புலம்பல்கள் - PULAMBALGAL

Tuesday, March 16, 2010

அவசரமாய் ஒரு புலம்பல்

புலம்பி நிறைய நாள் ஆச்சு. புலம்பரதுக்கா விஷயம் இல்ல. சமீபத்துல திருவாரூர் கிட்ட ஒரு இடத்துக்கு அப்பா அம்மாவோட போயிட்டு புதுவைக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தேன். மதியம் 12.30 மணி, சரியான வெயில், காலைல 5 மணிக்கு கிளம்பினது. பசி வேற வயித்த கிள்ளுது. அந்த நேரம் பாத்து தவளகுப்பம் (பாண்டி கடலூர் நடுவுல ஒரு ஊர) கிட்ட ஒருத்தன் எதிர்க்க கார்-ல இருந்து காக்கா வலிப்பு வந்த மாதிரி கைய ஆட்டிக்கிட்டே இருந்தான். இவன் எதுக்குடா என்ன திட்டரான்னு, நானும் அவன திட்டிகிட்டே(மனசுல தான்) வேகமா வந்துட்டேன். ஒரு 4 கிமி வந்து பாத்தா பெரிய ட்ராபிக் ஜாம். ஒரு சின்ன பாலதுலையோ அதுக்கு பக்கத்துலையோ லாரி ஒன்னு பிரேக் டவுன். திரும்பி வரவும் முடியல. அட நல்லவனே இதுக்கு தான் கைய ஆட்டினியாடா, நல்ல இருடான்னு சபிச்சிட்டு சந்து பொந்தெல்லாம் போய் ஒரு வழியா அந்த பாலத்து கிட்ட போயாச்சு. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா.. சரி வேணாம் விடுங்க...கரைக்டா தமிழ் படத்துல க்ளைமாக்ஸ்-ல வர போலிஸ் மாதிரியே நிஜ போலிசும் சரியான நேரத்துல வந்து, மெயின் ரோடு-அ கிளியர் பண்றன்னு எங்க சைடு-ல இருக்க வண்டியெல்லாம் நிறுத்திட்டாங்க. வாழ்க உங்க கடமை உணர்ச்சி. நல்ல இருங்கடா நல்ல இருங்க. ஒரு 5 நிமிஷம் லேட்டா வர கூடாது. நமக்கு தான் இந்த மாதிரி எல்லாம் நடக்குது. ஒரு 10 நிமிஷத்துக்கும் குறைவான தூரத்த 2 மணி நேரத்துல கவர் பண்ணோம்.

எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க மக்கா, இந்த போலிஸ் காரங்க கிட்டலாம் "தொலை தொடர்பு சாதனம்" எதுவுமே கிடையாதா? ஒரு போன் அடிச்சி முந்தின போலிஸ் ஸ்டேஷன்-ல சொல்லி, எல்லாரையும் வேற வழியா திருப்பி விட எத்தனை நேரம் ஆகும்? இத்தனைக்கும் அந்த தவளகுப்பம் போலிஸ் ஸ்டேஷன்-ல சொல்லி எல்லாரையும் திருப்பி விட்டுருந்தா கூட வேற வழியா 1 மணி நேரத்துல வந்திருக்கலாம். அத்தன வண்டியையும் 2 மணி நேரம் நிக்க வச்சு என்ன சாதிச்சாங்களோ.. இல்ல நான் தான் ரொம்ப எதிர்பாக்கிறேனோ?

Labels:

posted by ACE !! at 7:35 PM 11 comments