புலம்பல்கள் - PULAMBALGAL

Thursday, January 11, 2007

MUDAL TAMIL BLOG

ஊருக்கு போன தடவை போன் பேசிய போது எங்கப்பா வேற செமயா மூட் அவுட் பண்ணிட்டார். எப்பவும் போல சும்மா பேசிட்ருக்கும் போது தெரியாத்தனமா காண்டிராக்டரா வேலை பாக்கிறேன்னு சொன்னாலும் சொன்னேன் மானத்தை வாங்கிட்டார். "என்னடா காண்டிராக்டரா?? இங்க கூட செக்யூரிடி காண்டிராக்டர்லாம் இருக்காங்க... எதாவது கம்பெனியோட டீல் போட்டு ஆளுங்களை காண்ட்ராக்ட் அனுப்பி காசு பாக்கறாங்க.அந்த மாதிரியா?? நீ காண்ட்ராக்டரா, சொல்ற இடத்தில போய் வேலை பாக்கணும். அப்படித்தானே?? மணிகணக்குல சம்பளம் தருவான்னு சொல்ற... ஏறக்குறைய கூலி வேலை மாதிரின்னு சொல்லு", அப்படின்னுட்டார். தட்டு தடுமாறி திசை மாறாம கஷ்டப்பட்டு படிச்சிட்டு, அதை விட கஷ்டப்பட்டு இங்க வந்து குப்பை கொட்டினா கூலி வேலை பாக்கரியான்னு கிண்டல் சுண்டல் எல்லாம் பண்ணி நல்லா மண்டை காய வைக்கிறாங்க.

எல்லாம் நேரக் கொடுமைடா சாமின்னு நெனைசிக்கிட்டேன். வேற என்ன பண்றது? உண்மை கசக்க தான் செய்யுது. இதை எல்லாம் யோசிச்சு பாத்தா ஒழுங்க எங்கப்பா சொன்ன மாதிரி அவரோட மாவு மில்லயே எடுத்து நடத்தி இருக்கலாமோன்னு தோணுது. அதுவும் பெரிய ரிஸ்க் தான். எதோ வெள்ளக்காரன் ஊர்ல அவனுக்கு தெரியாதத எல்லாம் எடுத்து விட்டு எதோ காலத்தை ஓட்டறோம். நம்ம ஊரா இருந்தா டின் கட்டிடுவாங்களே. அதுவும் இல்லாம நம்மால மில்ல நடத்தறது எல்லாம் ரொம்ப கஷ்டம். எவனாவது இம்சை வந்து "உங்கப்பா காலத்துல மில் என்னமா இருந்துச்சு, இப்ப பாரு எப்படி ஆயிடுச்சுன்னு" காதுல நல்லா புகை வர வைப்பான். அதுக்கு இங்க கூலி வேலை பாக்கிறதே தேவலாம்.
posted by ACE !! at 11:27 AM 1 comments