புலம்பல்கள் - PULAMBALGAL

Sunday, February 5, 2012

முன் ஜென்மம்...

ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி வரைக்கும் இந்த முன் ஜென்மம் பின் ஜென்மம் பத்தி எல்லாம் கவலையே பட்டதில்ல.. அப்புறம் இப்ப மட்டும் ஏன்னு கேட்டா..........

ஒரு நாள் எப்பவும் போல புலம்பிகிட்டு இருக்கும் போது நம்ப நண்பர் ஒருத்தர் பெரிய தத்துவ மேதை ரேஞ்சுக்கு "இத படி.. வாழ்க்கையில நிறைய விஷயங்கள் புரியும்"-னு சொல்லிட்டு Many Lives Many Masters by Dr Brian Wiess ஒரு புத்தகத்தை குடுத்தாரு.. Dr Brian Wiess அமெரிக்காவுல மியாமி ஆஸ்பத்திரில மனோ தத்துவ நிபுணரா இருக்கறாரு.. அதுவும் ஒரு இயக்குனரா இருக்காரு.. ஏற்கனவே எனக்கும் டாக்டருங்களுக்கும் ஆகாது.. இதெல்லாம் படிக்கனுமான்னும் யோசிச்சேன்.. விதி யார விட்டுது... வெட்டியா இருக்கறதுக்கு ஒரு இருநூறு பக்கம் தான படிச்சு தான் பாப்போமேன்னு.. ஆரம்பிச்சா மனுஷன் கிலிய கெளப்பிட்டாரு..

அவர் கிட்ட கேதரின்-னு ஒரு பொண்ணு மன அழுத்தம், தண்ணீர பாத்தா பயம், குடிக்க கூட பயம்னு வந்தாங்களாம். இவரும் அந்த பொண்ணுக்கு சின்ன வயசுல எதாவது பிரச்சனை இருந்திருக்கும் அதனால தான் இதெல்லாம்னு எல்லாருக்கும் பாக்கற வைத்தியத்த பாத்திருக்காரு. ஆனா பொண்ணு குணமடஞ்சா மாதிரி தெரியல.. சரி ஹிப்னடிசத்துல எதாவது கண்டு பிடிக்க முடியுமான்னு பாத்திருக்காரு.. சின்ன வயசுல பொண்ணு கொஞ்சம் கஷ்ட பட்டிருக்கு.. சரி அது தான்னு தலைவரும் சரியாய் போயிடும்னு சொல்லி இருக்காரு.. ஆனா ஒரு முன்னேற்றமும் இல்ல..

என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு, அந்த பொண்ணு ஹ்ய்ப்னடிக் டிரான்ஸ்-ல (hypnoic trance ) இருக்கும் போது, முடியலம்மா என்னால முடியல, அவ்வ்வ்வ், இதுக்கு மேல தாங்காது.. நீயே இந்த பிரச்சனை எப்போ-ல இருந்து இருக்குன்னு சொல்லிடுன்னு சரண்டர் ஆயிட்டாரு.. அந்த பொண்ணு நான் இப்போ பெரிய அங்கி போட்டிருக்கேன், எல்லாரும் கழுத மேல போறாங்கன்னு பழைய எகிப்து நாட்ட விவரிச்சி சொல்லி இருக்கா.. தலைவர் அரண்டு மெரண்டு போய் என்னம்மா சொல்ற-னு முழிசிருக்காரு... அப்புறம் தான் அண்ணாத்தைக்கு தெரிஞ்சிருக்கு இது முன் ஜென்மம்னு.. அப்புறம் ஆர்வ கோளாறுல அந்த பொண்ண பல ஜென்மத்த பத்தி கேட்டு தெரிஞ்சிக்கிறாரு.. அந்த பொண்ணு கிட்ட தட்ட 87 ஜென்மம் எடுத்திருக்காம். [அடேங்கப்பா.. நமக்கெல்லாம் மோட்சம்னு ஒன்னு கெடைக்கவே கெடைக்காது போலிருக்கே.. அவ்வ்வ்வ்]

அதுல ஹைலைட்டே தலைவர் அந்த பொண்ணு கிட்ட இறந்தப்புறம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிகிறது தான்.. ஒரு ஒரு ஜென்மம் முடிவிலும் ஆன்மா ஒரு அமைதியான நிலைய அடைஞ்சு மிக வெளிச்சமான ஒரு இடத்த நோக்கி போகுது.. சில சமயங்கள்ல மத்த ஆன்மாக்கள் வழி காட்டுதாம்.. அந்த வழி காட்டி ஆன்மாக்கள் தான் மாஸ்டர்ஸ்-ஆம். அந்த ஆன்மாக்கள் நெறைய புண்ணியம் செஞ்சிருக்கும் போல.. ஒவ்வொரு ஆன்மாவும் ஜென்மம் எடுக்கறதே எதாவது நன்மை செஞ்சு இல்ல கெட்டதை விட்டு மேன்மை அடயறதுக்கே.. அப்படி இந்த ஜென்மத்து வேலைய ஒழுங்க செய்யலைன்ன அடுத்த ஜென்மத்துல இந்த வேலையும் சேத்து செய்ய வேண்டியிருக்கும்.. அதனால எல்லாரும் இந்த ஜென்மத்துல என்ன செய்யணுமோ அத ஒழுங்கா செஞ்சிடுங்கன்னு சொல்றாங்க.. அந்த மாதிரி எல்லா வேலையும் செஞ்சிட்டா நம்ம கூட மாஸ்டர் ஆன்மா ஆயிடலாம்.. [விளங்கினா போலத்தான்]

ஆனா, ஒரு மேட்டர் மட்டும் இடிச்சுது.. இந்தம்மா ஹ்ய்ப்னடிக் டிரான்ஸ்-ல இருக்கும் போது ஒரு சில மாஸ்டர் ஆன்மாக்கள் வந்து அவங்க மூலமா பேசுது.. இது எப்படின்னே புரியல.. டிரான்ஸ்-ல இருக்கும் போது அவங்க உள் மனசுல என்ன இருக்கோ அத தான் சொல்ல முடியும்.. ஆனா இங்க என்னடான்னா ஒரு மீடியம் ரேஞ்சுக்கு யார் யாரோ வந்து அவங்க அவங்க விஷயத்த சொல்லிட்டு போறாங்க..

இப்படி எதையாவது சொல்லி இப்போலாம் நான் எதுக்கு பொறந்தேன்னு கேள்வி கேட்டுக்கிட்டு முடிய பிச்சிக்கறதே வேலைய போச்சு.. படு பாவிங்க மனுஷன நிம்மதியாவே இருக்க விட மாட்டாங்க போலிருக்கு.. எனக்கென்னவோ முன் ஜென்மம் எதிலேயும் நல்லவனா இருந்திருக்க வாய்ப்பே இல்லன்னு தோணுது இருந்திருந்தா இந்நேரம் இப்படியா புலம்பிகிட்டு இருக்க போறேன்..

நீங்களும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கனும்னா இந்த புத்தகத்தை வாங்கி படிங்க.. :D

Labels: ,

posted by ACE !! at 9:02 PM 4 comments