Welcome back to India!

பிறிதொரு நல்ல தமாஷான பதிவில் ஜோராக சந்திப்போம்.

நன்றி.

October 18, 2007 at 11:51 PM  

நாகை சிவா - மிக்க நன்றி

வேதா -// யார் செஞ்சதா இருந்தா என்ன நாங்க தப்பிச்சோம் ;)
//

அவ்வளவு சீக்கிரமா தப்பிக்க முடியாது.. :D :D

///இதுக்கெல்லாம் கவலப்படாதீங்க தொடர்ந்து முயற்சி செஞ்சு கடன் வாங்கியாவது மொக்க சீசீ போஸ்ட் போடுங்க ;)
//

இதுக்கெல்லாம் அசந்துடுவமா?? சான்ஸே இல்ல.. :D

K4K
//இப்படி பிகர பார்த்து ஏமாந்துடீங்களே!! //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((( என்ன பண்றது.. விதி வலிது..

//இருந்தாலும் நீங்க அந்த ஸ்பேஸ் பார்,Alt கீ-க்கு எல்லாமா லிங்க் குடுப்பீங்க...!!??
//

ஹி ஹி.. :D சும்மா ஒரு பில்ட் அப் தான்.. :D


அம்பி:

வாங்க அம்பி.. ஆமா, ரொம்பவே கொடுமை தான்..


பத்மப்ரியா:

//Evlo break eduthu late aa vandhaalum Full form la irukeenga nu post aa padichaale theriyudhu!!!//

கல்யாண பிஸியிலும் கமெண்ட் போட்ட உங்க கடமை உணர்ச்சிய நினைச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்...

//and thanks Veda, naa solla nenaichadhu ellam solliteenga :D
//

ரொம்ப சந்தோஷபடாதீங்க.. கொடுமை நிச்சயமா உண்டு..

October 21, 2007 at 1:39 PM  

சுமதி :

நன்றி..

//அதே BSNL பக்கம் போனீங்கன்னா தெரியும், மாசக் கணக்குல காக்க வைப்பானுங்க..
//

ஆமா 3 மாசம் சொன்னாங்க.. :(( அதனால தான ஏர்டெல் வாங்கினேன்.

mgnithi:
//ivalo thadangalai thaandi post panniteenga.. neenga rommmmmba nallavaru...//

அவ்வ்வ்வ்... உங்களுக்காச்சும் தெரியுதே..

DD:

//sogama irunthuthu ungaluku.. konjam siripa irunthuchu engluku//

ஏன் இருக்காது.

//aduku thaan blog union makkaluku ellam edavathu eduthutu varanamnu solarathu..//

எடுத்துட்டு வந்தது தான் பொட்டில இருந்து போயிடுச்சே..


ராஜி

மிக்க நன்றி..

CVR:

மிக்க நன்றி தல..

Raghs | இராகவன்:

//first time being here.. have seen ur name in many other posts.. but today thru Sumathi, just a peep!
//

அதுக்கென்ன தாராளமா வாங்க.. :D :Dவ்ருக வருக!!

//நெறையப் பேரு உங்களோட நொந்த புண்ல .. ச்சீ.. வெந்த புண்ல வேல் பாய்ச்சினதால//

இதெல்லாம் வாழ்க்கையில சகஜம்.

//Welcome back to India!

பிறிதொரு நல்ல தமாஷான பதிவில் ஜோராக சந்திப்போம்//

மிக்க நன்றி.. நிச்சயமா சந்திப்போம்.. :D :D

October 21, 2007 at 1:49 PM  

ACE annae..neenga ezhuthina style la nalla sirikanum nu than thonuchu.... aana ithu ellame ungalukku nadantha anubavam nu ninaikkarappa sirippu varaliyeeeeeee... (imagine sivaji here :D)

aduthavangala sooper ah ottara thiramaiyai than parthirukken unga kitta..aana unga kashtathaiye ippadi nakkal adichukarathu :) enna solrathu

sari i second nagai siva... nadanthavai nadanthavaiyaga irukkatum.. nadappavai nallavaiyaga irukkatum :)

October 21, 2007 at 6:31 PM  

summaa sollak koodaathu nallaavey pulamburiinga...palmbalilthaan aththanai unmaikalum puttu puttu varum....keep on pulambaling....
---appadiye en pulambalaiyum vanthu paarungaleyn
valluvam goma

October 21, 2007 at 11:36 PM  

I liked this Post

October 25, 2007 at 1:48 PM  

adapaavikala.... ACEkke intha kodumaiyaa??

Welcome back (pathivu pakkame varaathavanlaam solraanennu nenakkureengala?? ithellaam kandukaatheenga :))))

November 1, 2007 at 11:16 PM  

கொத்தனார் குயிஜைல ஜெய்ச்சதுக்கு வாழ்த்துக்கள் சாமியோவ்.. :)

November 5, 2007 at 11:01 AM  

மாமு நீங்க பாண்டிச்சேரியா.. தோழி சொன்னாங்க...
ரொம்ப சந்தோஷங்க..(அட ஒரே ஊர்தானுங்க..)
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

November 8, 2007 at 12:22 AM  

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

November 11, 2007 at 2:03 AM  

Hi! My name is Project 71. Weird name I know, but my masters are weird too. My masters apologize for such an out-of-context comment and they know how painful such spamlike comments are. But, say masters, how else are we to present something good to the world. By that they mean me :D. Kindly see what I am about. Won't take you more than 22s to read... http://www.project71.com/readme Enjoyy!

November 17, 2007 at 9:19 AM  

well, aprom claim pannengala..cam corder ellam??

romba sorry.. enna kodumai saravanan idhu :)-

November 20, 2007 at 9:35 PM  

Oi, achei seu blog pelo google está bem interessante gostei desse post. Gostaria de falar sobre o CresceNet. O CresceNet é um provedor de internet discada que remunera seus usuários pelo tempo conectado. Exatamente isso que você leu, estão pagando para você conectar. O provedor paga 20 centavos por hora de conexão discada com ligação local para mais de 2100 cidades do Brasil. O CresceNet tem um acelerador de conexão, que deixa sua conexão até 10 vezes mais rápida. Quem utiliza banda larga pode lucrar também, basta se cadastrar no CresceNet e quando for dormir conectar por discada, é possível pagar a ADSL só com o dinheiro da discada. Nos horários de minuto único o gasto com telefone é mínimo e a remuneração do CresceNet generosa. Se você quiser linkar o Cresce.Net(www.provedorcrescenet.com) no seu blog eu ficaria agradecido, até mais e sucesso. If is possible add the CresceNet(www.provedorcrescenet.com) in your blogroll, I thank. Good bye friend.

December 5, 2007 at 4:59 PM  

Hi, this is not so related to your page, but it is the site you asked me 1 month ago about the abs diet. I tried it, worked well. Well here is the site

December 27, 2007 at 12:14 PM  

Hello I just entered before I have to leave to the airport, it's been very nice to meet you, if you want here is the site I told you about where I type some stuff and make good money (I work from home): here it is

January 2, 2008 at 4:38 AM  

vida muyarchikku paaratukkal...eppadiyo blog pottachu...great.

January 9, 2008 at 11:15 AM  

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Notebook, I hope you enjoy. The address is http://notebooks-brasil.blogspot.com. A hug.

March 16, 2008 at 10:42 PM  

konjam lateaa padikkireno unga posta? ;-)

enna ellam naabagam irukka thala?

April 21, 2008 at 11:20 PM  

claim panningala illaya?
sari camera ponadhu pogattum... andha figure-a edutha photo irundurunda kooda aarudhala irundhurkum !!!! :)

April 21, 2008 at 11:21 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home